For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விளம்பரத்துல வர்ற எல்லா சோப்பு யூஸ் பண்ணியும் திருப்தியே இல்லையா?... அப்போ வீட்லயே செஞ்சிருங்க...

நீங்கள் கெமிக்கல்கள் நிறைந்த சோப்பு, பாடி வாஷ் இவற்றை பயன்படுத்தும் போது அவற்றால் உங்கள் சருமம் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளது. எனவே இந்த மாதிரியான கெமிக்கல் பொருட்களை ஓரங்கட்டி விட்டு இயற்கையான முற

By Suganthi Rajalingam
|

நாம் உற்சாகமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு குளியல் மிகவும் அவசியம். ஆனால் நீங்கள் கெமிக்கல்கள் நிறைந்த சோப்பு, பாடி வாஷ் இவற்றை பயன்படுத்தும் போது அவற்றால் உங்கள் சருமம் பாதிப்பிற்குள்ளாக வாய்ப்புள்ளது.

how to prepare homemade body wash

எனவே இந்த மாதிரியான கெமிக்கல் பொருட்களை ஓரங்கட்டி விட்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பாடி வாஷ் பொருட்கள் சருமத்தை சுத்தப்படுத்துவதோடு பொலிவாகவும் அழகாகவும் மாற்றுகிறது. சரி வாங்க இந்த பாதுகாப்பான ஹோம்மேடு பாடி வாஷ் தயாரிப்பது எப்படி எனப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன் பாடி வாஷ்

தேன் பாடி வாஷ்

தேன் உங்களுக்கு ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்தோடு பட்டு போன்று காணப்படும். இதனுடன் சில எஸன்ஷியல் ஆயிலை சேர்த்தாலே போதும் உங்கள் பாடி வாஷ் ரெடி.

தேவையான பொருட்கள்

கேஸ்டில் சோப்பு (லிக்யூட் மற்றும் நறுமணம் இல்லாமல்)

தேன் - 1/4 கப்

உருகிய தேங்காய் எண்ணெய் - 1/4 கப்

எஸன்ஷியல் ஆயில்(லெமன், ஸ்வீட் ஆரஞ்சு, திராட்சை அல்லது யூகாப்லிட்டஸ்) - 10-15 துளிகள்

பயன்படுத்தும் முறை

தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் எஸன்ஷியல் ஆயில் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்

இதனுடன் ஒரு டீ ஸ்பூன் விட்டமின் ஈ ஆயில் சேர்க்கவும்

மெதுவாக சோப்பை கலந்து படியாமல் கலக்க வேண்டும்

இதை ஒரு பாட்டிலில் ஊற்றி தேவைப்படும் போது குலுக்கி பயன்படுத்தவும்.

உங்க நறுமணம் மிக்க பாடி வாஷ் ரெடி. இனி உங்கள் சருமம் பட்டு போன்று வழுவழுக்கும்.

தேங்காய் எண்ணெய் பாடி வாஷ்

தேங்காய் எண்ணெய் பாடி வாஷ்

உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் தேங்காய் எண்ணெய் மிகவும் சிறந்தது. இது உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதோடு சரும தொற்று மற்றும் சரும பிரச்சினைகளிலிருந்து காக்கிறது. இந்த இயற்கையான எளிய பாடி வாஷ் உங்களுக்கு ஒரு ஆடம்பரமான சருமழகை கொடுக்கிறது.

தேவையான பொருட்கள்

கேஸ்டில் சோப்பு (நறுமணம் இல்லாத) - 2 கப்கள்

உருகிய தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

ரோஸ் வாட்டர் - 1 கப்

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில் - 15-20 சொட்டுகள்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் 1/4 அளவுள்ள ஜார் அல்லது ஒரு டப்பாவில் எடுத்து கொள்ளவும்

நன்றாக கலக்கும் வரை குலுக்கவும்

பிறகு இந்த பாடி வாஷை ஒரு பிதுக்கும் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கவும்

இதை நீங்கள் பேஷ் வாஷாக கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

கண்டிப்பாக இது உங்களுக்கு பிடிக்கும். இனி உங்கள் குளியல் இதனுடன் தான் இருக்கும்.

வேம்பு பாடி வாஷ்

வேம்பு பாடி வாஷ்

வேம்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. இவை நமது சருமத்தை பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று களிலிருந்து காக்கிறது. இதனுடன் ஷீ பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்க்கும் போது நல்ல மாய்ஸ்சரைசர் மற்றும் மென்மையை தருகிறது.

தேவையான பொருட்கள்

டிஸ்டில்டு வாட்டர் - 6 கப்

வேப்பிலை சாறு - 10 சொட்டுகள்

ஷீ பட்டர் சோப்பு - 1/2 பார்

தேங்காய் எண்ணெய் - 1/2 கப்

பென்டோனைட் களிமண் - 1 டேபிள் ஸ்பூன்

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில் - 15 சொட்டுகள்

பயன்படுத்தும் முறை

முதலில் சோப்பு கட்டிகளை துருவி பவுடராக்கி கொள்ளுங்கள்

பிறகு ஒரு பானையை எடுத்து அதில் டிஸ்டில்டு வாட்டரை நிரப்பி அதன் சோப்பு சேர்த்து மிதமான தீயில் சோப்பு முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்

இப்பொழுது இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து உருக விடவும்

இப்பொழுது இதனுடன் களிமண் சேர்த்து நன்றாக பேஸ்ட் மாதிரி தயாரிக்கவும்

எல்லாம் நன்றாக கலந்த பிறகு பானையை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு டப்பாவில் கலவையை ஊற்றவும். ஆறிய உடன் பொருட்கள் எல்லாம் தனித்தனியாக பிரிய ஆரம்பிக்கும். எனவே 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நன்றாக குலுக்கி கொள்ளுங்கள். சோப்பு கலவை ஆறிய பிறகு வேம்பு சாறு மற்றும் எஸன்ஷியல் ஆயில் சேர்க்கவும்.

பயன்கள்

பயன்கள்

லாவண்டர் எஸன்ஷியல் ஆயில் நல்ல நறுமணத்தையும் வேம்பு சாறு சருமத்திற்கு பாதுகாப்பு அரணாகவும் செயல்படும். இதன் மூலம் உங்கள் சருமம் ஆரோக்கியமாகவும் மென்மையாகவும் ஜொலிக்கும்.

என்னங்க இந்த ஹோம்மேடு பாடி வாஷை எளிதாக எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே தயாரித்து விடலாம். பின்னே ஏன் வெயிட் பண்ணுரிங்க. உங்கள் கெமிக்கல் பொருட்களுக்கு பை பை சொல்லி இயற்கையான அழகை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: body
English summary

3 Simple Homemade Body Wash Recipes

There are many amazing recipes that you can use to make an all-natural body wash so that you can have soft, glowing skin. So forget about those chemical-filled bath washes that you see in fancy advertisements, and make your own at home and get the healthy skin you have always wanted! Honey Body Wash, Coconut Oil Body Wash, Neem Body Wash these are detailed here.
Story first published: Saturday, May 12, 2018, 11:04 [IST]
Desktop Bottom Promotion