அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள் அழகைப் பராமரிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதுமட்டுமின்றி அதற்கெல்லாம் அவர்களுக்கு பொறுமையும், நேரமும் இருக்காது. ஆண்கள் அழகாக இருப்பதற்கு தினமும் அவர்கள் அழகைப் பராமரிக்க வேண்டும் என்பதில்லை. நேரம் கிடைக்கும் போது ஒருசில ட்ரிக்ஸ்களை தெரிந்து கொண்டு பின்பற்றினாலே போதுமானது.

Smart Grooming Hacks Every Man Should Know!

பெண்களைப் போலவே ஆண்களும், சருமம், தலைமுடி போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஆனால் பெண்கள் அன்றாடம் தங்கள் சருமம் மற்றும் தலைமுடிக்கு பராமரிப்பைக் கொடுக்க நேரத்தை செலவழிப்பார்கள். ஆண்களுக்கு அந்த அளவில் பொறுமை இல்லை.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளித்த பின் ஷேவிங்

குளித்த பின் ஷேவிங்

பொதுவாக தூங்கி எழுந்ததும் பிரஷ் செய்துவிட்டு, ஷேவிங் செய்து, பின்பே குளிப்போம். ஆனால் அதில் ஒரு மாற்றத்தை செய்தால் போதும். அது என்னவெனில் குளித்து முடித்த பின் ஷேவிங் செய்வது. இதனால் சருமத்துளைகள் விரிவடைந்து, ஷேவிங் செய்வது எளிமையாக இருப்பதுடன், சருமமும் மென்மையாக இருக்கும்.

ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக கண்டிஷனர்

ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக கண்டிஷனர்

ஷேவிங் செய்த பின் வறட்சியடையாமல் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமானால், ஷேவிங் க்ரீமிற்கு பதிலாக, ஹேர் கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

ஷேவிங் காயங்களுக்கு லிப் பாம்

ஷேவிங் காயங்களுக்கு லிப் பாம்

ஷேவிங் செய்து ஏற்பட்ட வெட்டுக் காயங்களுக்கு சிறிது லிப் பாமைத் தடவினால், வெட்டுக் காயங்களில் இருந்து இரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

வறட்சியான முடிக்கு பாதாம் எண்ணெய்

வறட்சியான முடிக்கு பாதாம் எண்ணெய்

தலைமுடி வறட்சியுடன் மென்மையின்றி உள்ளதா? அப்படியெனில் 2 துளி பாதாம் எண்ணெயை கையில் தேய்த்து, தலையில் தடவுங்கள். அதற்காக அதிகமாக தடவி விட வேண்டாம். இல்லாவிட்டால், தலையில் எண்ணெய் வழிய ஆரம்பிக்கும்.

முத்துப் போன்ற பற்கள் பெற...

முத்துப் போன்ற பற்கள் பெற...

பற்களில் மஞ்சள் கறைகள் இருந்தால், அதைப் போக்கி, பற்களை வெண்மையாக்க 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, டூத் பிரஷ் கொண்டு 2 நிமிடம் பற்களைத் துலக்கி வாயைக் கழுவ வேண்டும். இப்படி மாதத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பற்கள் நன்கு வெள்ளையாக ஜொலிக்கும்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

காபியில் உள்ள டானின்கள் சருமத்தில் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, சரும நிறத்தை மேம்பட உதவும். அதற்கு காபி தூளை நீர் சேர்த்து கலந்து, கன்னம், மூக்கு, தாடை போன்ற பகுதியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வழியும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Smart Grooming Hacks Every Man Should Know!

Tame your wild frizz with these smart hair hacks for men. These are simple and quick hair-styling hacks that every man should know!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter