உங்கள் சருமம் பளபளக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!!

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

நமது சருமத்தை இளமையாக வைத்திருப்பதில் உணவுகளும் முக்கிய பங்குகளை கொண்டுள்ளன. அவை தரும் போஷாக்கினால் சருமம் பொலிவு பெறும். சில வகை உணவுகள் சரும பாதிப்புகளை போக்கி பளபளப்பாக வைத்திருக்கும் விசேஷ குணங்கள் உண்டு.

அப்படி உங்களை இளமையாக வைத்திருக்க உதவும் விசேஷ குணங்கள் பெற்றுள்ள உணவுகளைப் பற்றி காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்:

தயிர்:

தயிர் ருசியானது மட்டுமின்றி அதில் அதிக அளவு புரதச்சத்து,கால்சியம்,விட்டமின்கள் மற்றும் ப்ரோபயாடிக் நிறைந்தவை.தயிர் சாப்பிடுவதால் ஒரு சந்தேகமும் இன்றி பல நன்மைகளை அளிக்கிறது.

அது மட்டுமின்றி தோலின் வெளிப்புறத்திற்கும் நன்மையைத் தருகிறது.வலி மற்றும் தடிப்புகள் காரணமாக ஏற்படும் வீக்கத்தையும் சரி செய்கிறது.ஏனெனில் தயிரில் ஜிங்க்(துத்தநாகம்) அதிகம் உள்ளது.இது ஒரு அலர்ஜி-நீக்கியாக செயல்படுகிறது.

தயிர் செல் இனப்பெருக்கம் மற்றும் திசுக்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்கு அவசியம்.தயிரில் கால்சியம் அதிகம் இருப்பதால் இவற்றில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் தோல் வறட்சி அடையாமல் இருக்கவும்,வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

தயிரில் வைட்டமின் பி அதிகம் இருப்பதால் இவை தோல் ஒளிருவதற்கும் மற்றும் தோல் வறட்சி ஏற்படாமல் ஈரத் தன்மையுடன் இருப்பதற்கும் உதவுகிறது.இது தோலின் நச்சு தன்மையை நீக்க உதவுகிறது.

மாதுளை:

மாதுளை:

மாதுளையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மற்றும் வயதானாலும் தோல்களில் ஏற்படும் மாற்றங்களை மாற்றும் தன்மையும் உள்ளது.மாதுளை தோலின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் புத்துணர்ச்சியைத் தூண்டுகிறது.மாதுளைச் சாறு சூரிய ஒளியின் காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்பையும் வயதின் காரணமாக தோலில் ஏற்படும் பாதிப்பையும் சரி செய்ய உதவுகிறது.

மாதுளை விதையில் இருந்து பெறப்படும் எண்ணெய் தோலின் சுருக்கங்களை குறைக்கவும்/வராமல் தடுக்கவும் உதவுகிறது.இந்த பழம் தோல் சேதம் அடையாமல் இருக்கவும்,தோல் மென்மையாக இருக்கவும்,தோல் இளமையாக இருக்கவும் உதவுகிறது.

வால்நட்ஸ்:

வால்நட்ஸ்:

உணவு வேளைகளைத் தவிர்த்து மற்ற வேளைகளில் பசித்தால் நொறுக்கு தீனிகளை தவிர்த்து வால்நட்ஸ் எடுக்கலாம்.இது பல அழகு ரகசியங்களை உள்ளடக்கியது.இவற்றில் ஒமேகா-3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளது.இவை தோலிற்கு ஈரப்பதத்தையும்,ஊட்டச்சத்துக்களையும் தருகிறது மற்றும் தோலை பளபளப்பாகவும் மாற்றுகிறது.

வால்நட்ஸ்-ல் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களின் UV கதிர்கள் தோலை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது.வால்நட்ஸ்-ல் வைட்டமின் இ இருப்பதால் தோலை மென்மையாகவும்,பளபளப்பாகவும் மாற்றுகிறது.

பல வண்ண குடைமிளகாய்:

பல வண்ண குடைமிளகாய்:

குடைமிளகாயில் உள்ள அதிக ஆண்டி-ஆக்ஸிடென்ட்கள் வயதின் காரணமாக ஏற்படும் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவுகிறது.ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் தோல்களுக்கு எந்த வித சேதத்தையும் உருவாக்காமல்,தோல்களை அழகாகவும்,மிருதுவாகவும் மாற்றுகிறது.

துளசி:

துளசி:

வழக்கமான காய்ச்சலில் இருந்து ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்று ஆகிய அனைத்திற்கும் மிகவும் எளிதாக குணமாக்க துளசி உதவுகிறது.இதுமட்டுமின்றி துளசி பல்வேறு நோய்களை எளிதாக குணமாக்கும்.துளசி பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது.

இதில் ஒன்று துளசி தோல்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.துளசி நச்சுக்களை நீக்கி,சுத்திகரித்து,பரிசுத்தப்படுத்தும்.தினமும் 4-5 துளசி இலைகளை சாப்பிடுவதால் மன அழுத்தம் நீங்குதல்,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல்,செரிமானத்தை தூண்டுதல் மற்றும் தோலின் பளபளப்பையும் அதிகரிக்கிறது.

சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி விதைகள்:

சூரிய காந்தி விதையில் வைட்டமின் இ அதிகம் இருக்கிறது.இதனால் இது தோலில் உள்ள செல்களில் நச்சு தன்மையை நீக்கி தோலின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.இந்த விதையை தினமும் எடுப்பதால் தோல் பளபளப்பாக வைக்கிறது மற்றும் புற ஊதாக் கதிர்களில் இருந்து தோலை பாதுகாத்து,தோலை இளமையாகவும்,அழகாகவும் வைக்கிறது.சூரிய காந்தி விதையில் உள்ள காப்பர் மெலனினை உற்பத்தி செய்து சருமத்தின் நிறத்தை அதிகரிக்கிறது.

சூரிய காந்தி விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோலில் ஏற்படும் சுருக்கங்கள்,வடுக்கள் மற்றும் கோடுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.சூரிய காந்தி விதையில் உள்ள கொழுப்பு அமிலங்களான பாமிட்டிக்,ஒலீயிக் மற்றும் லினோலிக் ஆகியவை தோலை மென்மையாக மாற்றுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 powerful foods for flawless skin

6 powerful foods for flawless skin
Story first published: Thursday, March 2, 2017, 19:01 [IST]
Subscribe Newsletter