For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களே! பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி வைத்துக் கொள்ள சில அற்புதமான வழிகள்!!!

By Maha
|

ஒவ்வொரு பெண்ணுக்கும் சுத்தமாக இருப்பது தான் பிடிக்கும். அப்படி சுத்தம் என்று வரும் போது அதில் அனைத்துமே (பிறப்புறுப்பும்) அடங்கும். மேலும் பெண்கள் எப்போதுமே தங்களின் பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவ்விடத்தில் துர்நாற்றம் மட்டுமின்றி, தொற்றுகளும் ஏற்பட்டு தீவிரமான பிரச்சனையை சந்திக்கக்கூடும். குறிப்பாக பெண்கள் உறவில் ஈடுபடும் போது தன் துணை முகம் சுளிக்குமாறு தன்மீது எந்த ஒரு துர்நாற்றமும் வரக்கூடாது என்று அதிக சுத்தத்தைப் பின்பற்றுவார்கள்.

இப்படி பிறப்புறுப்பை சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ள நிறைய பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. ஆகவே எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாமல் இருக்க, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன வழி உள்ளது என்று ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இங்கு பெண்களின் பிறப்புறுப்பை துர்நாற்றமின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை இலைகள்

எலுமிச்சை இலைகள்

எலுமிச்சை மிகவும் சிறப்பான துர்நாற்றத்தைப் போக்க உதவும் பொருள். அத்தகைய எலுமிச்சையின் இலையைப் பயன்படுத்தி பிறப்புறுப்பை சுத்தம் செய்தால், துர்நாற்றம் வீசுவது நீங்கும். ஏனெனில் எலுமிச்சையின் இலையில் லிமோனின் என்னும் பொருள், பிறப்புறுப்பில் எவ்வித தொற்றுகளும் வராதவாறு நல்ல சிறப்பான பாதுகாப்பை வழங்கும். மேலும் எலுமிச்சையின் இலை பிறப்புறுப்பில் pH-ன் அளவை சீராக பராமரித்து, பிறப்புறுப்பை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை பெரிய டப்பில் உள்ள குளிக்கும் நீரில் சிறிது கலந்து, அந்த நீரில் 15 நிமிடம் உட்கார வேண்டும். இதனால் ஆப்பிள் சீடர் வினிகர் பிறப்புறுப்பை சுத்தம் செய்துவிடும். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிடிக் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அதனை 1 கப் நீரில் கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பிறப்புறுப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.

சீமைசாமந்தி எண்ணெய்

சீமைசாமந்தி எண்ணெய்

சீமைசாமந்தி எண்ணெய் கூட பிறப்புறுப்பில் வீசும் துர்நாற்றத்தைப் போக்க உதவும். அதற்கு 2 கப் நீரில் 1 துளி சீமைசாமந்தி எண்ணெய் சேர்த்து கலந்து, பின் அந்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு குளிக்கும் டப்பில் உள்ள நீரில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்த நீரில் 20 நிமிடம் உட்கார்ந்து வந்தால், பேக்கிங் சோடா உடலின் pH அளவை சீராக்கி, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவது நீங்கும்.

தயிர்

தயிர்

தினமும் தயிரை பிறப்புறுப்பில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு. துர்நாற்றமும் குறையும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகரை குளிக்கும் டப்பில் உள்ள நீரில் கலந்து, அதில் சிறிது நேரம் உட்கார வேண்டும். இதன் மூலமும் துர்நாற்றத்தைப் போக்க முடியும்.

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயிலும் பிறப்புறுப்பில் இருந்து வீசும் துர்நாற்றத்தைப் போக்கும். அதற்கு ஒரு காது சுத்தம் செய்யும் பட்ஸை, ஆலிவ் ஆயில் மற்றும் சிறிது டீ-ட்ரீ ஆயிலில் நனைத்து, பிறப்புறுப்பினுள் வைத்து 1 மணிநேரம் ஊற வைத்து வர வேண்டும்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் சாற்றினை நீரில் கலந்து, அதனைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கலாம்.

 வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது வெந்தயத்தை ஊற வைத்த நீரைக் கொண்டு பிறப்புறுப்பைக் கழுவினாலோ, .துர்நாற்றம் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

AWESOME: 10 Natural Vaginal Washes

These natural vaginal washes will keep your little girl fresh and clean at all times. Here is how you can prepare these homemade genital washes.
Desktop Bottom Promotion