Latest Updates
-
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
எப்போதும் இளமையான தோற்றத்துடன் காட்சியளிப்பதற்கான இரகசியம்!!!
வயது அதிகரிப்பதால் ஏற்படும் சரும சுருக்கத்தை தடுக்க வேண்டுமா? எப்போதும் இளமையுடன் நற்பதமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தெரியவில்லையா? அதற்கு சில வழிகள் உள்ளன.
வயது என்பது வெறும் எண்ணிக்கை என்று சொல்வார்கள். அது ஓர் அளவிற்கு உண்மையும் கூட. உங்களுக்கு வயதாவை எதிர்த்து, நற்படத்துடன் இளமையான தோற்றத்துடன் இருக்க இன்னும் சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆற்றலுள்ள தோற்றத்துடன் வாழ்க்கை முழுவதும் காட்சியளிக்க சில எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். எளிய வழிமுறைகளான இவை அனைத்தையும் அன்றாடம் நீங்கள் சுலபமாக செய்யலாம்.

நேர்மறையாக சிந்தியுங்கள்
உங்கள் மனரீதியான நிலையை உங்கள் ஒட்டுமொத்த தோற்றம் வெளிக்காட்டிவிடும். அதனால் எப்போதுமே நேர்மறையான எண்ணங்களை கொண்டிருங்கள். எதிர்மறையான சிந்தனைகள் உங்களுக்கு சோர்வை உண்டாக்கி சீக்கிரமே வயதான தோற்றத்தை உண்டாக்கி விடும்.

தியானம்
தினமும் வெறும் 5 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டாலே போதுமானது. அது உங்களுக்கு மிகப்பெரிய உதவியை உண்டாக்கும். தியானத்தில் ஈடுபட்டால் உங்கள் மனம் தெளிவடைவது மட்டுமல்லாமல், உங்கள் எண்ணங்களை நிலைப்படுத்தி நேர்கோட்டில் கொண்டு வரும்.

கண்களுக்கு க்ரீம்
எப்போதும் நற்பதமாக இருக்க கண்களை கசக்காமல், சில க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட அழகு சாதன பொருட்கள் பெண்களுக்கு மட்டுமே என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஏனெனில் ஆண்களுக்கும் நிறைய அழகு சாதனப் பொருட்கள் தற்போதை மார்கெட்டில் கிடைக்கின்றன.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுதல்
விரைவிலேயே வயதாவதற்கு புகை பிடிக்கும் பழக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. அது நோய்களை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் சருமத்திற்கு எரிச்சலை உண்டாக்கி, உடலில் ஆக்சிஜன் மற்றும் நீர்ச்சத்தை குறைத்துவிடும். இதனால் அதிக சுருக்கங்கள் உண்டாகும்.

சர்க்கரை உட்கொள்ளுதலை குறைக்க வேண்டும்
சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் உட்கொண்டால், உடல் எடை சற்று குறைவதுவோடு, சரும சுருக்கங்களை குறைக்கவும் உதவும். சர்க்கரையை அதிக அளவில் உட்கொண்டால், க்ளைக்கோஜன் என்ற செயல்முறை செயல்படுத்தப்படும். இதனால் சுருக்கங்கள் உண்டாகும்.



Click it and Unblock the Notifications
