Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
பியர்டு பாம் Vs பியர்டு ஆயில் - இவற்றில் எது ஆண்களின் தாடிக்கு சிறந்தது?
Beard Balm Vs. Beard Oil: இன்றைய ஆண்களுக்கு கேஜிஎஃப் ஸ்டைலில் தாடி வைக்க வேண்டும் என்பது எல்லா ஆண்களின் ஆசையாக இருந்து வருகிறது. இதற்காக அவர்கள் நிறைய மெனக்கெடல்களையும் செய்வது உண்டு.
ஆண்கள் தங்கள் தாடியை வளர்ப்பதற்காகவே இப்பொழுது எல்லாம் மார்க்கெட்களில் நிறைய பொருட்கள் கிடைக்கின்றன. பியர்டு ஆயில் முதல் பியர்டு தைலம் வரை மார்க்கெட்களில் நிறைய பொருட்கள் கிடைக்கின்றன. இந்த பியர்டு தைலம் மற்றும் பியர்டு ஆயில் இவற்றில் எது சிறந்தது என்ற குழப்பம் இருக்கும்.

இந்த இரண்டுகளிலும் என்னென்ன பொருட்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா? இந்த இரண்டுக்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது, அவற்றில் எந்த தாடிக்கு எது சிறந்தது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்வோம்.
பியர்டு ஆயில் என்றால் என்ன?
பியர்டு ஆயில் ஆண்களின் தாடியை சீர்படுத்த உதவுகிறது. இது ஆண்களின் தாடிக்கு உள்ளிருந்து ஊட்டமளிக்க உதவுகிறது. இதில் கண்டிஷனிங் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் போன்றவை சேர்க்கப்பட்டு உள்ளன. இது ஒருவருக்கு ஆரோக்கியமான முடி வளர்ச்சியையும், தாடிக்கு ஏற்ற ஈரப்பதத்தையும் வழங்குகிறது.
இந்த பியர்டு ஆயிலில் ஆர்கான் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் மற்றும் ஷியா எண்ணெய் போன்றவை சேர்க்கப்பட்டு உள்ளன. நல்ல தரமான தாடி எண்ணெயை நீங்கள் வாங்கி பயன்படுத்தும் போது நல்ல பயனை பெறுவீர்கள்.
இந்த பியர்டு ஆயிலில் இனிமையான வாசனையை பெற அத்தியாவசிய எண்ணெய்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தாடியில் ஏற்படும் அரிப்பை குறைக்கவும், தாடிக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.
பியர்டு பாம் என்றால் என்ன?
உங்கள் தாடி கட்டுக்கடங்காத தாடி வகை என்றால் அதற்கு பியர்டு பாம் மிகவும் சிறந்தது. பியர்டு தைலம் எல்லா பொருட்களிலும் அடங்கிய ஒரு தயாரிப்பு ஆகும். இது சிறந்த கண்டிஷனர், மாய்ஸ்சரைசர், ஸ்டைலிங் பொருளாகவும் செயல்படுகிறது.
இது உங்கள் கட்டுக்கடங்காத தாடியை அடக்கி தாடிக்கு ஊட்டச்சத்துக்கள் அளித்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இந்த பியர்டு தைலங்களில் ஷியா வெண்ணெய், தேன் மெழுகு, ஆர்கான் மற்றும் ஜோஜோபா எண்ணெய் போன்ற இயற்கை பொருட்கள் இதில் கலந்துள்ளன.
பியர்டு ஆயிலுக்கும் பியர்டு தைலத்திற்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் நோக்கம் என்ன என்பதை அறியுங்கள்
பியர்டு ஆயில் உங்கள் தாடி மற்றும் தோலை ஈரப்பதமாக்குவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், சீரமைப்பதற்கும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் பயன்படுகிறது. பியர்டு தைலம் என்பது உங்கள் கட்டுக்கடங்காத தாடி முடியை ஸ்டைல் செய்வதற்கும், அதை அடக்கி சீரமைக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் பொருட்கள்
பியர்டு ஆயிலில் அத்தியாவசிய எண்ணெய்கள், ஷியா வெண்ணெய், கேரியர் எண்ணெய்கள் சேர்க்கப்படுகிறது. இதுவே பியர்டு தைலத்தில் கேரியர் எண்ணெய்கள், அத்தியாவசிய எண்ணெய்கள், தேன் மெழுகு, லானோலின் போன்றவை காணப்படுகிறது. பியர்டு ஆயிலில் உள்ள பொருட்கள் தடினமான திரவ நிலைத்தன்மையை கொடுக்கின்றன. இதுவே பியர்டு தைலம் மெழுகு போன்ற நிலைத்தன்மையை தருகின்றன.
விளைவுகள்
பியர்டு ஆயில் உங்களுக்கு அரிப்பு மற்றும் உராய்வை குறைக்கிறது. அதனால் சில ஆண்கள் ஷேவிங் க்ரீம் மற்றும் ஜெல்லுக்கு பதிலாக இதை பயன்படுத்துகிறார்கள். பியர்டு தைலம் இயற்கையாகவே தாடியில் ஈரப்பதத்தை மீட்டெடுக்கிறது. தாடியை புதிதாகவும், சுத்தமாகவும் எப்பொழுதும் வாசனை உடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
எப்பொழுது எதை பயன்படுத்த வேண்டும்?
பியர்டு ஆயிலை நீங்கள் தாடியை ஷேவ் செய்திருந்தாலும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் சரும நுண் குமிழ்கள் வழியாக ஊடுருவி ஈரப்பதம் மற்றும் சருமத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது. பியர்டு தைலம் என்பது தாடியை ஸ்டைலிங் செய்வதற்கும் ஊட்டச்சத்து அளிக்கவும் உதவுகிறது. எனவே உங்கள் தாடி நன்றாக வளர்ந்த பிறகு அதை அழகாக ஸ்டைலிங் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் பியர்டு தைலத்தை பயன்படுத்துங்கள்.
பியர்டு ஆயில் மற்றும் பியர்டு தைலத்தின் பயன்கள்
பியர்டு ஆயில் புதியதாக தாடி வளர்ப்பவருக்கும், அரிப்பை சரி செய்யவும் உதவுகிறது. பியர்டு ஆயில் உங்களுக்கு பளபளப்பான தோற்றத்தை அளிக்கும். இதுவே பியர்டு தைலம் உங்கள் தாடியை கட்டுப்படுத்தி இறுதியில் ஒரு மேட் ஃபினிஷை கொடுத்து ஸ்டைலாக்கும்.



Click it and Unblock the Notifications