Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
இந்த 4 ராசிக்காரங்ககிட்ட புலியிடம் இருக்கும் திறமையும், சக்தியும் இருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
சிலர் புலிகளைப் போல பதுங்கிப் பாய்பவர்களாக இருப்பார்கள். எந்த விஷயத்தையும் அவசரப்பட்டு செய்யாமல் திட்டமிட்டு பொறுமையாக சரியான நேரத்தில் துல்லியமாக செய்து முடிப்பார்கள். அவர்களின் திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட எதிர்நோக்கி வழிநடத்தும் திறன் ஆகியவை அவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்களிடம் இந்த புலியிடம் இருக்கும் சக்தி வாய்ந்த குணங்கள் இருக்கும். அவர்களின் உள்ளார்ந்த பண்புகள் மற்றும் திறமைகள் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடைவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களிடம் புலியிடம் இருக்கும் இந்த குணங்கள் இருக்குமென்று தெரிந்து கொல்லலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் தீவிரம், கவனம் மற்றும் திட்டமிடும் மனநிலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் அடுத்த நகர்வுகளை புரிந்துகொள்வதில் சிறந்து விளங்குகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் சிக்கலான திட்டங்களை உருவாக்குவதில் திறமையானவர்கள் மற்றும் எப்போதும் சவால்களை எதிர்பார்ப்பார்கள்.
அவர்களின் கூர்மையான உள்ளுணர்வு மற்றும் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் திறன் அவர்களை புலி போல மாற்றுகிறது. அவர்களின் மூலோபாய அணுகுமுறை பெரும்பாலும் அனைத்து விஷயங்களையும் கவனிப்பதையும், வாழ்க்கையின் நுணுக்கங்களைப் பற்றிய முழுமையான புரிதலையும் உள்ளடக்கியது.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசி, அவர்களின் ஒழுக்கம் மற்றும் நீண்டகால பார்வைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த பூமி ராசிக்காரர்கள் முறையான மற்றும் எதார்த்த நடைமுறையுடன் வாழ்க்கையை அணுகுகிறார்கள். மகர ராசிக்காரர்கள் புலி போல தெளிவான இலக்குகளை நிர்ணயிப்பதிலும், கட்டமைக்கப்பட்ட திட்டங்களை உருவாக்குவதிலும், அவற்றை திறமையாக செயல்படுத்துவதிலும் சிறந்து விளங்குகிறார்கள்.
நீண்ட கால பலன்களில் கவனம் செலுத்தி வளங்களை திறம்பட நிர்வகிக்கும் அவர்களின் திறன் அவர்களை திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்துவதில் வல்லுநர்களாக மாற்றுகிறது.
கன்னி
புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் பகுப்பாய்வு மனம் மற்றும் புலி போன்ற புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்கள். இந்த பூமி ராசி முழுமையான ஆராய்ச்சி மற்றும் கவனமாக பரிசீலிப்பதன் அடிப்படையில் உத்திகளை திட்டங்களை உருவாக்குவதில் சிறந்தவர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் வரக்கூடிய சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்வுகளை துல்லியமாக வடிவமைப்பதில் திறமையானவர்கள். அவர்களின் நுணுக்கமான அணுகுமுறை ஒரு திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்கு சிந்தித்து, பல்வேறு சூழல்களில் மிகவும் பயனுள்ள திட்டமிடும் நிபுணர்களாக மாற்றுகிறது.
மிதுனம்
கிரககளின் இளவரசரான புதனால் ஆட்சி செய்யப்படும் மிதுன ராசிக்காரர்கள், அவர்களின் தகவமைப்பு திறன், விரைவான சிந்தனை மற்றும் புலி போன்ற சுறுசுறுப்புக்கு பெயர் பெற்றவர்கள். இந்த காற்று ராசிக்காரர்கள் பல கண்ணோட்டங்களைக் காணும் மற்றும் கடினமாக உழைக்கும் திறன் காரணமாக திட்டம் வகுப்பதில் திறமையானவர்களாக இருக்கிறார்கள்.
மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமயோசிதமான திட்டங்களை வகுப்பதில் மிதுன ராசிக்காரர்கள் திறமையானவர்கள். அவர்களின் ஆர்வமும் தகவல் தொடர்புத் திறனும் தகவல்களைச் சேகரிக்கும் மற்றும் பயனுள்ள உத்திகளை உருவாக்கும் திறனை மேலும் மேம்படுத்துகின்றன.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
