TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
உங்க நகம் மஞ்சளா அசிங்கமா இருக்கா? இத அடிக்கடி செய்யுங்க சரியாயிடும்...!
நகங்கள் நன்கு பளிச்சென்று வெள்ளையாக இருந்தால் தான், அது கையின் அழகையே மேம்படுத்திக் காட்டும். ஆனால் சில விஷயங்கள் நம் விரல் நகங்களில் கறைகளை எளிதில் ஏற்படுத்தி விடுகின்றன. அதில் அளவுக்கு அதிகமாக நெயில் பாலிஷ் பயன்படுத்துவது, நாள் முழுவதும் அழுக்கு நிறைந்த இடத்தில் இருப்பது போன்றவற்றால் விரல் நகங்கள் எளிதில் கறைப் படிந்து அசிங்கமான தோற்றத்தைப் பெற ஆரம்பிக்கின்றன.
அதிலும் சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக காட்சியளிக்கும். இதைப் போக்க வெறும் நெயில் பிரஷ் பயன்படுத்தினால் மட்டும் அந்த மஞ்சள் கறை போகாது. நம் வீட்டு சமையலறையில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்களின் உதவியுடன் எளிதில் நகங்களில் உள்ள கறைகளைப் போக்கலாம்.
எவ்வளவு தான் நகங்களை அழகை மேம்படுத்தும் பல்வேறு வழிகள் அழகு நிலையங்களில் பின்பற்றப்பட்டாலும், இயற்கைப் பொருட்களைக் கொண்டு கொடுக்கும் பராமரிப்பிற்கு நிகர் வேறு எதுவாலும் வர முடியாது.
இந்த கட்டுரையில் நகங்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை அடிக்கடி பயன்படுத்தினால், நகங்கள் வெள்ளையாக அழகாக ஜொலிக்கும்.
எலுமிச்சை சாறு
ஒரு பௌலில் 2 எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் நகங்களை குறைந்தது 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் நகங்களை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின்பு மாய்ஸ்சுரைசிங் க்ரீம் எதையேனும் பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி, நகங்களில் உள்ள அனைத்துவிதமான அழுக்குகளையும் நீக்கி பளிச்சென்று ஆக்கும்.
பேக்கிங் சோடா
நகங்களில் உள்ள அசிங்கமான கறைகளைப் போக்க, 2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, விரல் நகங்களில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். பேக்கிங் சோடாவில் உள்ள ஏஜெண்ட்டுகள், நகங்களில் உள்ள கறைகளைப் போக்க உதவும்.
டூத் பேஸ்ட்
மற்றொரு அற்புதமான வழி என்றால் விரல் நகங்களில் டூத் பேஸ்ட்டைத் தடவி பிரஷ் கொண்டு நகங்களைத் தேய்த்து 3 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் சில நாட்கள் செய்து வந்தால், நகங்களில் உள்ள மஞ்சள் கறைகள் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா பேஸ்ட்
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2-3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் செய்து, நகங்களின் மேல் மற்றும் அடிப்பகுதியில் தடவுங்கள். பின் 15 நிமிடம் கழித்து, சோப்பு மற்றும் நீர் பயன்படுத்தி கழுவுங்கள். இப்படி அடிக்கடி செய்து வந்தால், நகங்கள் விரைவில் வெள்ளையாகும்.
வெள்ளை வினிகர்
வெள்ளை வினிகரைப் பயன்படுத்தியும் நகங்களை வெண்மையாக்கலாம். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை ஒரு சிறிய கப் நீருடன் கலந்து, அந்நீரில் நகங்களை 5 நிமிடம் ஊற வைத்து பின் நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக மறக்காமல் விரல் நகங்களுக்கு மாய்ஸ்சுரைசிங் க்ரீம்களைத் தடவ மறக்காதீர்கள்.
சோப்பு மற்றும் நீர்
பொதுவாக நகங்களை சுத்தம் செய்ய பெரும்பாலானோர் பின்பற்றும் ஓர் வழி தான் சோப்பு மற்றும் நீர். இந்த வழியால் சிறப்பான பலன் கிடைக்க, நகங்களின் அடியில் சோப்பு தடவி, பிரஷ் பயன்படுத்தி தேய்க்க வேண்டும். பின் நீரால் விரல் நகங்களைக் கழுவ வேண்டும்.
டீ-ட்ரீ ஆயில்
சுத்தமான டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி நகங்களில் தடவி, சில நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் விரல் நகங்களைக் கழுவுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், சில மாதங்களிலேயே நகங்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண்பீர்கள்.
எலுமிச்சை மற்றும் உப்பு
எலுமிச்சை மற்றும் உப்பு நகங்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும். அதற்கு எலுமிச்சை சாறு மற்றும் உப்பை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, நகங்களில் தடவி தேயுங்கள். பின் 5 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். அதன் பின் தவறாமல் மாய்ஸ்சுரைசிங் க்ரீம் அல்லது லோஷனைப் பயன்படுத்த வேண்டும்.