For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதைக் கொண்டு 5 நிமிடம் மசாஜ் செய்ய, கை, கால், முகத்தில் உள்ள முடி மாயமாய் மறையும்!

இங்கு சருமத்தில் உள்ள முடியைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

|

உலகில் உள்ள பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது. பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, குறிப்பிட்ட மருந்து மாத்திரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

Just 5 Minute Massage With This Oil And All Unwanted Hair Will Disappear Forever!

கை, கால், முகத்தில் இருக்கும் முடியை நீக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் வேக்ஸிங், லேசர் ஹேர் ரிமூவல், எலக்ரோலைசிஸ் போன்றவை பெரும்பாலான பெண்களால் தேவையற்ற முடியை நீக்க பயன்படுத்தும் வழிகள் ஆகும். இந்த முறைகளை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து பெண்கள் செய்வார்கள்.

ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. முக்கியமாக இயற்கை வழிகளைப் பின்பற்றுவதால் எவ்வித பக்கவிளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சருமத்தில் உள்ள முடியைப் போக்கும் அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

1 டேபிள் ஸ்பூன் அயோடின் 2% மற்றும் 1 கப் பேபி ஆயிலை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முடி உள்ள கை, கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் அப்பகுதிகளில் உள்ள முடி மாயமாய் மறைவதோடு, இனிமேல் அப்பகுதியில் முடியின் வளர்ச்சியும் குறைய ஆரம்பித்து, நாளடைவில் வளராமல் நின்றுவிடும்.

வழி #2

வழி #2

2 டேபிள் ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 10 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் கழித்து, நீர் பயன்படுத்தி கைகளாய் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வர, முடி நீங்குவதோடு, முடியின் வளர்ச்சியும் நின்றுவிடும்.

வழி #3

வழி #3

ஒரு பௌல் துவரம் பருப்பை நீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதன் தோலை நீக்கி துண்டுகளாக்கி சாறு எடுத்து கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் ஊற வைத்த துவரம் பருப்பை போட்டு அரைத்துக் கொள்ளவும். அடுத்து அதில் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை முடியுள்ள பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி கைகளால் மென்மையாக தேய்த்து கழுவ, முடி உதிர ஆரம்பிக்கும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்ய முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.

வழி #4

வழி #4

ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப் பகுதியில் தடவி 20-25 நிமிடம் கழித்து உரித்து எடுக்கவும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #5

வழி #5

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து கலந்து, தேவையற்ற முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவி மென்மையாக தேய்த்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடியின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

வழி #6

வழி #6

பப்பாளியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, அரைத்துக் கொள்ள வேண்டும். பின் 2 டேபிள் ஸ்பூன் பப்பாளி பேஸ்ட்டுடன், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.

வழி #7

வழி #7

1/2 கப் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம் மற்றும் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, முடியுள்ள கை, கால், முகப் பகுதிகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பேஸ்ட் நன்கு காய்ந்த பின் நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Just 5 Minute Massage With This Oil And All Unwanted Hair Will Disappear Forever!

In this article, we are going to present you one of these methods which can remove your unwanted hair quickly and without side effects!
Story first published: Wednesday, December 6, 2017, 15:20 [IST]
Desktop Bottom Promotion