Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
கொரிய பெண்கள் வயதாகாமல் எப்பொழுதும் இளமையாக இருக்க நத்தை மியூசின் தான் காரணமாம்...!
நத்தை மியூசின் பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? இது ஒரு கொரிய தோல் பராமரிப்பு முறையாகும். இந்த தோல் பராமரிப்பு முறை மூலம் வயதாகுவதை தடுக்க முடியும். கொரிய பெண்கள் என்றும் இளமையுடன் இருக்க இது தான் முக்கிய காரணம்.
நத்தையிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை மியூகஸைக் கொண்டு இந்த முறை செய்யப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான என்றும் இளமையான சருமத்தை பெற முடியும். இந்த நத்தை மியூசினில் சருமத்தை அழகாக்கும் ஏராளமான பொருட்கள் உள்ளன. அதைப்பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

நத்தை மியூசின் என்றால் என்ன?
நத்தை மியூசின் என்பது நத்தை மியூகஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் இளமையான சருமத்தை பெற முடியும். உங்களுக்கு ஏற்படும் வயதான அறிகுறிகளை குறைக்க இது உதவுகிறது. இதற்கு நத்தையை உங்கள் முகத்தில் ஊர்ந்து போகச் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் நத்தை சாறு பல பிராண்டுகளில் கிடைக்கிறது.
அதைக் கூட நீங்கள் பயன்படுத்தி வரலாம். இந்த நத்தை சாற்றில் உங்கள் சருமத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. நத்தை சாற்றில் கிளைகோபுரோட்டின்கள், ஹைலூரோனிக் அமிலம் மற்றும் கிளைகோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.
நத்தை மியூசின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது
கொலாஜன் என்பது நமது தோலில் உள்ள ஒரு கட்டமைப்பு புரதமாகும். இது உங்கள் சருமத்தை இளமையாகவும் உறுதியாகவும் வைக்க உதவுகிறது. நம் உடலில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் உண்டாகின்றன.
நத்தை சாற்றில் உள்ள கிளைக்கோ புரோட்டீன்கள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் சருமத்தில் ஏற்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்க உதவுகிறது. இது சருமத்தின் உறுதியை பாதுகாக்கிறது.
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் சருமம் வயதாகுவதை தடுக்க முடியும். நத்தை மியூசின் இயற்கையான ஈரப்பதமூட்டியாக செயல்பட்டு சரும ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை ஜொலிப்புடன் வைக்க உதவுகிறது. இது நீரிழப்பை தடுக்கிறது. சருமத்தை மீள் தன்மையுடன் மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.
சருமத்தை குணப்படுத்துகிறது
நத்தை மியூசின் சருமத்தை குணப்படுத்துகிறது. நத்தை மியூசினில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை காணப்படுகிறது. இவை சரும அழற்சியை போக்குகிறது. பருக்கள், வடுக்கள், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்கள் இவற்றை போக்க உதவுகிறது. சருமத்தை குணப்படுத்துகிறது. இது முகப்பரு பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்க கூடியது.
சுற்றுச்சூழல் காரணிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது
நம் சருமம் வயதாகுவதற்கு சுற்றுச்சூழல் காரணிகளும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்கள், சுற்றுச் சூழல் மாசுபாடுகள் மற்றும் ப்ரீ ரேடிக்கல் போன்ற பிரச்சினைகளால் சருமம் பாதிப்படைகிறது. எனவே இவற்றை தடுக்க நத்தை மியூசின் உதவுகிறது.
நத்தை மியூசினில் வைட்டமின் ஈ, ஹைலூரோனிக் அமிலம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இவை ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராடி உதவுகிறது. இதன் மூலம் முன் கூட்டியே வயதாகுவதை தடுக்க முடியும்.
தோல் நிறத்தை சீராக்க உதவுகிறது
தோல் நிறத்தை சீராக்குவதில் நத்தை மியூசின் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது ஈரப்பதத்தை குறைத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. தோலின் மீதுள்ள இறந்த செல்களை நீக்கி அழுக்குகளை நீக்கி சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. தோலின் நிறத்தை எல்லாப் பகுதிகளிலும் சீராக்க உதவுகிறது.
சரும எரிச்சலை போக்குகிறது
நத்தை மியூசினில் எரிச்சலை தணிக்கும் அலன்டோயின் உள்ளது. எனவே இதன் மூலம் ரோசாசியா, எக்ஸிமா மற்றும் சொரியாஸிஸ் போன்ற சரும நோய்களை சரி செய்ய முடியும்.



Click it and Unblock the Notifications

