ரகசியமாக உங்கள் பற்களில் கறையை உண்டாக்கும் உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அனைவருக்குமே முத்தான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலரும் பற்களின் வெண்மையை அதிகரிக்கும் வழிகள் என்னவென்று தேடி, அவற்றை பின்பற்றி வருவார்கள். அதில் தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவது முதன்மையான ஒன்று.

ஆனால் என்ன தான் பற்களின் வெண்மையை அதிகரிக்க தினமும் 2 முறை பற்களை துலக்கி வந்தாலும், உண்ணும் சில உணவுகள் நம் பற்களின் வெண்மையை கெடுத்துவிடும். அதிலும் நிறமுள்ள உணவுப் பொருட்கள் தான், பற்களின் அழகைக் கெடுக்கின்றன.

அந்த உணவுகள் என்னவென்று ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி, அந்த உணவுகளை அளவாக எடுப்பதோடு, அவற்றை உட்கொண்ட பின் நீரால் வாயை தவறாமல் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பற்களின் வெண்மையைப் பாதுகாக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோடா/குளிர்பானங்கள்

சோடா/குளிர்பானங்கள்

கருமையான குளிர்பானங்களில் அசிடிக் அதிகம் உள்ளது. அதிலும் சோடாக்களில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை அரித்து, கரைத்துவிடுகின்றன. மேலும் சோடாக்களில் சர்க்கரை அதிக அளவில் இருப்பதால், அவை பற்களை சொத்தையாக்குவதோடு, இதனை அதிகம் குடிக்க பற்களில் கறைகளும் படிந்துவிடுகின்றன.

காபி

காபி

பலருக்கு காபி தான் மிகவும் பிரியமான ஓர் காலை வேளையில் குடிக்கும் பானம். ஆனால் காபியை அதிகம் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் பற்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, காபியில் உள்ள நிறம் பற்களில் தங்கி, பற்களின் வெண்மை நிறத்தை பாதிக்கிறது. எனவே காபி குடிப்பதாக இருந்தால், குடித்த பின் தவறாமல் வாயை நீரில் கொப்பளியுங்கள்.

டீ

டீ

காபியைப் போன்றே டீயிலும் அசிட்டிக் அதிகம் உள்ளது. மேலும் இதனை சூடாக பருகும் போது, அதனால் பற்களில் கறை படிவதோடு, பற்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே டீ குடிக்க வேண்டுமென்று தோன்றினால், க்ரீன் டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை டீயை குடியுங்கள்.

தக்காளி சாஸ்

தக்காளி சாஸ்

தக்காளியை மையமாக கொண்ட உணவுப் பொருட்களை உட்கொண்டாலும், பற்களில் கறைகள் ஏற்படும். ஏனெனில் தக்காளியிலும் அசிட்டிக் உள்ளது. மேலும் இது அடர் நிறத்தில் இருப்பதால், இவை பற்களில் கறைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே தக்காளியை மையமாக கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டுமானால், அதற்கு முன் ப்ராக்கோலி போன்ற பற்களுக்கு பாதுகாப்பைத் தரும் உணவுப் பொருட்களை உட்கொண்டால், பற்களில் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

திராட்சை, பெர்ரி பழங்களைக் கொண்டு செய்யப்படும் பழச்சாறுகள் அடர் நிறத்தில் இருப்பதோடு, இவற்றிலும் அசிட்டிக் ஆசிட் உள்ளது. ஆகவே இவற்றைக் குடித்தாலும், பற்களில் கறைகள் ஏற்படும். எனவே பழங்களை சாறு வடிவில் எடுப்பதைத் தவிர்த்து, பழங்களாக சாப்பிடுங்கள். இதனால் பழங்களின் முழு சத்துக்களையும் பெறலாம்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் ரெட் ஒயின் அடர் நிறத்தில் இருப்பதால், இவற்றை குடிப்பதன் மூலம், பற்களில் கறைகள் படியக்கூடும். எனவே ரெட் ஒயின் குடித்த பின் நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் கறைகள் படிவதைத் தவிர்க்கலாம்.

சோயா சாஸ்

சோயா சாஸ்

கருமையான நிறத்தில் உள்ள சோயா சாஸ் கூட அதிக அசிட்டிக் தன்மை நிறைந்தவை. எனவே இவையும் பற்களில் கறைகளை ஏற்படுத்தும். ஆகவே சோயா சாஸ் நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

குழம்பு

குழம்பு

மசாலாப் பொருட்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் குழம்புகள், அடர் நிறத்தில் இருப்பதால், அவை பற்களில் கறைகள் ஏற்படுத்தக்கூடும். எனவே குழம்புகளால் பற்களில் கறைகள் ஏற்படாமல் இருக்க, உணவு உண்ட பின்னர், வாயை நீரினால் கொப்பளியுங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் நல்ல அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதால், இவற்றை உட்கொண்டாலும் பற்களில் கறைகள் படியும். சில நேரங்களில் பீட்ரூட் சாறு துணிகளில் படிந்தால் கூட, அந்த கறை போகாது. அவ்வளவு சக்தி வாய்ந்த கறையை ஏற்படுத்தும் திறன் பீட்ரூட்டில் உள்ளது. எனவே பீட்ரூட்டை உட்கொண்ட பின்னர், தவறாமல் பற்களை துலக்கிவிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods That Are Secretly Staining Your Teeth

Here are some of the foods that are secretly staining your teeth. Take a look...
Story first published: Monday, July 27, 2015, 11:54 [IST]