For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறட்சியடைந்த கண்களை கையாளுவதற்கான சில டிப்ஸ்...

By Ashok CR
|

கண்களில் அடிக்கடி கண் எரிச்சல்கள் ஏற்படுகிறதா? அப்படியானால் அதனை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கண் இமைகளுக்கு அடியில் இருக்கும் குழல்களின் வழியாகத் தான் கண்ணீர் சுரக்கும். இந்த குழாய் வறண்டு போவதையே உலர்ந்த கண்கள் என்று கூறுகின்றனர். குளிர் மற்றும் கோடைக்காலத்தின் போது இந்த பிரச்சனை இன்னமும் தீவிரமாக இருக்கும்.

அதற்கு காரணம், இக்காலத்தில் நிலவும் வறண்ட காற்றும், வறண்ட வெப்பமும் தான். கண்களின் சரியான செயல்பாட்டிற்கு கண்ணீர் அவசியமானதாக உள்ளது. அதற்கு காரணம், கண் இமைகள் கண்மணிகளோடு ஒன்றிட கண்ணீர் ஒரு மசகிடுதலாக செயல்படுகிறது. இதனால் கண்மணிகள் ஈரப்பதத்துடன் இருக்க கண்ணீர் உதவுகிறது.

உலர்ந்த கண்கள் உங்கள் பார்வை திறனை குறைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரம் கண்மணிகளுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும். இப்படி குறையுள்ள பார்வை திறனுடன் தினமும் செய்யும் வேலைகளை ஒழுங்காக செய்ய முடியாது தானே.

சமீபத்திய செய்தி அறிக்கைகளின் படி, 50 வயதுக்கு மேற்பட்டோர் தான் இந்த உலர்ந்த கண்களால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதே போல் மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள இளவயது பெண்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் அறிகுறிகளை கண்டறியுங்கள்:

* வறண்ட உணர்ச்சி அல்லது கண் அரிப்பு.

* நாள் முழுவதும் கண்களின் எரிச்சல்.

* நாள் முடிவடையும் போது, சிவந்த மற்றும் சோர்ந்த கண்கள்.

* நாள் முடிவடையும் போது, தெளிவான பார்வை இருப்பதில்லை.

ஆகவே கண்களில் பிரச்சனை வந்த பிறகு சிகிச்சையில் ஈடுபடுவதை விட, வரும் முன் காப்பது தானே சிறந்தது. அதனால் கடுமையான கோடைக்காலத்திலிருந்து கண்களை காத்திட உங்களுக்கான சில டிப்ஸ்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion