அழகுப் பயன்பாட்டில் துலுக்கச் சாமந்தி செய்யும் சில அற்புதங்கள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

காலண்டுலா அல்லது பாட் மாரிகோல்ட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் துலுக்கச் சாமந்தி, மிகவும் பழங்கால மூலிகைகளுள் ஒன்றாகும். மத்தியத் தரைக்கடல் பகுதி, மேற்கு ஐரோப்பா மற்றும் தென்மேற்கு ஆசியாவில் துலுக்கச் சாமந்தி அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

துலுக்கச் சாமந்தியில் உள்ள கரோட்டினாய்டுகள், க்ளைகோசைட்டுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஸ்டெரோல்கள் ஆகியவை சருமத்தின் பளபளப்பை அதிகரிப்பதில் வல்லவையாகும். க்ரீம், சோப்பு மற்றும் அரோமாதெரபி எண்ணெய் ஆகிய வடிவங்களில் இது கடைகளில் கிடைக்கும்.

அழகுப் பயன்பாட்டில் துலுக்கச் சாமந்தி செய்யும் சில அற்புதங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தோல் எரிச்சல்

தோல் எரிச்சல்

துலுக்க சாமந்தியில் உள்ள அமிலங்கள் மற்றும் ஸ்டெரோல்ஸ் ஆகியவை சருமங்களில் ஏற்படும் எரிச்சல்களை ஆற்றும் தன்மை கொண்டவை. பூச்சிக் கடி, தீப்புண் உள்ளிட்ட சில தோல் காயங்களின் மேல் துலுக்கச் சாமந்தி க்ரீமைத் தடவினால், அது எரிச்சலைக் குறைத்து அக்காயங்களையும் விரைவில் ஆற்றும்.

முகப்பருக்கள்

முகப்பருக்கள்

முகத்தில் அவ்வப்போது தோன்றும் பருக்களின் மீது துலுக்கச் சாமந்தியிலான க்ரீம் மற்றும் சோப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

உலர் சருமம்

உலர் சருமம்

துலுக்க சாமந்தியில் உள்ள எண்ணெய் பொருள்கள், சருமத்தை மிருதுவாக்குகின்றன. மேலும், உலர்ந்து இருக்கும் சருமத்தையும் ஈரப்பதமாக்குகின்றன. இதைத் தொடர்ந்து நீங்கள் பயன்படுத்துவதால் நாள்பட்ட சருமப் பிரச்சனைகள் நீங்கும்.

பளபளப்பான சருமம்

பளபளப்பான சருமம்

துலுக்க சாமந்தி எண்ணெயைத் தடவும் பகுதிகளில் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் எளிதாகக் கரைக்கப்படுகின்றன. உடலின் உள்புறம் சுத்தமாவதால், வெளிப்புறத்தில் உள்ள சருமம் தானாகவே ஒரு பளபளப்பை அடைந்துவிடுகிறது.

கண் சுருக்கம்

கண் சுருக்கம்

சில சமயம் கண்களைச் சுற்றியுள்ள தோல் சுருங்கி, வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்தும். இப்பிரச்சனையைச் சரிசெய்ய துலுக்க சாமந்தியில் உள்ள பைட்டோ-கான்ஸ்டிட்யூவண்ட்ஸ் உதவுகின்றன. இதனால் வயோதிகம் மறைந்து, இளமையான முகப் பொலிவு ஏற்படும்.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

துலுக்க சாமந்தி மலர்களைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அது குளிர்ந்த பின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதைத் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். காற்றுப் புகாத பாத்திரத்தில் இந்த நீரை வைத்து, ஃபிரிட்ஜில் வைத்தும் நாள்பட பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

ஆலிவ் எண்ணெயில் துலுக்கச் சாமந்தி இதழ்களை 10 நாட்கள் வரை சூரிய ஒளியில் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி வருதல் நலம். இதையும், ஃபிரிட்ஜில் வைத்து சுமார் ஓராண்டு வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பு

குறிப்பு

* துலுக்க சாமந்தி கிடைக்காதவர்கள், கடையில் கிடைக்கும் அதன் க்ரீமை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆன்லைனில் கூட வாங்க முடியும்.

* கர்ப்ப காலம் மற்றும் குழந்தைகளுக்குப் பாலூட்டும் காலங்களில் துலுக்கச் சாமந்தியைத் தவிர்த்தல் நல்லது.

* உஷார்... துலுக்கச் சாமந்தி சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Marigold Beauty Benefits

When it comes to skincare, Calendula or pot marigold is one of the oldest known herbs. Pot marigold – which is quite different from the ornamental marigold – grows widely in the Mediterranean region, Here are a few beauty benefits of marigold or calendula.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter