விரைவில் முதுமைத் தோற்றத்தை பெற வழிவகுக்கும் செயல்கள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

காலத்தால் தவிர்க்க முடியாத செயல்பாடுகளில் ஒன்றாக மூப்பு என்னும் முதுமை உள்ளது. இது வாழும் உயிர்கள் அனைத்துக்கும் பொதுவான இயற்கை செயல்பாடாகும். ஆனால், உண்மையான வயதை விட அதிகமான மூப்புடைய தோற்றத்திற்கு உங்களை இட்டுச் செல்லக்கூடிய விஷயங்களும் உள்ளன.

இவற்றை நம்மால் தவிர்த்திட முடியும் என்பது தான் ஆறுதலான சங்கதி. அதாவது, நீங்கள் முயன்றால், வயதாகும் அல்லது மூப்படையும் செயல்பாட்டின் வேகத்தை மட்டுப்படுத்திட முடியும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நீண்ட நாட்கள் இளைஞராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

சரி, இப்போது விரைவில் முதுமைத் தோற்றத்தை அடையும்படி நாம் மேற்கொள்ளும் செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எரிச்சல் தரும் உணவுகள்

எரிச்சல் தரும் உணவுகள்

காய்கறி எண்ணெய்கள், வெண்ணெய், இறைச்சிகள், கோதுமை ரொட்டி அல்லது சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிய நீண்ட நேரத்திற்கு எரிச்சலைத் தரக்கூடிய உணவுகளை தினசரி உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருந்தால், உங்களுடைய சருமம் வயதாவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த உணவுகள் உங்களுடைய உடலுக்கு எரிச்சலைத் தூண்டி, சுருக்கங்கள் ஏற்படுவதை விரைவுபடுத்துகின்றன. இவ்வாறு முன்கூட்டியே மூப்படைவதை தவிர்க்க விரும்பினால், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் (Alpha-Linolenic Acid) நிரம்பிய உணவுகளான ஆளி விதைகள், அவகேடோ, சால்மன் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களுடைய தோலின் மென்மையும், பொலிவும் பாராமரிக்கப்படும்.

மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் இழப்பு

மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் இழப்பு

உடலிலுள்ள பிட்யூட்டரி சுரப்பியில் மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் தோல் மற்றும் சதையின் அமைப்பை பராமரிக்கும் கொலாஜென்னுடன் சேர்ந்து செயல்படுகிறது. உங்களுடைய வயதில் உடலில் கொலாஜென் உற்பத்தியாவது குறையும் போது, அதன் மூலம் தோல் பகுதி தொய்வடைவதும், மெலிதாவதுமான மூப்பு செயல்பாடுகள் நடக்கத் துவங்குகின்றன.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் ஒரு இயற்கையான சிறுநீர் பிரிப்பு திரவமாகும். எனவே, நீங்கள் எவ்வளவு அதிகமாக ஆல்கஹால் சேர்க்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீர் இழப்புக்கு ஆளாவீர்கள். உடலிலுள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சி வெளியே அனுப்புவதோடு மட்டுமல்லாமல், தோலில் சுருக்கங்கள், அரிப்புகள் ஆகியவற்றையும் ஆல்கஹால் ஏற்படுத்தி, உங்களை மேலும் வயதானவராக காட்சியளிக்கச் செய்கிறது.

மன அழுத்தம்

மன அழுத்தம்

தொடர்ந்து வருத்தப்படுவதும், பயப்படுவதும் அல்லது மன அழுத்தத்துடன் இருப்பதும் உங்களை வெகு வேகமாக மூப்படையச் செய்துவிடும். பணி தொடர்பான மன அழுத்தம் கூட நமது டி.என்.ஏ-வில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன என்று 2012-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. மேலும் டி.என்.ஏ-வில் உள்ள டெலொமியர் என்ற பகுதியை ஆராய்ச்சியாளர்கள் அளவீடு செய்த போது, பணி தொடர்பான மன அழுத்தம் உள்ளவர்களுடைய டெலொமியர்கள் மிகவும் நீளம் குறைவானவையாக இருந்ததை கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் செல்கள் இறப்பதும், சேதமடைவதும் ஏற்படுவதால் மூப்பு வேகமாக வந்து தொற்றிக் கொள்கிறது. மேலும், மன அழுத்தத்தின் காரணமாக உங்களுடைய மூளையின் வயது அதிகரிக்கும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் உங்களுடைய தூங்கும் வழக்கம் பாதிக்கப்படும். இவை அனைத்தும் சேர்ந்த விளைவாக மூப்பு அரவணைக்கும்.

மிகவும் குறைவான தூக்கம்

மிகவும் குறைவான தூக்கம்

அமெரிக்காவில் உள்ள வயது வந்த நபர்களில் மூன்றில் ஒருவர் போதுமான அளவு இரவு உறக்கத்தை அனுபவிப்பதில்லை. இதன் மூலம் உடலில் எடை அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், கவனச் சிதறல், தொய்வடைந்த சருமம் மற்றும் நினைவாற்றல் குறைதல் போன்ற பல்வேறு மோசமான விளைவுகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

எனவே, ஒரு நாளைக்கு இரவில் மட்டும் 7 முதல் 9 மணி நேரங்கள் உறங்குவதற்கு முயற்சி செய்யுங்கள். ஆனால் அதிக நேரம் உறங்குவதாலும் கூட முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும்' என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறான கோடுகள் மற்றும் சுருக்கங்களை தவிர்ப்பதற்கான சிறந்த வழி மல்லாந்து முதுகை தரையில் படுமாறு வைத்து படுப்பதும், மென்மையான தலையணைகளை வாங்கி பயன்படுத்துவதும் தான்.

சூரிய குளியல்

சூரிய குளியல்

சூரிய ஒளியை உடலில் படச் செய்வது ஒரு சுகமான அனுபவமாக இருந்தாலும், சூரிய குளியல் அல்லது உடலை காய வைத்தல் போன்று உங்களுடைய சருமத்திற்கு செய்யும் மோசமான விஷயங்கள் வேறெதுவும் இல்லை. இது புற்றுநோய் வரும் ஆபத்தை தருவதுடன், உடலில் அதிகமாக படும் புறஊதாக்கதிர்கள் படுவதால் சரும செல்களும், இரத்த நாளங்களும் குழைந்து போய் காணப்படும். இதனால் தான் வெயிலில் நீண்ட நேரம் வேலை செய்பவர்கள் உலர்ந்து போய் காணப்படுவார்கள். மேலும், இதன் காரணமாக உடலில் ஏற்படும் சிறு கீறலும் கூட பெரும் காயமாக மாறலாம்.

புகைப்பழக்கம்

புகைப்பழக்கம்

புகைப் பழக்கத்தால் இதய நோய், மலட்டுத்தன்மை, சிறுநீரக புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் என எண்ணற்ற ஆபத்துக்கள் இருந்தாலும், இவற்றுடன் மூப்படையும் செயல்பாடும் கைக்கோர்க்க தவறுவதில்லை. தொடர்ந்து சிகரெட் பிடிப்பதால் சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகள் வருகின்றன. அது மட்டுமல்லாமல் நீண்ட நேரத்திற்கு சருமத்தில் ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால், சருமம் வெளிறிப் போய், ஒழுங்கற்ற வண்ணமுடைய தோல்பகுதி உருவாகும். புகைப்பிடிப்பதும், புகையை உள்ளிழுப்பதும் கொலாஜென்களை உடைத்து, சருமத்தை தொய்வடையச் செய்கின்றன., இது உங்களுடைய முகத்தில் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், மேல் புஜம் மற்றும் மார்பகங்களிலும் சதைகளை தொய்வடையச் செய்துவிடும். இறுதியாக, புகைப்பிடிப்பவர்கள் தங்களுடைய கைகளை நெடுநேரத்திற்கு வாய்ப்பகுதியை நோக்கியவாறு வைத்திருப்பார்கள், இதன் மூலம் கைகளிலும் சுருக்கங்கள் ஏற்படும்.

கண் நலம் காப்பீர்

கண் நலம் காப்பீர்

ஆரம்பத்திலேயே இதனை செய்வது நல்ல பழக்கம். ஏனெனில் உங்களுடைய கண்களைச் சுற்றியுள்ள தோல் பகுதி மிகவும் மெலிதானது மற்றும் அங்கு வெகு சில எண்ணெய் சுரப்பிகளே உள்ளன. ஆகவே சிறிதளவு TLC கொண்டு உங்களுடைய கண்களை தடவிக் கொடுங்கள் மற்றும் தினசரி பயன்படுத்தும் கண் கிரீம்களில் பெப்டைட்கள் உள்ளதை உறுதிப்படுத்தி வயதாவதை தள்ளிப் போடுங்கள். இந்த பெப்டைட்கள் கொலாஜென்களை தூண்டவும் மற்றும் கோடுகளை தவிர்க்கவும் உதவும். எனினும் லேபிள்களை பரிசோதிக்கத் தவற வேண்டாம். வீக்கங்கள், கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கண் வளையங்களை குறைக்கும் பிற மூலப்பொருட்களை கவனியுங்கள். காப்ஃபைன், நிக்கோடினிக் அமிலம் (வைட்டமின் பி நியாசினின் ஒரு வகை) மற்றும் ஐலிஸ் (Eyeliss) ஆகியவற்றை கண்ணின் கீழுள்ள வளையங்கள் பெற்றிருக்கின்றன.

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்

உடற்பயிற்சி செய்யாமலிருத்தல்

அதிகமான ஓடும் பயிற்சியால் தோல் பகுதி தொய்வடைந்தால், அது 'ரன்னர் ஃபேஸ்' என்று அழைக்கப்படும். இது அதிகமான ஆக்சிஜன் அல்லது ப்ரீ ராடிக்கல் சேதத்தை ஏற்படுத்தி, கொலாஜென்களை சிதைக்கிறது என்று வல்லுநர்கள் நம்புகிறார்கள். நமது இதயத்தின் வேகத்தில் 40 முதல் 60 சதவீதம் வரை உடற்பயிற்சி செய்வது மிதமான உடற்பயிற்சியாகும். இது ஆரோக்கியமான எடை, இதயம், நுரையீரல் ஆகியவற்றை பராமரிக்க உதவுவதுடன், சருமத்திற்கும் தேவையான புத்துணர்வை அளிக்கிறது. நீங்கள் 90 நிமிடங்களுக்கு ஓடினாலோ அல்லது 70 முதல் 80 சதவீத இதய ஓட்டத்திற்கு ஒடினாலோ மட்டும் தான் சருமத்தில் சேதாரங்கள் ஏற்படும். எனவே, உங்களுடைய உடற்பயிற்சிகளை குறைவான நேரத்திற்கும், வியர்வையுடனும் நீங்கள் முடிவுக்கு கொண்டு வந்தால், உங்களுக்கு கிடைக்கும் நற்பலன்கள் பல. இந்த பலன்களில் மூப்படைவதை தள்ளிப் போடுவதும், எடை குறைப்பதும் உள்ளடக்கம்.

தவறான மேக்கப்

தவறான மேக்கப்

மேக்கப் மூலம் குறைபாடுகளை மறைக்கவும் மற்றும் வயதாவதையும் மறைத்திட முடியும். ஆனால் தவறான மேக்கப்பை பயன்படுத்தும் போது வயது அதிகமாக உள்ள தோற்றத்தை ஏற்படுத்தி விடவும் முடியும். சில ஆழமான ஃபௌன்டேஷன்களும், பவுடர்களும் கண்கள் மற்றும் வாய்ப் பகுதிகளில் உள்ள சுருக்கங்களில் போய் அமர்ந்து கொண்டு, புதிதாக கோடுகளை ஏற்படுத்தி மூப்படைந்த தோற்றத்தை பரிசாகத் தருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things That Make You Older

Ageing is a process that we can't stop by time. We can define it as a natural process of all living beings.
Subscribe Newsletter