புருவங்கள் அடர்த்தியாகவும் கருப்பாகவும் வளர சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வேண்டுமா? அதற்காக பல வழிகளை முயற்சித்துள்ளீர்களா? இருந்தாலும் எந்த ஒரு பலனும் கிடைத்த பாடில்லையா? அப்படியெனில் கீழே தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ள டிப்ஸ்களைப் பின்பற்றிப் பாருங்கள். மேலும் இந்த டிப்ஸ்கள் அனைத்தும் புருவங்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, கருமையாகவும் வளர உதவிப் புரியும்.

உங்கள் வீட்டில் பாட்டி இருந்தால், அவர்கள் முடி நன்கு வளர்வதற்கு விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துமாறு பரிந்துரைப்பார்கள். அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மையே. இங்கு புருவங்கள் கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர நம் பாட்டிகள் சொல்லும் ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், புருவங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும்.

தேங்காய் எணணெய்

தேங்காய் எணணெய்

தேங்காய் எண்ணெய் முடிக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் இரவில் புருவங்களை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் காட்டன் கொண்டு துடைக்க வேண்டும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இலை முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே பாதாம் எண்ணெய் கொண்டு வாரம் இரண்டு முறை மசாஜ் செய்தால் புருவங்களின் வளர்ச்சியைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் கூட முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். அதற்கு ஆலிவ் ஆயிலை சிறிது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் போது தினமும் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை புருவங்களில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தாலும், புருவங்கள் அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.

வெங்காய சாறு

வெங்காய சாறு

வெங்காய சாற்றினை காட்டனில் நனைத்து புருவங்களில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பாலும் புருவங்களின் வளர்ச்சியையும், அதன் அடர்த்தியையும் அதிகரிக்கும். அதற்கு தேங்காய் பாலை புருவங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கரு

முட்டையின் மஞ்சள் கருவைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், அதுவும் புருவங்களின் அடர்த்தி மற்றும் கருமையை அதிகரிக்கும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புருவங்களில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

பால்

பால்

தினமும் இரண்டு முறை பாலைக் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தாலும், புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Natural Tips For Thicker & Darker Eyebrows

Do you want to know how to make your eyebrow thicker and darker? Here are some of the tips you need to follow asap. Take a look at these natural ways.
Story first published: Friday, January 23, 2015, 16:54 [IST]
Subscribe Newsletter