For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகைத் தரும் கண்களில் ஏற்படும் அரிப்புகளை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!!!

By Ashok CR
|

நம்மில் பலருக்கு ஒரு கட்டத்தில் கண்களில் அரிப்புகள் ஏற்படுவதுண்டு. இது ஒரு பொதுவான பிரச்சனையே. சுற்றுச்சூழல் மாசு, தூசி மற்றும் அழுக்குகளின் தாக்கம், கண் தொற்றுக்கள் மற்றும் அலர்ஜிகள் போன்ற நிலைகளால் இது மிகவும் மோசமான நிலையை அடையும்.

கண்கள் மற்றும் அதனை சுற்றி ஏற்படும் இந்த அரிப்பு, நம்மை உடனே சொறிவதற்கு தூண்டும். ஆனால் அப்படி செய்யும் போது அவை மீண்டும் மீண்டும் வரவே செய்யும்.

கண் எரிச்சல் அதிகமாக இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...

ஆனால் கண் ஏற்படும் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்கள் இருக்கிறது. வீட்டிலேயே இருக்கும் அவ்வகை பொருட்களை கொண்டு, கண் அரிப்புக்களை குணப்படுத்த முயற்சி செய்து பாருங்களேன்.

சுவாரஸ்யமான ஒன்று: கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிர்ந்த ஒத்தடம்

குளிர்ந்த ஒத்தடம்

கண் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் பெற குளிர்ந்த ஒத்தட சிகிச்சை முறையை பின்பற்றலாம். ஒரு பருத்து துணியை மிகவும் குளிர்ச்சியான நீரில் நனைத்து கண்களின் மீதும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மீதும் ஒத்தடம் கொடுங்கள்.

மாற்று வழியாக, சீமைச்சாமந்தி தேநீர் பைகளை கூட குளிர்ந்த ஒத்தடத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி செய்யும் போது கண் அரிப்புகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக சீமைச்சாமந்தி தேநீர் பைகளை வாங்கி அதனை குளிர்சாதன பெட்டியில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு வைத்திடுங்கள். பின் அதனை கண்களின் மீது 5-10 நிமிடங்கள் வரை வைத்திடுங்கள். இதனை தினமும் 3-4 முறை செய்து வந்தால் வேகமான நிவாரணி கிடைக்கும். அதுமட்டுமின்றி, கண்களும் பொலிவோடு இருக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் என்பது இயற்கையான குளிர்ச்சி பொருளாகும். அதன் உறுத்தல் நீக்கி குணங்கள் எரிச்சல் மற்றும் உறுத்தல்களை ஆற்றும். கண் அதைப்பு, சிவப்பாகுதல், வீங்குதல் மற்றும் அழற்சிகள் போன்றவைகளால் ஏற்படும் கண் அரிப்பை நீக்கவும் இந்த குணங்கள் உதவுகிறது. ஒரு வெள்ளரிக்காயை எடுத்து, அதை நீரில் நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிய பின், 10-15 நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து விடவும். பின் அதனை வ்பெலியில் எடுத்து கண்களின் மீது வைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் 4-5 முறை செய்தால் நல்ல பயனை அடையலாம்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டர் என்பது உங்கள் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்களின் அரிப்புக்கும் நல்ல நிவாரணியாக விளங்கும். ரோஸ் வாட்டரில் கண்களை தினமும் இரண்டு முறையாவது அலசுங்கள். இல்லையென்றால் ரோஸ் வாட்டரை பாதிக்கப்பட்ட கண்களில் நேரடியாக ஊற்றினாலும் உடனடி நிவாரணி கிடைக்கும்.

குளிர்ந்த பால்

குளிர்ந்த பால்

சமயலறையில் இருக்கும் குளிர்ந்த பாலை கொண்டும் கண் அரிப்புகளை நீக்கலாம். அதற்கு ஒரு பஞ்சு உருண்டையை குளிர்ந்த பாலில் நனைத்து, அதனை கண்களை சுற்றி ஒத்தி எடுக்கவும். பஞ்சு உருண்டையை கண்களின் மீது வைத்தால், குளிர்ந்த ஒத்தடம் போலும் அது செயல்படும். தினமும் காலை, மாலை என இருமுறை இதனை முயற்சி செய்யுங்கள்.

காய்கறி சாறு

காய்கறி சாறு

கண்களில் ஏற்பட்டுள்ள அரிப்புகளை நீக்க சுலபமான வீட்டு சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது பச்சை காய்கறி சாறு. முக்கியமாக கேரட் மற்றும் கீரை சாறுகள் சிறப்பாக செயல்படும். 2 கேரட்டை அரைத்து அதன் சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எரிச்சலுக்கு நிவாரணம் கிடைக்கும் வரை அதனை இரண்டு அல்லது அதற்கு மேலான முறையிலும் குடியுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

கண்களில் ஏற்படும் அரிப்புகளை நீக்க உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சிகிச்சையை போலவே, உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி அதனை 1-2 மணிநேரத்திற்கு குளிர்சாதன பெட்டியில் வைத்திடுங்கள். இனி இந்த துண்டுகளை கண்களின் மீது வைத்து 10-15 நிமிடம் வரை ஓய்வாக இருங்கள்.

சோத்துக் கற்றாழை

சோத்துக் கற்றாழை

கண்கள் பிரச்சனையை தீர்க்கும் எளிய சிகிச்சைகளில் ஒன்றாக விளங்குகிறது சோத்துக் கற்றாழை. சோத்துக் கற்றாழை ஜூஸை தயார் செய்து அதனை தேன் மற்றும் எல்டெர்பெர்ரி மலர் தேநீருடன் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு தினமும் இரண்டு முறை கண்களை கழுவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies For Itchy Eyes

To get the instant relief from itchy eyes there are several home remedies. You can try them out with just the ingredients that are available handy at kitchen.
Desktop Bottom Promotion