டாட்டூ பற்றி இதுவரைக்கும் நீங்க நினைச்சதுல எவ்வளவு பொய் இருக்குன்னு நீங்களே பாருங்க...

டாட்டூ வைத்திருப்பவர்களை இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எதிரே வருபவர்களை சற்று உற்றுநோக்கினால், அநேகர் டாட்டூ வைத்திருப்பதை காணமுடியும்.

டாட்டூ வைத்திருப்பவர்களை இன்று தேடி கண்டுபிடிக்க வேண்டியதில்லை. எதிரே வருபவர்களை சற்று உற்றுநோக்கினால், அநேகர் டாட்டூ வைத்திருப்பதை காணமுடியும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களில் நால்வருள் ஒருவர், அதாவது 25 சதவீதத்தினர் டாட்டூ வைத்துக் கொள்கிறார்களாம். இன்னும் சில ஆண்டுகளில் இது 40 சதவீதமாகக் கூடக்கூடும். டாட்டூ வைத்திருப்பவர்களில் 65 சதவீதத்தினர் பெண்கள் என்பது இன்னுமொரு உண்மை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாட்டூஸ்

டாட்டூஸ்

தாங்கள் தனித்துவமானவர்கள் என்று காட்டுவதற்காக அல்லது தாங்கள் குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவர்கள் என்று உணர்த்துவதற்காக அநேகர் டாட்டூ குத்துகிறார்கள். டாட்டூவை எங்கே குத்திக்கொள்கிறோம்; அதை யாரெல்லாம் பார்க்கப் போகிறார்கள் என்பது முக்கியம். டாட்டூ வைத்துக்கொள்ளலாம் என்று விரும்புகிறீர்களா? டாட்டூ வைத்துக் கொள்வதால் உடல் நலக்கேடுகள் வருமா? ஒருவேளை, டாட்டூ வைத்துக் கொண்ட பின்னர், மனசு மாறினால் என்ன செய்வது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரை விடை தருகிறது.

பயிற்சியில்லாமல் குத்தப்படும் டாட்டூ

பயிற்சியில்லாமல் குத்தப்படும் டாட்டூ

கரி, மை. சாம்பல் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றும் ஊசியும் இருந்தால் யார்வேண்டுமானாலும் தோலில் டாட்டூ குத்திக் கொள்ளலாம். ஆனால், உரிய பயிற்சியில்லாமல் குத்தப்படும் டாட்டூக்கள் அழகாக அமையாது. மேலும் சுகாதாரமில்லாத முறையில் குத்தப்படுவதால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

கலாசார டாட்டூ

கலாசார டாட்டூ

வெவ்வேறு பண்பாட்டை சேர்ந்தவர்கள், பாரம்பரியமாக வெவ்வேறு வகையில் டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும், வெவ்வேறு சடங்குகளின்போதும் டாட்டூக்கள் குத்தப்படுகின்றன.

தொழில்முறை டாட்டூ

தொழில்முறை டாட்டூ

முறையான பயிற்சி பெற்ற கலைஞர்களால், 'டாட்டூ கன்' எனப்படும் உபகரணத்தை கொண்டு இவ்வகை டாட்டூ குத்தப்படுகிறது.

அழகுசார்ந்த டாட்டூ

அழகுசார்ந்த டாட்டூ

எல்லா வகை டாட்டூக்களும் அடையாளங்கள் அல்ல. சில டாட்டூக்கள் நிரந்தர ஒப்பனைகளாக குத்தப்படுகின்றன. உதட்டுக்கான லிப்ஸ்டிக், லைனர், கன்னத்தில் பிளஷ் என்னும் நிறமூட்டுதல், கண்கள் அருகே மற்றும் புருவங்கள், போலியான தலைமுடி என்று பல டாட்டூக்கள் ஒப்பனைக்காக குத்தப்படுகின்றன. நாட்பட நாட்பட டாட்டூக்கள் நிறம் மங்குவதால் தேவைப்படும்போது அவை மறுபடியும் குத்தப்படுகின்றன.

மருத்துவ பயனுக்கான டாட்டூ

மருத்துவ பயனுக்கான டாட்டூ

தங்கள் உடல் நல குறைபாடுகளை வெளிப்படுத்துவதற்காகவும் சிலர் டாட்டூ குத்துகின்றனர். உதாரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள், அவசர காலத்தில் மற்றவர்கள் தங்கள் பாதிப்பை மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்காக டாட்டூ குத்திக்கொள்கிறார்கள். ரேடியேஷன் தெரபி என்னும் கதிரியக்க சிகிச்சை பெற்றவர்களுக்கு, அந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்வதற்காக மருத்துவர்களே டாட்டூவை பொறிக்கின்றனர். மார்பக அறுவை சிகிச்சைக்கு பின்பு, மார்பகத்தை மறுபடி கட்டமைக்கும்போது, மார்பக காம்புக்காக டாட்டூ வரையப்படுகிறது.

பாதுகாப்பாக டாட்டூ குத்த சில யோசனைகள்

பாதுகாப்பாக டாட்டூ குத்த சில யோசனைகள்

டாட்டூ குத்துவதற்கு முந்திய இரவில் மது அருந்துவது அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது கூடாது.

நோயுற்றிருக்கும்போது டாட்டூ குத்தக்கூடாது.

டாட்டூ குத்தும் ஊசிகள், சுத்திகரிக்கப்பட்டவையாக, ஒரேமுறை பயன்படுத்தக்கூடியவையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நிரந்தரமான டாட்டூக்கள், தோலை குத்தியே பொறிக்கப்படுகிறது. அப்போது இரத்தம் மற்றும் உடலினுள் உள்ள திரவங்களில் டாட்டூ பொறிக்கும் ஊசி படக்கூடிய வாய்ப்பு உள்ளது. ஆகவே, டாட்டூக்கள் முறையான சான்றிதழ் பெற்ற கலைஞர்களால், அதற்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட சுத்தமான இடங்களில் (டாட்டூ ஸ்டூடியோ) வைத்தே குத்தப்படவேண்டும். ஒருவருக்கு டாட்டூ குத்திய பின்னர், கிருமிகளை சுத்திகரிக்கக்கூடிய வசதி பெற்ற அறையாக இருக்க வேண்டும்.

டாட்டூ கலைஞர், குத்துவதற்கு முன்பும், பின்பும் கைகளை சுத்தமாக கழுவி, தேவையான கையுறைகளை அணிகிறாரா என்று கவனிக்க வேண்டும். பயிற்சியின்போது, நோய்கள் இரத்தத்தின் வழியாக பரவாமல் டாட்டூ குத்துவது எப்படி என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களுக்கு டாட்டூ குத்துவதற்கு அவர் பயன்படுத்தும் மை மற்றும் பிக்மெண்ட் போன்ற அனைத்து பொருள்களின் தயாரிப்பாளர், தயாரிப்பு எண் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

டாட்டூ குத்திய பிறகு கடைப்பிடிக்கப்படும்படி கலைஞர் கூறுவதை கருத்தாய் பின்பற்றுங்கள். பயன்படுத்த வேண்டிய களிம்பு (ஆயின்மெண்ட் ) போன்றவற்றை தவறாமல் உபயோகியுங்கள்.

ஆபத்து

ஆபத்து

டாட்டூ குத்திக் கொள்வது சில நேரங்களில் அபாயகரமான நோய்களை பரப்பி விடும். சுத்தமில்லாத ஊசியை பயன்படுத்தினால் எய்ட்ஸ் அல்லது ஹெபடிடஸ் சி என்ற கல்லீரல் பாதிப்பு வந்துவிடக்கூடும். கிருமி தொற்று காரணமாக எம்ஆர்எஸ்ஏ, தோல் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தரமற்ற மை பயன்படுத்துவதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு கண், நுரையீரல் மற்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

அலர்ஜி - எச்சரிக்கை

அலர்ஜி - எச்சரிக்கை

சிலருக்கு டாட்டூக்கு பயன்படுத்தப்படும் மை, ஒவ்வாமையை ஏற்படுத்தும். குறிப்பாக, லிப்ஸ்டிக் டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் சிவப்பு மை அலர்ஜியை ஏற்படுத்தும். டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் அச்சு மற்றும் ஏனைய உலோக பொருள்களும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல், வீக்கம், புண்கள் ஆகியவை உருவாகலாம்.

டாட்டூவை அழிக்க முடியுமா?

டாட்டூவை அழிக்க முடியுமா?

திடீரென்று 'டாட்டூவே வேண்டாம்' என்று உங்கள் மனம் சொன்னால் என்ன செய்வது? டாட்டூவை அழிக்க முடியுமா? அழிக்க முடியும். ஆனால், டாட்டூ வைப்பதற்கு முன்பு இருந்ததுபோலவே தோல் பழைய தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. டாட்டூ வைக்க கறுப்பு மை பயன்படுத்தியிருந்தால், ஓரளவுக்கு பழைய நிலை திரும்பலாம். டாட்டூவை நீக்குவதற்கு சுயமாக முயற்சிக்காதீர்கள். டாட்டூவை நீக்கும் எனக்கூறி விற்கப்படும் தயாரிப்புகளில் அமிலம் அதிக அளவில் கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோன்றவற்றை பயன்படுத்தும்போது, விரும்பத்தகாத பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். டாட்டூவை நீக்குவதற்கு நீங்கள் டாட்டூ கலைஞரை அணுகக்கூடாது. மாறாக, மருத்துவரிடமே செல்ல வேண்டும்.

தழும்பு

தழும்பு

குறிப்பிட்ட தோல் பகுதியை வெட்டியெடுத்து அல்லது தோல்நோய் நிபுணரை கொண்டு தோலின் மேல்புற அடுக்கினை அகற்றுவதன் மூலமாக அல்லது லேசர் சிகிச்சை மூலமாக டாட்டூ அகற்றப்படுகிறது. அநேக மருத்துவர்கள், லேசர் முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். தோலின் மேற்புற அடுக்கினை அகற்றும்போது, தழும்பு ஏற்படும். சில நிற மை, ஒருமுறை சிகிச்சை பெற்றால் நீங்காது. அது நீங்கும் வரை பல முறை சிகிச்சைக்கு செல்வது அவசியம்.

வெவ்வேறு நிற மையினை அகற்றுவதற்கு வேறு வேறு லேசர் கதிர்கள் பயன்படுத்தப்படும். அவை டாட்டூ மையினை சின்னஞ்சிறு பகுதிகளாக சிதைத்து அவற்றை அகற்றும். டாட்டூ நீக்கப்பட்ட தோல் பகுதி வெள்ளையாக காட்சியளிக்கும். காலப்போக்கில் இயல்பான நிறத்துக்கு மாறும்.

டாட்டூவை நீக்கும் சிகிச்சையும் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கும். லேசர் சிகிச்சை காரணமாக சிறு கொப்புளங்கள் உருவாகலாம். தொடர்ந்த பராமரிப்பின் மூலம் கொப்புளங்கள் சுகமாகும்.

தற்காலிக டாட்டூ பாதுகாப்பானதா?

தற்காலிக டாட்டூ பாதுகாப்பானதா?

மருதாணி பயன்படுத்தி தற்காலிக டாட்டூ வைத்தால் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். சிலருக்கு மருதாணி கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும். சிவப்பு நிற மருதாணி, தலைமுடிக்கு பயன்படுத்த ஏற்றது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தோலில் அலங்காரங்களை ஏற்படுத்தும் பயன்பாட்டுக்கு அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், கறுப்பு அல்லது நீல நிற மருதாணி நிலக்கரியின் தாரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே, அவற்றை உபயோகிப்பதை தவிர்த்து விடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, April 19, 2018, 16:40 [IST]
Desktop Bottom Promotion