கருப்பான 'அந்த' இடத்தைப் பளபளப்பாக மாற்ற 8 இயற்கை வழிகள்!!

By Karthikeyan Manickam
Subscribe to Boldsky

பெண்களுக்கும் சரி, ஆண்களுக்கும் சரி... இரு தொடைகளும் சந்திக்கும் இடம் மிகவும் அடர்ந்த கருப்பாக இருக்கும். எவ்வளவு தான் சோப்பை வைத்து அழுத்தித் தேய்த்தாலும் அந்த இடம் இருட்டாகவே இருக்கும்.

உங்கள் கால் சருமத்தை சரியாகப் பராமரிப்பதன் மூலமே இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண முடியும். இயற்கையான வழிகளிலும் எளிதிலும் கிடைக்கும் எலுமிச்சை, தேன், மஞ்சள், கற்றாழை, ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை உபயோகித்து உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்க முடியும்.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

இப்போது நம் தொடைகளை மினுமினுக்க வைக்க உதவும் அத்தகைய பொருட்களைப் பற்றி சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

நம் சருமங்களில் உள்ள இறந்து போன செல்களை அகற்றுவதில் எலுமிச்சைக்கு முக்கியப் பங்கு உண்டு. எலுமிச்சைச் சாற்றை நேரடியாக சருமத்தில் தேய்க்க வேண்டாம். அதில் அமிலத் தன்மை இருப்பதால், அதைத் தேய்க்கும் போது எரிச்சல் ஏற்படலாம். எனவே, எலுமிச்சைச் சாற்றை நீரில் கலந்து, அந்தக் கரைசலை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி 5 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். பின்னர் அந்தப் பகுதியை நீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழைப் பசையைக் கடிகாரச் சுற்றிலும் எதிர்-கடிகாரச் சுற்றிலுமாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் தேய்த்து, நன்றாகக் காய விட வேண்டும். காய்ந்து கொண்டிருக்கும் போது தான் அந்தப் பசை தன்னுடைய மேஜிக் வேலையை செய்து கொண்டிருக்கும். பின்னர் மிதமான சுடு நீரில் கழுவி அந்தப் பசையை நீக்க வேண்டும். இதைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மேஜிக்கிற்கான நல்லதொரு ரிசல்ட் கிடைக்கும்.

தக்காளி

தக்காளி

இப்போதைக்குத் தக்காளியின் விலையை நினைத்தால் கொஞ்சம் கிறுகிறுக்கத்தான் செய்யும். இருந்தாலும், நம் சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுப்பதில் தக்காளிக்கு நிகர் தக்காளி தான்! இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளையும், இறந்த செல்களையும் எண்ணெய்களையும் முற்றிலுமாக நீக்க வல்லது. தக்காளியை பேஸ்ட் செய்து கொண்டு, கருப்பான தொடைகளில் 5 நிமிடங்கள் வரை நன்றாகத் தேய்க்கவும். பின்னர் 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். கருப்பான தொடைகள் நிச்சயம் பளபளப்பாக மாறும்.

வெள்ளரி

வெள்ளரி

சிறிது சிறிதாக வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் துண்டுகளை கருந்தொடைகள் மீது தினமும் 10 நிமிடங்கள் வரை நன்கு தேய்க்க வேண்டும். வெள்ளரியில் உள்ள ஈரத் தன்மை காரணமாக கருந்தொடைகள் வெளுப்பாகும், சருமமும் பளபளப்பாகும். கொஞ்சம் எலுமிச்சைத் துளிகளையும் சேர்த்துத் தேய்த்தால் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

பப்பாளி

பப்பாளி

சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்கிச் சுத்தமாக்குவதில் பப்பாளிக்கு முக்கியப் பங்கு உள்ளது. பப்பாளி பேஸ்ட்டை தினமும் கருமையான தொடைகளில் ஒரு பிரஷ்ஷின் உதவியுடன் மசாஜ் செய்து வந்தால், கருப்பான அழுக்குகள் நீங்கி தொடையோரங்கள் பளபளக்கும்.

தேன்

தேன்

தொடைகளில் 5 நிமிடங்களுக்கு தேனை நன்றாகத் தடவி, 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும். தேனில் உள்ள ஈரப்பதம் உங்கள் கருந்தொடைகளை குழந்தைகளின் மென்மையான சருமம் போல் மாற்றும். இதைத் தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் பளபள ரிசல்ட் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

இதில் உள்ள கேட்டிகோலாஸ் என்ற என்சைம் நம் தோலுக்குப் பளபளப்பைக் கொடுக்க வல்லது. ஒரு உருளைக்கிழங்கை நன்றாக அரைத்து எடுத்து, அந்த ஜூஸை 'அந்த' தொடைப் பகுதிகளில் தடவி உலர விட வேண்டும். அப்போது தான் அந்த என்சைம் தன் வேலையைக் காட்டும். அதன் பலனாக நமக்கு அழகான வெண்மையான தொடைகள் கிடைக்கும்!

ஆரஞ்சு

ஆரஞ்சு

மஞ்சளுடன் ஆரஞ்சு ஜூஸைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை கருப்பான தொடைப் பகுதிகளில் தடவி, சிறிது நேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவி பேஸ்ட்டை நீக்க வேண்டும். ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி-யும் மஞ்சளும் சேர்ந்து தொடைப் பகுதிகளில் உள்ள கருப்பைப் போக்கி, அவற்றை மினுமினுக்கச் செய்யும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How To Get Rid Of Dark Inner Thighs

    The best way to get rid of dark inner thighs fast is by taking proper care of your leg skin. To lighten your dark thighs you can also use naturally made home remedies like lemon, honey, turmeric, gram flour, aloe vera, olive oil and make skin fair. Both men and women can use these tips to remove darkness and get beautiful thighs.
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more