For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளிர்கால உடல் பராமரிப்பு டிப்ஸ்கள்...

By Ashok CR
|

குளிர்காலத்தில் ஆண்களும் பெண்களும் சந்திக்கும் ஒரு பிரச்னை, தோலின் உலர்தன்மை. கோடை காலத்தில் காற்றில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும். இதனால் நமது உடலின் வெளிப்பகுதி, போதுமான அளவு நீர்ச்சத்தை பெற்று, தோல் உலர்வதை தடுக்கிறது. குளிர்காலத்தில் மக்களுக்கு, பொதுவாக சருமத்தில் அரிப்பு மற்றும் சருமம் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இதுப்போன்று சுவாரஸ்யமானவை: குளிர்காலத்தில் சருமம் அழகாக ஜொலிப்பதற்கான சில அழகு இரகசியங்கள்!!!

இதற்காக குளிர்காலத்தில் சரும பராமரிப்பு தயாரிப்புகளை, சரியாக தேர்வு செய்து உபயோகிக்க வேண்டும். இந்த பிரச்சனை பெண்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்களையும் விடுவதில்லை. இப்போது குளிர்காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உடல் பராமரிப்பு குறிப்புகளைப் பார்ப்போம்.

Top Winter Body Care Tips For Men And Women

குளிர்காலத்திற்கான உடல் பராமரிப்பு டிப்ஸ்:

நிறமான சருமத்திற்கு, இயற்கையான நீர் சத்துள்ள பொருட்களை சருமத்தில் தடவ வேண்டும். குளிர்காலத்தில் பொதுவாக எல்லோரும் வெந்நீரிலையே குளிக்கின்றனர். இதனால் ஆண்கள், பெண்கள் என இரு பாலினரின் சருமமும் பாதிக்கப்படுகிறது. வெந்நீர், நமது தோலில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சி, சருமத்துக்கு வறட்சியையும், உலர் தன்மையையும் தருகிறது. குளிர்காலத்தில் அடிக்கடி குளிப்பதோ, நீண்ட நேரம் குளிப்பதோ கூடாது. சருமத்தில் வெடிப்பு உள்ள இடத்தில், பெட்ரோலியம் ஜெல்லியை தடவ வேண்டும். படுக்கைக்கு செல்லும் முன் பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவ வேண்டும். குளிர்ந்த வாடைக் காற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்க, பெரும்பாலும் நமது சருமத்தை கம்பளியாலோ, அல்லது துணியாலோ மூடிக் கொள்ள வேண்டும். உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளையே குளிர்காலத்தில் அணிய வேண்டும்.

குளிர்காலத்தில் உதடுகளுக்கான பராமரிப்பு:

குளிர்காலத்தில் நிலவும் கடுமையான சீதோஷ்ண நிலையில் இருந்து உதடுகளை காக்க லிப் பாம்களை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும். முடிந்தவரை வீட்டு தயாரிப்புகளான லிப் ஸ்கிரப்பை, பயன்படுத்துவதே உதடுகளுக்கு நல்லது. இதை பயன்படுத்தி தேய்ப்பதன் மூலம்,உதடுகளில் உள்ள இறந்த செல்கள் நீக்கப் படுகின்றன. நீர் சத்துக்காக, அதிக அளவு தண்ணீரை அருந்த வேண்டும். பெரும்பாலான மக்கள், உதடுகளுக்கு நீர்சத்து அளிப்பதாக. நினைத்துக் கொண்டு, உமிழ் நீரால் உதடுகளை நனைப்பர். இது முற்றிலும் தவறான கணிப்பு. இவ்வாறு செய்வதால் உதடுகள் மேலும் வற்றி, உலர்ந்து போய் வெடிப்புகள் உண்டாகும். இதனால் யாரும் உமிழ் நீரால் உதடுகளை நனைக்கக் கூடாது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பாத பராமரிப்பு டிப்ஸ்:

பெரும்பாலான மக்கள் குளிர்காலத்தில், பாத வெடிப்பால் அவதிப் படுகின்றனர். நீங்கள் உங்கள் பாதத்தையும், குதிகாலையும் பராமரிக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. நீங்கள் ஒரு கிண்ணத்தில், இளஞ்சூடான நீரில், எலுமிச்சை சாற்றை கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் 30 நிமிடங்கள் உங்கள் பாதங்களை வைக்க வேண்டும். பிறகு கல் அல்லது சொரசொரப்பான தரையில் கால்களை தேய்ப்பதன் மூலம், பாதத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கப் படுகின்றன. பெட்ரோலியம் ஜெல்லி அல்லது சரும பராமரிப்பு க்ரீம்களை பாதத்தில் தடவலாம். க்ரீமை தடவி விட்டு, சாக்ஸ் அணிந்து கொள்வதன் மூலம், பாத வெடிப்புகளில் காற்று புகுவதை தவிர்க்கலாம்.

குளிர்காலத்திற்கான தலைமுடி பராமரிப்பு டிப்ஸ்:

குளிர்காலத்தில் நிலவும் அதிக அளவிலான குளிரானது, கூந்தலை உலர்வாகவும், பலமில்லாததாகவும் ஆக்குகின்றன. இதனால் பொதுவாக குளிர்காலங்களில் முடிகொட்டுதல் மற்றும் பூச்சி வெட்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் தலை முடியை பராமரிப்பது மிகவும் அவசியமாகிறது. பெரும்பாலும் குளிர்காலங்களில் தான் பொடுகு தொல்லை ஏற்படுகிறது. பொடுகை முற்றிலுமாக நீக்குவதற்கு, தலை குளிப்பதற்கு முன் தலை முடியின் வேர்க்கால்களில் எலுமிச்சையை நன்கு தடவ வேண்டும். குளிர்காலத்தில் அடிக்கடி தலை குளித்தலை, தவிர்க்க வேண்டும். அடிக்கடி தலை குளித்தால் தலைமுடி உலர்ந்து, முறிந்து விடும். இயற்கையான எண்ணெய்யை தடவி தலைமுடியை மசாஜ் செய்ய வேண்டும். இது தோல் அடுக்குகளுக்குள் நுழைந்து முடி வளர்ச்சியை தூண்டும்.

English summary

Top Winter Body Care Tips For Men And Women

During the winter months, people suffer from skin conditions like raw face, dryness, itchy skin, itchy skin etc. This is not only true for ladies; rather men also face the same problem. Here we gave some winter body care tips for both men and women. Take a look.
Desktop Bottom Promotion