பெண்களே! மீசை போல் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க அருமையான வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சில பெண்களின் உதட்டிற்கு மேல் மீசை போன்று முடி வளர ஆரம்பிக்கும். இப்படி பெண்களுக்கு மீசை வருவதற்கு முக்கிய காரணம் ஹார்மோன்கள் தான். பெண்களின் உடலில் ஆண் ஹார்மோன் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்தால், பெண்களுக்கு மீசை வர ஆரம்பிக்கும். பெண்களுக்கு மீசை வர ஆரம்பித்தால், அவர்களை அனைவரும் வித்தியாசமாக பார்க்க ஆரம்பிப்பார்கள். எனவே பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று உதட்டிற்கு மேல் உள்ள முடியை பிடுங்கி நீக்குவார்கள்.

பொதுவாக முடியை பிடுங்கினால் அவ்விடத்தில் முடி அதிக அளவில் வளர ஆரம்பிக்கும். எனவே உதட்டிற்கு மேல் வளரும் முடியை பிடுங்காமல், வீட்டில் இருக்கும் ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி, உதட்டிற்கு மேல் மாஸ்க் போட்டு வந்தால், அவ்விடத்தில் முடியின் வளர்ச்சி தடைப்பட்டுவிடும்.

முக்கியமாக எந்த ஒரு பொருளை முகத்தில் பயன்படுத்தும் முன்பும், கையில் பயன்படுத்தி எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால் பின் பயன்படுத்த வேண்டும். சரி, இப்போது உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

தயிரில் கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கையில் தண்ணீரை நனைத்து உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால் உதட்டின் மேல் வளரும் முடியை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

சர்க்கரை

சர்க்கரை

எலுமிச்சை சாற்றில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாணலியில் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அதனை இறக்கி குளிர வைத்து, காட்டன் பயன்படுத்தி உதட்டின் மேல் தடவி வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இதனாலும் முடியை நீக்கலாம்.

மைதா/கோதுமை மாவு

மைதா/கோதுமை மாவு

உதட்டின் மேல் வளரும் முடியை நீக்க மஞ்சள் மிகவும் சிறப்பான பொருள். அதற்கு 1 சிட்டிகை மஞ்சள் பொடியை மைதா/கோதுமை மாவுடன் சேர்த்து, பால் ஊற்றி பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 1/2 மணிநேரம் வறட்சியடையும் வரை ஊற வைக்க வேண்டும். பின் கையை நீரில் நனைத்து, காய்ந்த பகுதியை வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும்.

பால்

பால்

மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அந்த கலவையை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் அதனை மேலும் கீழுமாக தேய்த்து கழுவ வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

உதட்டிற்கு மேல் மீசை போன்று வருவதை நீக்க முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் மைதாவுடன், சர்க்கரை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து, உதட்டிற்கு மேல் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையை சாறு எடுத்து, அதில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, அதனை உதட்டிற்கு மேல் பகுதியில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Home Remedies To Remove Upper Lip Hair Naturally

Want to remove your upper lip hair naturally using home remedies? Then here are some of the tips to follow.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter