ஷேவிங் செய்யாமல் வேக்சிங் செய்வதற்கான காரணங்கள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு ஷேவிங் செய்ய வேண்டும் என்பது ஒரு திறமையான வழிமுறையாக எப்பொழுதும் கருதப்படுவதில்லை. அது உங்களுடைய முடி எவ்வளவு வேகமாக வளருர்றது, என்பதைப் பொறுத்து நீங்கள் தினமும் ஷேவ் செய்யவோ அல்லது மாற்றுத் திட்டத்தை செயல்படுத்தவோ வேண்டியிருக்கும்.

ஆனால், உடலிலுள்ள முடிகளை நீக்குவதற்கு வேறொரு மாற்று வழி இருக்கிறது என்பது தான் ஆறுதலான விஷயம். பல்வேறு காரணங்களுக்காகவும், பல்வேறு நபர்களுக்கும் ஷேவிங்கை விட வேக்சிங் (மெழுகு பயன்படுத்துதல்) தான் சிறந்த வழிமுறையாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேக்சிங் செய்யும் போது, உங்களை நீங்கள் வெட்டிக் கொள்வதில்லை

வேக்சிங் செய்யும் போது, உங்களை நீங்கள் வெட்டிக் கொள்வதில்லை

ஷேவிங் செய்யும் போது நீங்கள் கூர்மையான பிளேடுகள் மற்றும் கத்திகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது நடைமுறையில் உள்ள விஷயமாகும். இவற்றைப் பயன்படுத்தும் போது, உங்களுடைய உடலில் சில இடங்களில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லை. அதுவும் கழுத்து, கைகளுக்கு அடியில் மற்றும் இடுப்பு பகுதிய என பல்வேறு இடங்களில் இவ்வாறான வெட்டுக் காயங்கள் ஏற்படும். இப்படிப்பட்ட ஷேவிங் வழிமுறையைப் பயன்படுத்தும் போது உங்களுக்கு நீங்களே ஆபத்தை தேடிக் கொள்கிறீர்கள் என்பது உண்மை. ஆனால், வேக்சிங் செய்யும் போது, இந்த ஆபத்துகளைப் பற்றிய எண்ணமே வராதல்லவா!

நீடித்த பலன்

நீடித்த பலன்

மெழுகுகளை பயன்படுத்துவதால், முடிகளை வேரிலிருந்தே நீக்கி விடுவதால், அவை மீண்டும் முளைத்து வளர நீண்ட நாட்களாகும். ஆனால், நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் கூட, இரண்டு வாரங்களுக்குள் முடி அடர்த்தியாக வளர்ந்து விடுவதை தவிர்த்திட முடியாது. அதே போல, நீங்கள் தினமும் ஷேவிங் செய்தால் தோலில் ஏற்படக் கூடிய எரிச்சலும் கூட, மெழுகு வேக்சிங் செய்யும் போது வராது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

முடி மெலிதாக வளரும்

முடி மெலிதாக வளரும்

நீங்கள் நீண்ட காலத்திற்கு முடியை நீக்கும் வழிமுறையை பயன்படுத்தி வந்தால், மெழுகு பயன்படுத்திய இடங்களில் முடி திரும்ப வருவதை அரிதாகவே காண முடியும். ஆனால், இடத்தில் ஷேவிங் செய்யும் போது முடி தொடர்ந்து அடர்த்தியாக வளரத் துவங்கும். மேலும், வேக்சிங் செய்யப்பட்ட இடத்தில் இதற்கு நேரெதிரான விளைவாக, முடிகள் மெலிதாக வளரும்.

வலி குறைவு

வலி குறைவு

வேக்சிங் என்று வந்தாலே வலி என்ற வார்த்தை நினைவுக்கு வரும். சூடான மெழுகை உங்களுடைய தோலின் மேல் போட்டு, அதில் ஒட்டிக் கொண்டிருக்கும் முடிகளை பிய்த்து எடுப்பதுதான் வேக்சிங் வழிமுறையாகும். இதை சொல்லும் போதே, இந்த செயலில் அங்கியுள்ள வலி தெரியும். ஆனால், மெழுகின் அளவை கொஞ்சம் தாரளமாய் பயன்படுத்தினால், வலியின் அளவை குறைத்திட முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

மென்மையான சருமம்

மென்மையான சருமம்

இப்போது மாய்ஸ்சுரைஸர்களை கொண்ட மெழுகுகள் விற்கப்படுகின்றன. முடியை நீக்கத் தொடங்கும் முன்னதாக இதை தடவிக் கொண்டால், அந்த பகுதிகள் மென்மையாக விடுகின்றன. எனவே, மாய்ஸ்சுரைஸர்களை மெழுகில் சேர்த்து தடவுவதன் மூலம் அந்த பகுதியிலுள்ள சருமம் மென்மையாகி விடுவதால், முடியை முழுமையாக வெளியே உருவி எடுத்து விட முடியும். இவ்வாறு முடிகளை நீக்கிய பின்னர், தோலில் செதில்கள் போல எதுவும் இருப்பதில்லை.

ஷேவிங்கை விட வேகமானது

ஷேவிங்கை விட வேகமானது

கைகளுக்கு வாகான இடங்களைத் தவிர, பிற இடங்களில் ஷேவிங் செய்வது சர்க்கஸ் செய்வது போன்ற கடினமான விஷயமாகும். யார் வேண்டுமானாலும், ஷேவ் செய்ய முடியும் என்றாலும், அதற்கு வாகான நிலையை அறிந்து ஷேவ் செய்வதென்பது பிரம்ம பிரயத்தனம் எடுக்க வேண்டிய நிலையாக இருக்கும். எனவே, இருக்கவே இருக்கிறது வேக்சிங்! பயன்படுத்தி பலனடையுங்கள்!

நச்சுப்பொருட்களை நீக்குதல்

நச்சுப்பொருட்களை நீக்குதல்

வேக்சிங் வழிமுறையைப் பயன்படுத்தி உங்களுடைய கால்களில் உள்ள முடிகளை நீக்க முயற்சி செய்யும் போது, உங்களுடைய தோலின் சருமத்திற்கும், நிணநீர் பைக்கும் இடையிலான பகுதியை முடிக்கால்கள் வழியாக நீங்கள் திறக்கிறீர்கள். இதனால் அவ்விடங்களில் வறண்ட சூழல் ஏற்படும். இந்த செயல்பாடு நடக்கும் போது திரவங்கள் ஒன்று சேருவதையும் நீங்கள் பார்க்க முடியும். இவற்றை ஒரு துணியில் துடைத்திடவும். இந்த பகுதி மீண்டும் மூடிக் கொள்ளும் வரையில், இவ்வாறு நீர் வந்து கொண்டிருக்கும். இந்த நச்சுத் தன்மை வாய்ந்த நீரை வேக்சிங் செய்யும் போது வெளியேற்றிட முடியும்.

சருமத்திற்கு ஏற்ற வேக்சிங்

சருமத்திற்கு ஏற்ற வேக்சிங்

உங்களுடைய தோல் மிகவும் சென்சிட்டிவ்வானது என்று நினைத்தால், ஷேவிங் செய்வதால் எண்ணற்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனினும், வேக்சிங் முறையில் அலர்ஜிகள் வராமலிக்கக் கூடிய மெழுகுகளை வாங்கிப் பயன்படுத்திட முடியும் தீர்வு உள்ளது. சோயா அல்லது சர்க்கரையை அடிப்படையாக கொண்ட மெழுகுகளை பயன்படுத்துவதன் மூலம் எரிச்சல் வராமல் தவிர்க்க முடியும். மெழுகு தடவப்பட்ட துணிகளை பயன்படுத்துவதன் மூலம், சரியான அளவிற்கு மட்டுமே மெழுகை தடவிக் கொள்வதால் எரிச்சலை குறைத்திடவும் முடியும்.

நிரந்தமான முடி நீக்கம்

நிரந்தமான முடி நீக்கம்

வேக்சிங் செய்யாமல் நிறுத்துவதற்கு நீண்ட நாட்கள் ஆனாலும், அவற்றை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதன் மூலம் முடியின் வளர்ச்சி வேகத்தை குறைத்திட முடியும். வாக்ஸ் பயன்படுத்துவதை நிறுத்தும் நிலைக்கே நீங்கள் வராவிடினும் கூட, அவற்றை நெடுநாட்களுக்கு பயன்படுத்த அவசியமில்லாத நிலைகளை உங்களால் அடைந்திட முடியும். தங்களுடைய அழகை வேகமாக பராமரித்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும், இது ஒரு வரப்பிரசாதமாகும்.

உள்ளே வளரும் முடிகளும், வாக்ஸும்

உள்ளே வளரும் முடிகளும், வாக்ஸும்

நீங்கள் ஷேவிங் செய்யும் போது அடியில் உள்ள முடி, அதாவது உங்களுடைய தோலுக்கு அடியில் உள்ள முடிகளையும் கூட நீங்கள் வெட்டி விடுவீர்கள். இதன் மூலம் முடியின் முனை மழுங்கி விடவும், அந்த முடி சுருளாகவோ அல்லது பக்கவாட்டிலோ வளரத் துவங்கி விடும். இதனால் வலியை தரக்கூடிய தொற்றுகளும் கூட ஏற்படும். இது போன்ற பிரச்சனைகள் கழுத்து மற்றும் பிகினி பகுதிகளில் ஏற்படும். ஆனால், முடியை வேரிலிருந்தே நீக்கி விடும் முறையாக வேக்சிங் உள்ளதால், வேக்சிங் செய்யும் போது இந்த பிரச்சனைகளை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக வளர்ந்த முடியானது மெலிதாகவும் மற்றும் முனையில் சிறியதாகவும் இருக்கும். எனவே இதனை முடியின் மேல் பகுதியில் வைத்து பிடிப்பது சற்றே கடினமான காரியமாக இருக்கும். இந்த முடிகளை ஷேவிங் செய்வது சொல்ல முடியாத அனுபவமாகவே இருக்கும். எனவே, வேக்சிங் பயன்படுத்துங்கள், முழுமையான அழகைப் பெற்று பலனடையுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Reasons to Wax Instead of Shave

Shaving is a rather inefficient method of removing unwanted hair from the body. Depending on how fast your hair grows, you could end up shaving daily just to keep up with the growth. Fortunately, there is an alternative to shaving. Many people find waxing to be a better option for several reasons.
Subscribe Newsletter