For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உச்சி முதல் உள்ளங்கால் வரை அழகு டிப்ஸ் !!

|

பெண்களை தங்களை அழகுப்படுத்திக் கொள்வதும் கலைதான். அவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாய் இருக்கிறார்கள் என்ற மற்றவர்களை பாத்து பெருமூச்சுவிடுவதை உதறுங்கள். அவர்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்ள என மிக குறைவான நேரமாவது ஒதுக்குவார்கள். நீங்களும் உங்களுக்கென்று சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் ..அப்புறம் பாருங்கள்!!

Homemade beauty tips to do everyday

எண்ணெய் பசையுள்ள கூந்தலுக்கு :

அதிக எண்ணெய் சுரக்கும் கூந்தலுக்கு குழந்தைகளுக்கு போடும் பவுடரை உள்ளங்கையில் சிறிது எடுத்துக் கொண்டு, தலையில் தடவுங்கள். பின் தலையை சீவினால் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.

பொடுகிற்கு :

கால் கப் தேங்காய் எண்ணெயில் அரை மூடி எலுமிச்சை சாறு கலந்து , ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் இரு முறை இப்படி செய்தால் பொடுகு வராது.

முகப்பருவிற்கு :

இரவில் வெள்ளை நிற டூத் பேஸ்ட்டை முகப்பரு இருக்கும் இடங்களில் போட்டுக் கொண்டு படுக்கச் செல்லுங்கள். மறு நாள் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். நாளடைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

கரும்புள்ளி மறைய :

சமையல் சோடாவை சிறிது நீர் கலந்து முகத்தில் தேய்க்கவும். சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவவும். இவ்வாறு செய்தால் கரும்புள்ளிகள் விரைவில் மறையும்.

வெண்மையான பற்களுக்கு :

மஞ்சளான பற்கள் மற்றும் கறைபடிந்துள்ள பற்களை வெண்மையாக்க, சமையல் சோடாவை உங்கள் டூத் பேஸ்ட்டுடன் கலந்து தினமும் பல் தேயுங்கள். ஒரே வாரத்தில் இருந்த கறை எல்லாம் போய் பற்கள் சுத்தமாக இருக்கும். சமையல் சோடா கிருமி நாசினியும் கூட. பற்சிதைவிலிருந்து பாதுகாக்கும்.

கண்களுக்கு அடியில் தொங்கும் நீர்ப்பை :

சில ஸ்பூன்களை எடுத்து ஃப்ரிட்ஜில் வையுங்கள். 10 நிமிடங்கள் கழித்து, ஃப்ரிட்ஜில் வைத்த ஸ்பூன்களின் ஒன்றை எடுத்து வெளிப்புறமான பகுதியை உப்பிய கண்களின் மேல் வையுங்கள்.

சில நொடிகளில் வெதுவெதுப்பான ஸ்பூனை எடுத்து கண்களின் மேல் வையுங்கள். இப்படி மாறி மாறி வைக்கும்போது, ரத்த ஓட்டம் அதிகமாகி, தொங்கும் கண்கள் இறுகும். கண்களுக்கு அடியில் ஏற்படும் நீர்ப்பை கரையும்.

பளபளப்பான உதட்டிற்கு :

சர்க்கரை தேன் இரண்டையும் சம அளவு எடுத்து உதட்டின் மீது தடவுங்கள். உதட்டில் உள்ள இறந்த செல்கள் அகன்று மென்மை ஏற்படும். அதேபோல் தேன் மற்றும் பாலாடை மற்றும் கசகச ஆகிய மூன்றையும் உதட்டில் தடவி வந்தால் சிவப்பான உதடு கிடைக்கும்.

கை கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற :

சர்க்கரை -2 டேபிள் ஸ்பூன்
தேன் மற்ற்ம் நீர்- தலா 1 டேபிள் ஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் நீர், தேன் மற்றும் சர்க்கரையை கலந்து அடுப்பில் அரை நிமிடம் கொதிக்க வையுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து, இந்த கலவையை முடி இருக்கும் பகுதியில் தேய்த்து கெட்டியான துணியை அதன் மீதி போர்த்தி, எதிர்புறமாக துணியை இழுங்கள்.

மென்மையான பாதங்கள் பெற :

வெதுவெதுப்பான நீரில் 3% ஹைட்ரஜன் பெராக்ஸைட் , சில துளி எலுமிச்சை சாறு, சமையல் சோடா அகியவற்றை கலந்து, அதில் கால்களை அமிழ்த்துங்கள்.

20 நிமிடங்கள் கழித்து கால்களை சர்க்கரையைக் கொண்டு ஸ்க்ரப் செய்தால், பாதத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று, பளிச்சிடும். வெடிப்பு மறைந்து பாதங்கள் மென்மையாகும்.

English summary

Homemade beauty tips to do everyday

Homemade beauty tips to do everyday
Story first published: Thursday, June 16, 2016, 18:43 [IST]
Desktop Bottom Promotion