For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிப் பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்!!!

By Super
|

கர்ப்பம் தரிப்பது என்பது ஒரு உயிரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்துவது மட்டுமல்ல; அது, பெண்கள் மறு ஜென்மத்துக்காகத் தயாராகும் ஒரு செயலும் தான்!

இந்த கர்ப்ப காலத்தில் ஒரு பெண், தன் குழந்தை பிறக்கும் நாளை எதிர் நோக்கி ஆவலுடனும், ஆச்சரியத்துடனும் காத்துக் கொண்டிருப்பது இயல்பு தான். ஆனாலும், இந்தக் காலத்தில் அவர்கள் தங்கள் அழகையும் எப்போதும் போல் வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வுகளும், கவலைகளும் உடல் நலப் பிரச்சனைகளும் அவர்கள் புற அழகைப் பாதித்துவிடக் கூடாது.

கர்ப்ப காலத்தில் இயல்பாகவே பெண்களின் மேனியில் ஒருவிதமான பளபளப்பு தென்படும். அவர்களுடைய தலைமுடி நீண்டு, அடர்ந்து வளரும்; நகங்களும் நல்ல வலுவாக இருக்கும். இந்தக் காலத்தில் அவர்கள் தங்கள் அழகை இன்னும் அழகாக வைத்துக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேட்ச் சோதனை

பேட்ச் சோதனை

இந்த 9-10 மாத காலத்தில் பெண்களின் உடலில் இதுவரை இல்லாத அளவுக்கு பலவிதமான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. முதலில், அவர்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்களை பேட்ச் சோதனை செய்து கொள்வது நல்லது.

நிறைய நீர் அருந்த வேண்டும்

நிறைய நீர் அருந்த வேண்டும்

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட இடைவெளிகளில் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். அதுதான் அவர்களுடைய சருமத்தை இலகுவாகவும் பளபளப்பாகவும் வைக்கும். மேலும், தோல் சுருக்கங்களும் அரிப்பும் கூட இதனால் குறையும்.

தெரிந்த பொருள்கள்

தெரிந்த பொருள்கள்

பெண்கள், தங்கள் வயிறு, மார்பு உள்ளிட்ட சருமத்தில் தடவும் பொருள்களில் என்னென்ன கலந்துள்ளது என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவர்கள் தங்களுக்கு நன்கு தெரிந்து பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

இயற்கைப் பொருட்கள்

இயற்கைப் பொருட்கள்

இயற்கை சார்ந்த அழகு சாதனப் பொருள்களை கர்ப்பிணிகள் பயன்படுத்துதல் நலம். டீ ட்ரீ எண்ணெய், சாமந்தி, சிட்ரஸ் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தினால், கர்ப்ப காலத்தில் மட்டுமல்லாது காலாகாலத்திற்கும் அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மெனிக்யூர், பெடிக்யூர்

மெனிக்யூர், பெடிக்யூர்

கர்ப்பிணிகள் தங்கள் கை-கால்களை சுத்தமாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, கடைசி சில மாதங்களில், அழகு நிலையங்களில் செய்யப்படும் மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து கொள்வது சுகாதாரமானது, ஆரோக்கியமானது. எந்தவிதமான தொற்றுக்களும் ஏற்படாது.

நக அழகு

நக அழகு

கெமிக்கல் கலக்காத நெயில் பாலிஷ் பயன்படுத்துவது நல்லது. தற்போது நிறைய நெயில் பாலிஷ்களில் கெமிக்கல்கள் மற்றும் நிறமூட்டிகள் அதிகம் பயன்படுத்துவதால், அவற்றை கர்ப்பிணிகள் பயன்படுத்துவது ஆபத்தானது. குறிப்பாக டிப்யூட்டைல் ப்தலேட், டொலுவீன், ஃபார்மால்டிஹைடு, ஃபார்மால்டிஹைடு ரெசின் மற்றும் சூடம் ஆகிய ரசாயனங்கள் கலக்காத நக பாலிஷைப் பயன்படுத்த வேண்டும்.

பிரச்சனைக்குரிய இயற்கை பொருட்கள்

பிரச்சனைக்குரிய இயற்கை பொருட்கள்

ஆனாலும் ரோஸ்மேரி, மல்லிகை மற்றும் கிராம்பு ஆகியவற்றாலான அழகுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை அதிகரிக்கும்.

வேக்ஸ் வேண்டாம்

வேக்ஸ் வேண்டாம்

கர்ப்பிணிகளின் சருமம் மிகவும் சென்ஸிட்டிவ் என்பதால், அவர்கள் வேக்ஸ் செய்யக் கூடாது.

செண்ட்டுகளுக்கும் நோ

செண்ட்டுகளுக்கும் நோ

மேலும், கர்ப்ப காலத்தில் செயற்கையான வாசனைத் திரவியங்களைத் தூரத்தில் தள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnant Woman’s Beauty Guide

What you need to know about skin care and makeup during pregnancy. You've found out that a baby is on its way and you can't contain the excitement. But what about your makeup and skin care regime for the crucial months ahead?
Story first published: Saturday, July 12, 2014, 19:20 [IST]
Desktop Bottom Promotion