For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளும்...

By Boopathi Lakshmanan
|

எண்ணெய்கள் நமக்கு செய்யும் பலன்களுக்கு முறையான அங்கீகாரத்தை நாம் வழங்குவதில்லை. எத்தனை எண்ணெய்கள் உள்ளும், புறமும் பலன் தரும், சமையலறையிலும், குளியலறையிலும் பலன் தரும், சாப்பிடும் சாலட்-டிலும், தலைமுடியிலும் பலன் தரும் என்று நமக்குத் முழுமையாக தெரியாமலிருப்பது தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறீர்களா?

இதோ அவற்றைத் தெரிந்து கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு. எண்ணெய்கள் மாயாஜாலம் செய்யக் கூடியவையாகும். இவற்றின் பல்வேறு பயன்பாடுகள் உங்களுடைய மனதைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவ்வொன்றும் மற்றதைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லும் வகையில் இந்த பலன்களும், பயன்பாடுகளும் இருக்கும்.

அழகுக்கு அழகு சேர்க்கும் சில ஏடாகூட அழகுக் குறிப்புகள்!!!

உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியுடன், சில எண்ணெய்களும் கூட உங்களுடன் வேலை செய்யவும் மற்றும் உங்களுடைய சருமத்தை மற்றவர்களுடையதைக் காட்டிலும் சிறப்பாக தோற்றமளிக்கச் செய்யவும் உதவும் சஞ்சீவியாக எண்ணெய்கள் உள்ளன. எனவே, இந்த எண்ணெய்களை பயன்படுத்தி தனித்தன்மையான உடலமைப்பையும், சரும வகையையும், தலைமுடி, சுவை மற்றும் பிற தேவைகளையும் நீங்கள் பெறலாம். இதோ நீங்கள் பயன்படுத்தி, பலன் பெற உதவும் டாப் எண்ணெய்களின் பட்டியல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சணல் எண்ணெய்

சணல் எண்ணெய்

தோலுக்கு மிகவும் சிறந்த எண்ணெய் எது என்றால் சணல் எண்ணெய் என்று தான் நான் பதில் சொல்வேன். குறிப்பாக அரிப்பு இருப்பவர்களுக்கு மிகவும் ஏற்ற நிவாரணமாக சணல் எண்ணெய் உள்ளது. இது மேக்கப்பை நீக்குவதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் ஆழமாக சுத்தம் செய்கிறது. கரும்பச்சை நிறத்திலான இந்த எண்ணெய், சிவப்பு புள்ளிகளை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு நீக்கும். இயற்கையான சணல் எண்ணெய் உங்களுடைய தோல்களிலுள்ள துளைகளை அடைத்துக் கொள்ளாமல் இருப்பதால், சருமத்தை சுத்தம் செய்யவும், மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்தலாம். சணல் எண்ணெயில் 57 சதவீதம் லினோலெய்க் அமிலம் இருப்பதால், சருமத்தையும், எண்ணெய் சுரப்பிகளையும் மிக மிருதுவாக வைத்திருக்கும். மிருதுவான சருமத்தின் துளைகள் அடைத்துக் கொள்வதில்லை.

இந்த எண்ணெயை எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க விரும்பினால் ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். ஆகவே இதனை எடுத்துக் கொண்டு பயணம் செய்ய முடியாது. ஆனால், நீங்கள் செல்லும் இடத்திலுள்ள ஹெல்த் ஃபுட் ஸ்டோரில் சணல் எண்ணெய் (ஹெம்ப் ஆயில்) கண்டிப்பாக கிடைக்கும்.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெய்

இது மிகவும் ஆச்சரியமூட்டும் எண்ணெயாகும். அரிப்புகள், மருக்கள், வெட்டுக் காயங்கள் மற்றும் இரத்த காயங்களையும் கூட சிறப்பாக கவனிக்கும் திறன் கொண்ட எண்ணெயாக வேப்ப எண்ணெய் உள்ளது. எனக்கு கரும்புள்ளிகள் இருந்தால், இரவில் இந்த எண்ணெயை தடவிக் கொண்டு படுப்பேன். காலையில் விழித்தெழுந்து பார்த்தால் கரும்புள்ளியின் அளவு குறைந்திருக்கும். தோலில் ஏற்படும் எந்தவிதமான வெட்டுக் காயங்கள் மற்றும் உராய்வுகளையும் சமாளிக்கும் விதமாக இந்த எண்ணெயை வீட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த எண்ணெய் மிகவும் கடுமையான வாசம் வருமாதலால், இதனை வெளிப்புற பகுதிகளில் மட்டும் பயன்படுத்தவும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

தலைசுற்றலில் இருந்து நிவாரணம் பெறவும், பிரசவ காலங்களிலும் பயன்படுத்த ஏற்ற எண்ணெயாக இது உள்ளது. தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தும் முதன்மையான எண்ணெயாகவும் இது உள்ளது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சில துளிகள் விளக்கெண்ணெயை எடுத்து தலையிலும் மற்றும் கண்ணிமைகளிலும் தடவி வந்தால், முடிகள் மிக நீளமாக வளரவும், அவற்றிற்கு தேவையான அளவு ஈரப்பதத்தைக் கொடுக்கவும் முடியும். ஈரப்பதம் நன்றாக இருக்குமிடத்தில் முடியும் நன்றாக வளரும்.

உணவை சாப்பிட்டு முடித்த பின்னர் விளக்கெண்ணெயை வயிற்றில் சில மணிநேரங்களுக்கு தடவிக் கொள்வதன் மூலமாக, எளிதில் சிரமமின்றி உணவு செரிமானமாகும். இந்த எண்ணெயை அப்படியே நேரடியாக வயிற்றில் தடவிக் கொள்ளலாம். அதே சமயம், ஹெக்சேன் இல்லாத, உயர்தரமான விளக்கெண்ணெய் வாங்குவதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், இந்த எண்ணெய்க்கு மிகவும் ஆழமான ஈர்ப்பு குணம் உள்ளது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

சருமம் மற்றும் தலைமுடிக்கு மிகவும் ஏற்ற எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது. ஒரு காட்டன் துணியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கண்களில் படிந்திருக்கும் மையை நீக்க முடியும் மற்றும் தலைமுடியில் தடவிக் கொள்வதன் மூலம் ஹேர்மாஸ்க் போட்டு முடியையும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும். இந்த ஹேர்மாஸ்க்கை இரவில் போட்டு, காலையில் குளிர்ந்த நீரில் அலசி விடலாம். ஆயுர்வேத செயல்பாடுகளில் மிகவும் பயன்தரக் கூடிய எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதிலுள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்பொருட்கள் ஆயுர்வேத செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகின்றன. மேலும் கேன்டிடாவிலும் கூட தேங்காய் எண்ணெய் பலன் தரும்.

உடலுக்கான ஈரப்பதத்தை தக்க வைக்கவும் மற்றும் SPF அளவு 10 ஆக உள்ளதால், வெயிலில் செல்லும் முன்னர் தடவிக் கொள்ளக் கூடியதாகவும் தேங்காய் எண்ணெய் உள்ளது. தைராய்டு செயல்பாட்டுக்கு உதவுவதால், நேரடியாக தைராய்டு சுரப்பியின் வெளிப்பகுதியில் நாம் இதனை தடவும் போது, உடலின் இயக்கவும், சக்தியும் ஊக்கம் பெறுகின்றன.

மக்காடாமியா நட்ஸ் எண்ணெய்

மக்காடாமியா நட்ஸ் எண்ணெய்

இனிப்பான மணம் மற்றும் சுவையை கொண்டிருக்கும் மக்காடாமியா எண்ணெயை சமையலறையில் பயன்படுத்த முடியும். ஏனெனில், இதன் புகை வெளியிடும் திறன் மற்ற எண்ணெய்களை விடக் குறைவாகும். எனினும், இந்த எண்ணெயை தலைமுடியின் நுனிகளில் மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தினால் மிகச்சிறந்த பலன்களைப் பெற முடியும். குளிப்பதற்கு முன்னும், பின்னும் மக்காடாமியா எண்ணெயை தலைமுடியில் தடவிக் கொண்டால், ஈரப்பதத்தை பெருமளவு தக்க வைத்திட முடியும். மேலும் இந்த எண்ணெயை தடவிக் கொள்வதால், முடியில் பிசுபிசுப்பும் ஏற்படாது. இந்த எண்ணெயை பாடி மாய்ஸ்சுரைசராகவும், சேவிங் ஜெல்லாகவும் அல்லது ஆஃப்டர் சேவ் கிரீமாகவும் பயன்படுத்தலாம்.

அவகேடோ எண்ணெய்

அவகேடோ எண்ணெய்

சணல் எண்ணெயைப் போலவே, அவகேடோ எண்ணெயும் மிகச்சிறந்த வகையில் சிவப்பு வீக்கங்கள், கறைகள் மற்றும் வடுக்களை தோலில் இருந்து நீக்கும். இந்த எண்ணெயை சேவிங் ஜெல்லாகவும், உடல் மற்றும் தலைமுடிக்கான மாய்ஸ்சுரைசர்களாகவும் பயன்படுத்தலாம். சாலட்களில் சுவைமிக்க இடுபொருளாகவும், குறைந்த வெப்பநிலையில் சமைப்பதற்கு ஏற்றதாகவும் அவகேடோ எண்ணெய் உள்ளது.

ஜோஜோபா எண்ணெய்

ஜோஜோபா எண்ணெய்

சருமத்திற்கு மிகச்சிறந்த பலன்களைத் தரக்கூடிய இந்த எண்ணெயால், சமையலறையில் எந்தவித பலன்களும் இல்லை. சருமத்தை சுத்தம் செய்வதற்கும் மற்றும் இயற்கையான எண்ணெயான இது, மாஸ்சுரைசராக பயன்படுத்துவதற்கும் பெரிதும் விரும்பப்படும் எண்ணெயாக இது உள்ளது. பாக்டீரியா எதிர்பொருட்கள் உள்ள எண்ணெயாக இருப்பதால், அரிப்புகள் உள்ள தோல் வகைகளுக்கு மிகவும் ஏற்ற எண்ணெயாகவும் ஜோஜோபா எண்ணெய் உள்ளது.

வைட்டமின் ஏ, பி மற்றும் ஈ ஆகியவை உள்ளதால் ஊட்டச்சத்து மிக்க எண்ணெயாகவும் உள்ளது. இந்த எண்ணெயை மேக்கப்பை நீக்குவதற்கும் மற்றும் தலைமுடி மாய்ஸ்சுரைசராகவும் பயன்படுத்தலாம். உதடுகளை பராமரிக்கவும் ஏற்ற எண்ணெயாக இது உள்ளது.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

தேங்காய் எண்ணெயின் சுவை உங்களுக்குப் பிடிக்காத நேரங்களில், மாற்று எண்ணெயாகவும் மற்றும் சமைக்கவும் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம். அதிகளவு துத்தநாகம் உள்ள இந்த எண்ணெயை சருமத்தின் வெளிப்பகுதியில் தடவுவது நல்ல பலன் தரும் என்பதால் தயங்காமல் தடவிக் கொள்ளுங்கள். மிகவும் அதிக அளவு வைட்டமின் ஈ கொண்டுள்ள எண்ணெயாகவும் மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த எண்ணெய் உதவும்.

ஹாசில்நட் எண்ணெய்

ஹாசில்நட் எண்ணெய்

ஹாசில்நட் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளதால், எல்லா வகையான சருமங்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது எனலாம். இந்த எண்ணெய் சருமத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதையும் தவிர்ப்பதால், கறைகள் உருவாவது தவிர்க்கப்படுகிறது. இதில் கட்டுப்படுத்தும் குணங்களும், துளைகளை இறுக்கும் குணங்களும் உள்ளதால், இயற்கை எண்ணெய் அதிகளவில் உடலில் சேர்வதை ஹாசில்நட் எண்ணெய் தவிர்க்கிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Great Oils + How To Use Them

As with diet and exercise, some oils will work for you and your skin type better than others, so use this list as inspiration and play around with finding the best oils for your unique body, skin type, hair, tastes, and needs. Here are the top nine oils and what to use them for!
Desktop Bottom Promotion