Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க தலை வழுக்கை ஆகுற மாதிரி இருக்கா? அப்ப இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க...
முடி அதிகம் உதிர்வது போன்று இருந்தால், அப்போது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும்.
தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். சொல்லப்போனால் முடி உதிர்தல் என்பது முடியின் வளர்ச்சி சுழற்சியின் ஒரு இயல்பான பகுதி மற்றும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவில் தலைமுடி உதிரும். அதுவும் முடி உதிரும் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஒருவருக்கு முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
அதில் மரபணு, வயது, ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. தலைமுடி உதிர ஆரம்பித்தால், அதை கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டுவிடக்கூடாது. இல்லாவிட்டால், முடி உதிர்தல் இன்னும் அதிகரித்து ஒரு கட்டத்தில் தலை வழுக்கையாக ஆரம்பித்துவிடும்.

இந்நிலையில் முடி அதிகம் உதிர்வது போன்று இருந்தால், அப்போது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க எந்த எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் நாம் தினசரி பயன்படுத்தும் ஒரு பொதுவான எண்ணெய். இந்த எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் மயிர்கால்களில் ஊடுருவி ஈரப்பதத்தை அளிப்பதோடு, தலைமுடியை வலுவாக்கும்.
ஆர்கன் எண்ணெய்
ஆர்கன் எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஈ அதிகளவில் உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல ஊட்டத்தை அளிப்பதோடு, தலைமுடியை சேதமடைவதில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்வது போன்று இருந்தால், இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி தடவுங்கள்.
விளக்கெண்ணெய்
பழங்காலம் முதலாக தலைமுடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் விளக்கெண்ணெயில் ரிசினோலியிக் அமிலம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது மற்றும் இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவி புரிந்து, ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இவை தலைமுடி சேதமடைவதில் இருந்து பாதுகாப்பளிப்பதோடு, ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் டி அதிகளவில் உள்ளன. இவை தலைமுடிக்கு ஊட்டமளித்து, அதன் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, தலைமுடியை வலுவாகவும், நெகிழ்வுத்தன்மையுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இவை ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.
டீ-ட்ரீ ஆயில்
டீ-ட்ரீ ஆயிலில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகமாக உள்ளன. இவை ஸ்கால்ப்பில் ஏற்படும் அழற்சி மற்றும் தொற்றுக்களை குறைக்க உதவி புரிந்து, தலைமுடிக்கு ஒருவித காரணமாக இருக்கும் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கின்றன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்கள் அனைத்தும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களாகும். இந்த எண்ணெய்களை தலைமுடி உதிர்வை சந்திப்பவர்கள் பயன்படுத்தி வந்தால், முடி உதிர்வைக் குறைப்பதோடு, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.



Click it and Unblock the Notifications



