உடலுக்கு பொலிவைத் தரும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி இருக்கிறீர்களா?

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நம்முள் பெரும்பலோனோர் வெளித்தோற்றமான முகம், கைகால் மட்டுமே அழகு படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இதனால்தான் உடலில் சருமம் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நிறமாக காணப்படும்.

Home made scrubs to get a soft skin

வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பொலிவுபடுத்திக் கொண்டால், சருமம் மிக மிருதுவாக இருக்கும். நச்சுக்கள் வெளியேறி, சருமம் புத்துயிர் பெறும். இங்கே கூறப்பட்டுள்ள ஒவ்வொரு ஸ்க்ரப்பும் ஒவ்வொருவிதமான பயனைத் தருகின்றன. ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வாரம் உபயோகிக்கலாம். இதனால் சருமம் மிக அழகாக மிளிரும்.

ரத்த ஓட்டம் அதிகரிக்க :

இது ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். உடல் முழுவதும் உள்ள சரும பாதிப்புகளை சரி செய்யும்.

தேவையானவை :

அரிசி மாவு - 1 கப்

புதினா இலை அரைத்தது - 1 கப்

கற்பூரம் - 1 டீஸ்பூன்

ஓட்ஸ் - 1 கப்

Home made scrubs to get a soft skin

எல்லாவற்றையும் கலந்து, அவற்றில் சிறிது ரோஸ் வாட்டரையும், சிறிது காய்ச்சாத பாலையும் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதனை குளிக்கும்போது உடல் முழுவதும் தேய்த்து, 5 நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், நாள் முழுவதும் புத்துணர்வோடு இருப்பீர்கள். சருமம் மென்மை பெறும்.

நச்சுக்கள் வெளியேற :

கடல் உப்பு - 1 கப்

ஆலிவ் எண்ணெய் - 1 கப்

ஜெரேனியம் எண்ணெய் - 10 துளிகள்.

இவற்றை ஒன்றாக கலந்து உடல் மற்றும் பாதத்தில் தேயுங்கள். 10 நிமிடம் கழித்து குளித்தால், நச்சுக்கள் வெளியேறிவிடும். பாதத்தில் உள்ள வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

Home made scrubs to get a soft skin

உடலுக்கு ஊட்டம் தர :

பாதாம் பவுடர் - 1 கப்

பார்லி மாவு - 1 கப்

அரிசி மாவு - 1 கப்

சந்தனப் பொடி - 2 டீஸ்பூன்

Home made scrubs to get a soft skin

இவற்றை பாலுடன் கலந்து உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 10 நிமிடம் கழித்து குளிக்கவும். இவை உடலுக்கு போஷாக்கு தரும். சுருக்கங்கள் மறைத்து போகும். இளமையான சருமத்தை பெறுவீர்கள்.

Home made scrubs to get a soft skin

வாரம் ஒரு முறை உடலுக்கு இந்த ஸ்க்ரப் உபயோகித்து வந்தால் உடலில் உண்டாகும் சரும அலர்ஜி, பாதிப்பு, கரும்புள்ளி, அழுக்குகள் எல்லாம் விடைபெறும். சருமம் மிளிரும். மிருதுவான மென்மையான சருமம் பெறுவீர்கள்.

English summary

Home made scrubs to get a soft skin

Home made scrubs to get a soft skin
Subscribe Newsletter