Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
பேபி எண்ணெய் பயன்படுத்துவதால் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!
எண்ணெய்களில் பல உள்ளன. ஒவ்வொரு எண்ணெயிலும் ஒவ்வொரு விதமான நன்மைகள் நிறைந்துள்ளன. அந்த வகையில் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி எண்ணெயையும் சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனை குழந்தைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமென்று சிலர் நினைக்கின்றனர். உண்மையில் அதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏனெனில் அதில் கெமிக்கல்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அதனை சருமம் மற்றும் உடல் பராமரிப்பிற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும், பாதிப்படையாமலும் இருக்கும்.
குறிப்பாக பேபி எண்ணெய் அதிக பிசுபிசுப்புடன் இருக்காது. எனவே அழகைப் பராமரிக்க பேபி எண்ணெயை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். இப்போது பேபி ஆயில் கொண்டு அழகைப் பராமரிக்க எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

மாய்ஸ்சுரைசர்
பேபி ஆயில் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர். அதிலும் குளிர் அல்லது பனி காலங்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதற்கு, பேபி ஆயிலைப் பயன்படுத்தினால், வறட்சி நீங்கி, வெடிப்புகள் போய்விடும். அதற்கு பேபி ஆயிலை உடலில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும்.

மேக்-கப்பை நீக்க...
பேபி ஆயிலைக் கொண்டு மேக்-கப்பை நீக்கினால், சருமம் பாதிப்படையாமல் இருக்கும். அதற்கு பஞ்சை பேபி ஆயிலில் நனைத்து, முகத்தில் உள்ள மேக்-கப்பை நீக்கிவிட்டு, பின் முகத்தை நீரால் கழுவி, உலர்ந்த துணியில் துடைக்க வேண்டும்.

மசாஜ்
உடலுக்கு மசாஜ் செய்ய பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். இதனால் சருமம் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.

ஷேவிங்
பேபி ஆயில் அழகு பராமரிப்பிற்கு மட்டுமின்றி, ஷேவிங் செய்யும் முன் சருமத்தில் தடவி, பின் ஷேவிங் செய்தால், முடியானது மென்மையாகி எளிதில் வந்துவிடும். மேலும் இவ்வாறு செய்வதால், ஷேவிங்கிற்கு பின் ஏற்படும் வறட்சி மற்றும் அரிப்பை தவிர்க்கலாம்.

எண்ணெய் குளியல்
சூப்பரான எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். அதிலும் பேபி எண்ணெயை கொண்டு உடலுக்கு மசாஜ் செய்து, பின் குளித்தால், உடல் ரிலாக்ஸாவதோடு, நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.

வெதுவெதுப்பான உடல்
குளிர் காலங்களில் பேபி ஆயிலை உடலுக்கு தடவி மசாஜ் செய்தால், உடல் வெதுவெதுப்பாக இருப்பதோடு, சருமம் வறட்சி அடைவது தடைபடும்.

ஸ்ட்ரெட்ச் மார்க்
உடலில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை மறைக்க பேபி ஆயிலைப் பயன்படுத்தலாம். அதிலும் கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் போதே, வயிற்றில் பேபி ஆயிலைத் தடவி வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வெளிப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.



Click it and Unblock the Notifications
