For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹனிமூன் கொண்டாட பீச்சுக்கு போறீங்களா? அப்ப இந்த விஷயங்கள செய்ய மறந்துடாதீங்க...!

|

ஹனிமூன் என்றால் கடற்கரை தான் பலருக்கு நியாபகம் வரும். கடற்கைரையில் உள்ள வீட்டில் சூரிய ஒளியில் அலைகளை தேன்நிலவை கொண்டாட யாருக்குதான் விருப்பம் இருக்காது. புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தைக் கொண்டாட கடற்கரை சரியான இடமாக இருக்கிறது. எனவே மணலில் உங்கள் நேரத்தை செலவிடும் போது உங்கள் தோலை அச்சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் தயாராகவும் வசதியாகவும் வைத்துக்கொள்ளவது சிறந்தது. திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் இருக்க வேண்டும் என்றாலும், உங்கள் தேனிலவுக்கும் முன்னதாகவே தயாராக இருப்பது நல்லது. இதனால் நீங்கள் அதிக அழுத்தம் கொடுக்காமல், உங்களுக்குத் தேவையானதை செய்ய மறந்துவிடாதீர்கள்.

கடற்கரை நேரம் செலவிட உடலைத் தயார்படுத்தும் போது நீங்கள் விரும்பும் பல்வேறு உடல் பாகங்களுக்கான தயாரிப்புகளின் பட்டியலை இக்கட்டுரையில் நாங்கள் தொகுத்துள்ளோம்.இதன் மூலம் நீங்கள் கடற்கரைக்கு எடுத்துச் செல்ல தேர்ந்தெடுக்கும் எந்த ஆடையிலும் அசௌகரியத்தைக் கடக்க முடியும். கடற்கரைக்கு நாம் செல்லும் போது அங்கு வரும் காற்று வெப்பநிலை, மாற்றத்தால் நமது உடலின் நிறம் மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அந்த சூழலில் நமது மேனியை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் அக்குள் பராமரிப்பு

உங்கள் அக்குள் பராமரிப்பு

லைட்னிங் சீரம்

லைட்னிங் சீரம் நிறமியைக் குறைக்கிறது. இது இயற்கையான பிரகாசத்தை உங்களுக்கு அளிக்கிறது. சருமத்தை ஹைட்ரேட் செய்கிறது மற்றும் pH சமநிலையை பராமரிக்கிறது. நமக்காக உருவாக்கப்பட்ட கோடைக்கால நண்பர் இது. இது தோல் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. தெளிவான மாசற்ற சருமத்தை நமக்கு வழங்குகிறது. மேலும் உங்கள் சருமத்தின் இயற்கையான pH உடன் தலையிடும் பாக்டீரியாக்களுடன் போராடுகிறது.

ஆன்டிபெர்ஸ்பிரண்ட் டியோ/கிரீம்

ஆன்டிபெர்ஸ்பிரண்ட் டியோ/கிரீம்

உங்களை விட்டு நீங்காத எரிச்சலூட்டும் வாசனை விடைபெறும் நேரம் இது. நீண்ட கால நறுமணத்துடன் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும். ஆன்டி-ஸ்பெர்ஸ்பிரண்ட் டியோ அல்லது க்ரீமை எடுத்துக் கொள்ளுங்கள். இது எந்த வகையான பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவுகிறது. மேலும், இது உங்கள் சருமத்தை இயற்கையாக பிரகாசமாக்க உதவுகிறது. எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் கைகளை நீங்கள் மேலே தூக்கலாம்.

உங்கள் மார்பக பராமரிப்பு

உங்கள் மார்பக பராமரிப்பு

மார்பக ஹைட்ரேட்டிங் லோஷன்

உங்கள் மார்பகங்களுக்குத் தேவையான கூடுதல் கவனிப்பைக் கொடுங்கள். உங்கள் மற்ற உடல் பாகங்களைப் போலவே உங்கள் மார்பகங்களுக்கும் சமமான கவனம் தேவை. ஒரு பிரத்யேக மார்பக ஹைட்ரேட்டிங் லோஷன் சருமத்திற்கு எண்ணெய் கட்டுப்பாடு, நீரேற்றம் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுடன் இருப்பதற்கு உதவுகிறது. இது நாள் முழுவதும் உங்களை சுத்தமாகவும் நம்பிக்கையுடனும் உணர வைக்கிறது.

ரோல் ஆன்

ரோல் ஆன்

லாவெண்டர் எண்ணெய் மற்றும் ரோஸ்ஷிப் எண்ணெய் உங்கள் மன அழுத்தத்தை நண்பனைபோல் குறைக்க உதவுகிறது. மன அழுத்தத்தை விடுவிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒரு அத்தியாவசிய எண்ணெய் அடிப்படையிலான ரோல் உங்கள் மார்பகங்கள் மற்றும் தோள்களைச் சுற்றி வயர்டு ப்ராக்களால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் தாக்கங்களைக் குறைக்கும்.

உங்கள் முதுகு மற்றும் பிட்டம்

உங்கள் முதுகு மற்றும் பிட்டம்

சன்ஸ்கிரீன் சீரம் முதல் வாட்டர் ப்ரூஃப் மஸ்காராக்கள் வரை, இந்த தயாரிப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சூரிய ஒளியில் இருக்கும்போது பயன்படுத்துங்கள். இது உங்கள் முகம், தோல் மற்றும் முடியைப் பாதுகாக்கவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க கடற்கரையில் அல்லது கடற்கரை வீட்டில் சூரிய ஒளியில் நீங்கள் நேரத்தை செலவிடலாம். தயாரிப்புகளை உங்கள் முதுகு மற்றும் பிட்டத்தில் பயன்படுத்த மறக்காதீர்கள்.

பம் க்ரீம்

பம் க்ரீம்

இது முதுகுப் பகுதிக்கான ஒரு க்ரீம். இந்த கிரீம் கடினமான சருமத்தை சீரான தோற்றத்திற்கு ஊட்டமளித்து மென்மையாக்கும். இயற்கையான மென்மைக்காக சருமத்தை உறிஞ்சுவதற்கு இலகுரக மற்றும் ஒட்டாத சூத்திரத்தைப் பயன்படுத்தவும்.

முகப்பருக்கான லோஷன்

முகப்பருக்கான லோஷன்

முதுகு மற்றும் முகப்பரு, தடிப்புகள் அல்லது மிருதுவான சருமம் எதுவாக இருந்தாலும், முகப்பருவை நீக்கும் லோஷன் உங்கள் அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். இது பட் முகப்பருவை நீக்குகிறது. அதிகப்படியான சரும உற்பத்தியைக் குறைக்கிறது. தெளிவான மற்றும் பொலிவான சருமத்தை அளிக்கிறது. இது ரேஸர்களால் ஏற்படும் மேலோட்டமான தோல் மற்றும் புடைப்புகளுக்கும் சிகிச்சையளிக்கிறது.

டோனிங் ஆயில்

டோனிங் ஆயில்

தழும்புகள், ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ், கருமையான திட்டுகள், சருமத்தை இறுக்கி, உறுதியாக்க மற்றும் ஆரோக்கியமான சருமத்தை கொடுக்க, தவறாமல் பயன்படுத்தவும். ஒரு டோனிங் எண்ணெய், தொய்வுற்ற சருமத்தை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் பம்பை மேம்படுத்துகிறது. இது முதுகு மற்றும் பம்ப் பகுதியின் தோலை ஊட்டமளிக்கிறது மற்றும் பாதுகாக்கிறது. இந்த விஷயங்களை உங்கள் மனதில் கொண்டு செய்து சிறந்த தேனிலவைக் கொண்டாடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beach Body Tips in Tamil: Here's how to get beach ready body

Beach Body Tips in Tamil: Here's how to get beach ready body in tamil.
Story first published: Monday, December 6, 2021, 19:04 [IST]
Desktop Bottom Promotion