For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகைப் பாழாக்கும் கருவளையங்கள் வராமல் இருக்க சில வழிகள்!!!

By Maha
|

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் கண்கள் முக்கிய பங்கினை வகிக்கிறது. கண்கள் அழகாக பொலிவுடன் இல்லாவிட்டால், முகமே வாடிப் போய் காணப்படும். அதிலும் கருவளையங்கள் வந்தால், முகத்தின் அழகு முற்றிலும் கெட்டுப் போய்விடும். இந்த கருவளையங்கள் வருவதற்கு முதன்மையான காரணம், சரியாக தூங்காமல், நீண்ட நேரம் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி போன்றவற்றைப் பார்ப்பது தான்.

உங்களுக்கு கருவளையம் வருவது போல் இருந்தால், அவை தீவிரமாகாமல் இருக்க ஒருசிலவற்றை அன்றாடம் தவறாமல் செய்து வர வேண்டும். இங்கு கருவளையம் வராமல் இருக்க செய்ய வேண்டியவைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றி வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களைச் சுற்றி ஈரப்பதம்

கண்களைச் சுற்றி ஈரப்பதம்

கண்களைச் சுற்றியுள்ள இடம் மிகவும் மென்மையானது. முகத்திலேயே அது தான் மிகவும் மென்மையான இடமும் கூட. இவ்விடத்தில் எவ்வித எண்ணெய் சுரப்பிகளும் இல்லை. ஆகவே தினமும் இரவில் கண்களைச் சுற்றி ஜெல் அல்லது கோல்ட் க்ரீம் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண்களைச் சுற்றி கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

ஃபேஷ் வாஷ் வேண்டாம்

ஃபேஷ் வாஷ் வேண்டாம்

கண்களுக்கு போட்டுள்ள கண்மையை நீக்க, சாதாரணமாக முகத்தைக் கழுவ பயன்படுத்தும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஏனெனில் ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தும் போது, அவை கண்களுக்கு அடியில் அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். ஆகவே கண் மையை நீக்க ஈரமான பஞ்சினைக் கொண்டோ அல்லது டிஷ்யூ பேப்பரைக் கொண்டோ அல்லது ஸ்பெஷல் ஐ மேக்கப் ரிமூவரைக் கொண்டோ துடைத்து எடுக்கவும். முக்கியமாக மென்மையாக துடைத்து எடுக்க வேண்டும்.

கை வைத்தியம்

கை வைத்தியம்

தினமும் வெள்ளரிக்காய் துண்டை கண்களின் மேல் 10 நிமிடம் வைக்க வேண்டும். அல்லது நீரில் ஊற வைத்த டீ பேக்கை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், கண்களில் உள்ள சோர்வு நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் கருவளையங்கள் இல்லாமல் இருக்கும்.

நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

தூக்கமின்மை கருவளையங்களை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் 7-8 மணிநேர தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பால்

பால்

தினமும் 2-3 மூன்று முறை முகத்தை பால் கொண்டு துடைத்து, முக்கியமாக கண்களைச் சுற்றி துடைத்து எடுத்தால், அழுக்குகள் அனைத்தும் நீங்குவதோடு, பாலில் உள்ள இயற்கையான எண்ணெய் கண்களைச் சுற்றியுள்ள இடங்களுக்கு ஈரப்பதத்தை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ways Can Help You Get Rid Of Dark Circles

Here are some ways can help you get rid of dark circles. Take a look... 
Story first published: Friday, February 20, 2015, 17:39 [IST]
Desktop Bottom Promotion