அழகான ஆண்மகனாக வெளிக்காட்ட ஆண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டியவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களைப் போலவே ஆண்களும் தாங்கள் அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அப்படி நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு முயற்சிக்கவும் வேண்டும். அதற்காக கண்ட க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறவில்லை, அன்றாடம் மேற்கொள்ளும் சில செயல்களில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதும்.

Grooming Tricks Every Man Should Know To Look His Best

இக்கட்டுரையில் ஆண்கள் தங்களை அழகான ஓர் ஆண்மகனாக வெளிக்காட்ட கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய மற்றும் எளிய அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷேவிங் ஜெல்

ஷேவிங் ஜெல்

நீங்கள் ஷேவிங் செய்பவராயின், அதிலும் ஷேவிங் மூலம் வெட்டு காயங்களை சந்திப்பவராயின், அதைத் தவிர்க்க, ஷேவிங் ஜெல்லை தடவி 5-7 நிமிடம் கழித்து, பின் ரேசர் பயன்படுத்தி ஷேவ் செய்யுங்கள். இதனால் அசிங்கமான மற்றும் வலிமிக்க வெட்டு காயங்களைத் தவிர்க்கலாம்.

கண்டிஷனர் போதும்

கண்டிஷனர் போதும்

ஷேவிங் ஜெல் தீர்ந்துவிட்டதா? கடைக்கு போய் வாங்கி வந்து பயன்படுத்தும் அளவில் நேரமில்லையா? அப்படியெனில் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இதுவும் ஷேவிங் செய்த பின், மென்மையான சருமத்தைப் பெற உதவும்.

டூத் பிரஷ்

டூத் பிரஷ்

மென்மையான மற்றும் அழகான உதடு வேண்டுமா? அதற்காக லிப் பாம் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில் இந்த குறிப்பை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அது என்னவெனில், உதட்டை அழகாக காட்ட லிப் பாம் பயன்படுத்துவதற்கு பதிலாக, தினமும் பிரஷ் செய்யும் போது, டூத் பிரஷ்ஷால் உதட்டை சிறிது தேயுங்கள். இதனால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடும் மென்மையாக அழகாக இருக்கும்.

காதை சுத்தம் செய்யும் ட்ரிக்ஸ்

காதை சுத்தம் செய்யும் ட்ரிக்ஸ்

காதை சுத்தம் செய்வதற்கு பட்ஸ் பயன்படுத்த பயமாக இருந்தால், அதற்கு பதிலாக ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி காதுகளின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் சுத்தம் செய்யுங்கள். அதுவும் ஒரு துளி ஆலிவ் ஆயிலை காதுகளில் விட்டு, பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தினால், காதுகளினுள்ளே அழுக்குகள் சேர்வது தடுக்கப்படும்.

லிப் பாம்

லிப் பாம்

ஷேவிங் செய்து வெட்டு காயம் ஏற்பட்டுவிட்டதா? இரத்தம் நிற்காமல் வழிகிறதா? அப்படியெனில், அவ்விடத்தில் லிப் பாம்மை தடவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Grooming Tricks Every Man Should Know To Look His Best

Here are some grooming tricks every man should know to look his best. Read on to know more...
Story first published: Saturday, May 6, 2017, 12:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter