Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
அழகான கன்னங்களை பெற உதவும் சில எளிய பயிற்சிகள்!!!
உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சொல்லப்போனால் இத்தகைய கன்னங்கள் ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற பழக்கங்களான குடிப்பழக்கம், போதிய தூக்கமின்மை, புகைப்பிடித்தல் மற்றும் நொறுக்குத்தீனிகள் அதிகம் உட்கொள்வது போன்றவை காரணங்களாகின்றன.
மேலும் கன்னங்கள் இந்த மாதிரி உடலுக்கு ஏற்றவாறு சரியான அளவில் இல்லாவிட்டால், அது உடல் எடையை குறைத்தாலும், இன்னும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். ஆகவே கன்னங்களை அழகாக வைத்துக் கொள்வதற்கு ஒருசில உடற்பயிற்சிகள் உள்ளன. அதனைப் பின்பற்றி வந்தால், நிச்சயம் கன்னங்களில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்கலாம். அதுமட்டுமின்றி, இந்த பயிற்சிகளில் சில ஒட்டியுள்ள கன்னங்களை சரியான அளவில் வைத்துக் கொள்ளவும் உதவும்.
சரி, இப்போது கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள எந்த மாதிரியான பயிற்சிகளை செய்ய வேண்டுமென்று பார்ப்போமா!!!

வாயை குவிக்கவும்
கன்னங்களை அழகாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய பயிற்சிகளில் முதன்மையானது தான் படத்தில் காட்டியவாறு வாயை குவித்தல். அவ்வாறு உதடுகளை இறுக்கமாக மூடி, 1 நிமிடம் குவித்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இந்த மாதிரி ஒரு நாளைக்கு குறைந்தது 3 வேளை, 10 நிமிடம் செய்ய வேண்டும்.

சிரிப்பு
முகத்தில் உள்ள தசைகளுக்கான சிறந்த பயிற்சி தான் சிரிப்பு. இவ்வாறு வாய் விட்டு நன்கு சிரிக்கும் போது, முகத்தில் உள்ள தசைகள் நீட்சியடைவதால், அது கன்னங்கள் அழகாக வைத்துக் கொள்ள உதவும். எனவே எப்போதும் நன்கு சிரித்துக் கொண்டே இருங்கள்.

சூயிங் கம்
பொதுவாக சூயிங் கம் போட்டால், வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆனால் இந்த சூயிங் கம் மெல்லுவது என்பது முகத்திற்கான ஒரு சூப்பரான பயிற்சியாகும். இதனால் இரட்டை தாடைகளை தவிர்க்கலாம்.

கன்னங்களை தூக்குதல்
நன்கு பெரியதாக இருக்கும் கன்னங்களை குறைக்க இருக்கும் சிறந்த வழிகளுள் கன்னங்களை தூக்குதலும் ஒன்று. அதற்கு முடிந்த அளவில் கன்னங்களை தூக்குங்கள். அதற்காக கையை கொண்டு தூக்காதீர்கள். சிரிப்பதன் மூலம் கன்னங்களை நன்கு தூக்குங்கள்.

மீன் போன்ற உதடு
படத்தில் காட்டியவாறு மீன் போன்று உதடுகளை குவித்து, 20 நொடிகள் வைத்து, பின் சாதாரண நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கும் 10-20 முறை செய்து வந்தால், கன்னங்களை குறைக்கலாம்.

வாயில் காற்றை நிரப்புங்கள்
படத்தில் காட்டிய படி, வாயில் காற்றினை நிரப்பி 2 நிமிடம் கழித்து, பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கன்னங்களை குறைப்பதோடு, கன்னங்கள் இல்லாதவர்களுக்கு கன்னங்கள் சரியான அளவில் இருக்கும்.



Click it and Unblock the Notifications
