For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் குளிக்கிற தண்ணியில கொஞ்சம் உப்பு போட்டு குளிங்க... ஏன்னு தெரியுமா?

குளியல் உப்பு என்பது கடலிருந்து பெறப்படும் இயற்கையான உப்பாகும். இதில் நிறைய விட்டமின்கள் தாதுக்கள் என்று சருமத்திற்கு நிறைய நன்மைகளை கொடுக்க கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளது. அதைப் பற்றிய ஒரு தொகுப்பு.

|

தினமும் குளிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து குளிப்பதால் நிறைய நன்மை உண்டாகும். நமது சருமம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் இந்த சருமத்தின் தன்மை அடிக்கடி மாறுபட்டு கொண்டே இருக்கும்.

Benefits Of Using Bath Salts

எனவே இப்படி மாறும் சருமத்தை கவனமாக பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். அதற்கு தான் இந்த பாத் உப்பு பயன்படுகிறது. ஆமாங்க இந்த பாத் உப்பை பயன்படுத்தி வருவதால் சருமத்திற்கு என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டிலேயே தயாரித்தல்

வீட்டிலேயே தயாரித்தல்

இந்த பாத் உப்பை தேடி நீங்கள் அழகு நிலையங்களில் அலைய வேண்டாம். இதை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துவது மிகவும் எளிது.

MOST READ: எழுதும்போது உங்களுக்கு கை நடுங்குதா? அது ஏன்? எப்படி ஈஸியா சரி பண்ணலாம்னு தெரியுமா?

குளியல் உப்பு

குளியல் உப்பு

குளியல் உப்பு என்பது கடலிருந்து பெறப்படும் இயற்கையான உப்பாகும். இதில் நிறைய விட்டமின்கள் தாதுக்கள் என்று சருமத்திற்கு நிறைய நன்மைகளை கொடுக்க கூடிய பொருட்கள் ஏராளமாக உள்ளது.

இது ஒரு தண்ணீரில் கரையக் கூடிய படிகப் பொருள்.இந்த உப்பை நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து கொள்ள வேண்டும். இந்த உப்புக் குளியல் தசைகளை தளர்ச்சியாக்கி மூட்டுகளை வலிமையாக்குகிறது.

பயன்கள் பொலிவான சருமம்

பயன்கள் பொலிவான சருமம்

தினமு‌ம் குளிக்கும் போது இந்த உப்பை பயன்படுத்தி வந்தால் பொலிவான சருமம் கிடைக்கும். இதில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ப்ரோமைடு, சோடியம் போன்ற பொருட்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை மென்மையாகவும், பொலிவாக வும் வைக்க உதவுகிறது.

தசைப் புண்கள்

தசைப் புண்கள்

தசைகளில் ஏற்படும் காயங்களை போக்க இந்த குளியல் உப்பு உதவுகிறது. எனவே உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க இது சிறந்தது.

இளமையான சருமம்

இளமையான சருமம்

இந்த குளியல் உப்பை கொண்டு நீங்கள் சீக்கிரம் வயதாகுவதை தள்ளிப் போடலாம். இது வயதாகுவதை மெதுவாக்குகிறது. இந்த குளியல் உப்பை பயன்படுத்தி வரும் போது சரும துளைகளை குறைத்து சரும கோடுகள், சுருக்கங்களை போக்கி இளமையான சருமத்தை தருகிறது.

பயன்படுத்தும் முறை

MOST READ: பிரிட்ஜில் எந்த பொருள்களை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...

பாத் டப்

பாத் டப்

உங்கள் பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு குளியல் உப்பை எடுத்து பாத் டப்பில் போட்டு அது கரைந்ததும் குளிக்கவும். இந்த குளியல் உங்கள் சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.

 குளியல்

குளியல்

ஒரு கைப்பிடியளவு குளியல் உப்பை எடுத்து நன்றாக தூளாக்கி அதனுடன் கொஞ்சம் நீர் சேர்த்து அந்த பேஸ்ட்டை ஸ்க்ரப் மாதிரி தேய்த்து குளியுங்கள். சில நிமிடங்கள் தேய்த்த பிறகு கழுவினால் நல்ல நறுமணத்தோடு ஆரோக்கியமான சருமமும் கிடைக்கும்.

பாத ஸ்கரப்

பாத ஸ்கரப்

ஒரு பெரிய பெளலில் வெதுவெதுப்பான நீர் மற்றும் எப்சம் உப்பு சேர்த்து அந்த நீரில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். எப்சம் உப்பு உங்கள் பாதங்களில் உள்ள வெடிப்புகள், பூஞ்சை தொற்று, வறண்ட பாதம் போன்ற பிரச்சினைகளை போக்கி விடும்.

MOST READ: இந்த எண்ணெயை தேய்ச்சா தலைமுடி நரைக்காதாம்... இளநரையும் போயிடும்...

கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்

கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்

அதிகமாக குளியல் உப்பை பயன்படுத்தாதீர்கள். இது சருமத்தை வறண்டு போகச் செய்து விடும்.

குளியல் உப்பு நிறைய நிறங்களில் கிடைக்கிறது. உங்களுக்கு தேவையான நிறத்தில் மார்க்கெட்டில் தரம் பார்த்து வாங்கி கொள்ளுங்கள். திறந்த காயங்கள், புண்கள் இருந்தால் பாத் உப்பை பயன்படுத்தாதீர்கள்

ஷேவிங் செய்யும் போது குளியல் உப்பை பயன்படுத்தி குளிக்காதீர்கள்.

குளியல் உப்பை தண்ணி படாத இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Using Bath Salts

A bath salt is a water-soluble crystalline substance that is usually mixed with your bath water while bathing. Bath salts are designed to loosen your muscles and stiff joints. They have a number of cosmetic benefits to offer
Story first published: Wednesday, October 31, 2018, 14:55 [IST]
Desktop Bottom Promotion