For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முன்னாள் காதலன் / காதலியை மன்னிப்பதற்கான காரணங்கள்

By Super
|

நம்மில் பலரும் காதல் முறிவுகளை சந்தித்து இருந்திருப்போம். மிகவும் வலியை அனுபவிக்க வேண்டிய நிலையிலும் தள்ளப்பட்டிருப்போம். இவ்வளவு வலியை அனுபவித்த நமக்கு நம் முன்னாள் காதலன் அல்லது காதலியை மன்னிப்பதற்கு காரணம் இருக்குமா என்ன? இல்லாமல் இல்லை, அதன் பின்னணியில் மிக முக்கியமான காரணம் உள்ளது. உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை நீங்கள் மன்னித்து, கவலையை மறந்தாலே ஒழிய, உங்களால் அடுத்த காதலுக்கான தேடலில் திருப்தி அடையவே முடியாது. அவர்களை மன்னித்தால் மட்டுமே அந்த இரணத்தில் இருந்து நீங்கள் மீண்டு வரலாம்; அடுத்த காதலுக்கான பயணத்தை நோக்கி உங்களால் எட்டு வைக்க முடியும். அதனால் உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை மன்னிப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை மன்னித்து உணர்ச்சி ரீதியான உங்கள் மனபாரத்தை முதலில் இறக்கி வையுங்கள்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு!

சரி, மறுபடியும் முதல் கேள்விக்கே வருவோம். உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியை நீங்கள் ஏன் மன்னிக்க வேண்டும்? மன்னிக்கும் மனப்பான்மை தெய்வீகமானது; அது மிகவும் கஷ்டமானதும் கூட. இருப்பினும் முறிந்த போன உறவுக்காகவும், நீங்கள் அனுபவித்த வலிகளுக்காகவும் மற்றவர்களையும் குறை சொல்வது சுழலுக்குள் சிக்குவதை போலத்தான். செயல்கள், எதிர்வினைகள் மற்றும் இரு பக்கமும் தவறான தகவல் பரிமாறுதல்கள் - இவைகளின் கலவையே ஒரு உறவை முடிவுக்கு கொண்டு வரும். நீங்கள் சந்திக்கும் கசப்பு நிகழ்வுகளையே பிடித்துக் கொண்டிருந்தால் அப்புறம் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விடும். பழைய கதவு மூடிவிட்ட நிலையில், புதிய கதவு உங்களுக்காக என்ன வைத்திருக்கிறது என்ற அறிய வாய்ப்பை தெரிந்து கொள்ளாமலேயே போய் விடுவீர்கள்.

முதல் பார்வையில் காதல்: உண்மையா அல்லது பொய்யா?

ஓரளவிற்கான கோபம், மனக்கசப்பு, ஏமாற்றம் அல்லது குற்ற உணர்வு உள்ளே நுழையாமல் ஒரு திருமண பந்தத்தை அவ்வளவு எளிதில் முறித்து விட முடியாது. பொதுவாக விவாகரத்து ஆனவர்கள் புதிய துணையுடன் புதிய வாழ்க்கையை நாடி செல்கிறார்கள். ஆனால் விவாகரத்தான ஆணோ அல்லது பெண்ணோ தங்களது முன்னாள் வாழ்க்கை துணையை மன்னிப்பார்களா? துரதிஷ்டவசமாக, பெரும்பாலும் இல்லை. இதனால் அவர்களின் கோபமும் வலியும் அதிகரிக்கவே செய்யும். இதனால் அவர்களின் புதிய வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கும். அதனால் உங்கள் முன்னாள் துணையை மன்னிப்பதற்கான சில வழிகளை பார்ப்போம். வாழ்கையை முழுமையாக வாழ்ந்திடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொறுமையாக இருங்கள்

பொறுமையாக இருங்கள்

ஒரு உறவை முடிப்பது என்பது மரணத்தை அனுபவிப்பது போன்றது தான். அதனால் பொறுமையாக இருங்கள் கவலையை விட்டு வெளியே வருவதற்கு கால அவகாசம் கொடுங்கள். இவ்வகையான உணர்வுகள் அலையைப் போன்றது; ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இருப்பினும் அவை அப்படியே நீடித்து விடாது. பொறுமையாக இருப்பதால் எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் மற்றும் மன்னிக்கும் பண்பும் உங்களுக்கு வந்துவிடும். உங்கள் முன்னாள் துணையை மன்னிப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

ஆத்திரத்தை ஒத்தி வையுங்கள்

ஆத்திரத்தை ஒத்தி வையுங்கள்

உங்கள் முன்னாள் துணையின் மீது எந்தளவிற்கு ஆத்திரத்தை தேக்கி வைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களால் பழசை விட்டு வெளியே வர முடியாது. இதனால் புதிய வாழ்க்கையின் மீது கவனம் செலுத்த முடியாது. வழிபாடு அல்லது தியானம் போன்றவைகளில் ஈடுபட்டால் பழைய துணை மற்றும் அவருடன் இருந்த சூழ்நிலைகளை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கலாம். பின் உங்களை அழுத்திக் கொண்டிருந்த பழைய வாழ்க்கையின் சுமை குறையத் தொடங்கும். மற்றொரு எளிய ஆனால் சிறந்த வழி இது.

அனுபவத்தை எண்ணி நன்றியுடன் இருங்கள்

அனுபவத்தை எண்ணி நன்றியுடன் இருங்கள்

உங்களின் சுய முன்னோக்கை நீங்களே உணர்ந்து, நன்றியுடன் நடந்து கொண்டால், உங்கள் முன்னாள் துணையின் கண்ணோட்டத்தையும் நீங்கள் பரந்த மனதுடன் ஏற்றுக் கொள்வீர்கள். உங்களை ஒருவர் ஏன் காயப்படுத்தினார் என்பது புரியத் தொடங்கும். அதற்கு காரணம் அதே நிலையில் நீங்கள் உங்களை கற்பனை செய்து பார்த்தால், அது மற்றவருக்கு எப்படி காயத்தை ஏற்படுத்தும் என்பதை புரிய வைக்கும். உங்கள் முன்னாள் துணையை மன்னிப்பதற்கான நல்லதொரு காரணங்களில் இதுவும் ஒன்று.

உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்

உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்களுக்கு விவாகரத்தாக எந்த சூழ்நிலை காரணமாக இருந்தாலும் சரி, விவாகரத்து உங்கள் முடிவோ இல்லையோ, ஆனால் கடைசியில் நடப்பது விவாகரத்து. அதை மாற்ற முடியாது. ஆனால் உங்களால் ஒன்று முடியும்; உண்மை நிலையை ஏற்றுக் கொள்வது. எவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்கிறீர்களோ அவ்வளவு நல்லது உங்களுக்கு. உங்கள் முன்னாள் துணையை மன்னிப்பதற்கு இதுவும் ஒரு சிறந்த வழியே.

அலைவரிசையில் மாற்றம்

அலைவரிசையில் மாற்றம்

உங்கள் முன்னாள் துணையை மன்னிக்க முக்கியமாக என்ன வேண்டும் தெரியுமா? கதையில் மாற்றம். இதனால் உங்களை பாதிக்கப்பட்டவராக கருதி, மற்றவர்கள் மீது பழி கூறுவதை விட்டு உங்கள் கவனம் சிதறும்.

அனைத்தையும் உணருங்கள்

அனைத்தையும் உணருங்கள்

கோபம், பயம் மற்றும் சோகம் என அனைத்து உணர்ச்சிகளுக்கும் ஒவ்வொரு நேரமும் இடமும் உண்டு. அதனால் அவை அனைத்தையும் உணர்வதற்கு உங்களுக்கு நீங்களே அனுமதி அளியுங்கள்.

அறிவுரையை ஏற்பது தவறில்லை

அறிவுரையை ஏற்பது தவறில்லை

விவாகரத்து, மன்னிக்க வேண்டிய தருணம் போன்ற பெரிய மாற்றங்கள் நடக்கும் போது விலைமதிக்க முடியாதது என்ன தெரியுமா? நல்லதொரு ஆதரவு.

பழசை கௌரவப்படுத்துங்கள்

பழசை கௌரவப்படுத்துங்கள்

உங்கள் முன்னாள் துணையை மன்னிக்க இன்னொரு சிறந்த வழி ஒன்று உள்ளது - பழசை கௌரவப்படுத்துங்கள், பழி உணர்வை தூக்கி எறியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

உங்கள் முன்னாள் காதலன் / காதலியை மன்னிப்பதற்கான காரணங்கள்

Many of us have experienced heartbreaks. It is so painful, then, is there a reason why you should forgive your ex? Here is there. Take a look...
Desktop Bottom Promotion