Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
இந்த 4 மாதத்தில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை ஆட்சி செய்பவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?
ஜோதிடத்தின் படி, சில மாதங்களில் பிறந்த பெண்கள் அனைத்து விஷயங்களிலும் தீவிரமாக ஆதிக்கம் செலுத்தும் இயல்பான போக்கைக் கொண்டுள்ளனர், குறிப்பாக காதல் விவகாரங்களில் அவர்களின் கையே எப்போதும் ஓங்கியிருக்கும். இந்த ஆதிக்கம் செலுத்தும் பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள், மேலும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த தயங்கவும் மாட்டார்கள், பயப்படவும் மாட்டார்கள்.
தன்னம்பிக்கையுடனும், மனஉறுதியுடனும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையையும், காதலையும் வழிநடத்துகிறார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களில் ஒருவரை நீங்கள் விரும்பினால், வலுவான விருப்பமுள்ள, அதிகாரம் செலுத்தும் மற்றும் மன்னிப்பு கேட்காத ஒரு காதலியை சந்திக்கத் தயாராக இருங்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்த பெண்கள் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் தீவிர லட்சியமும், உந்துதலும் கொண்டவர்கள். உறவுகள் உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றிபெற வேண்டும் என்ற வலுவான ஆசை கொண்டவர்கள். ஆதிக்கம் செலுத்தும் காதலியாக, அவர்கள் வாழ்க்கை மட்டுமின்றி உங்களுடைய வாழ்க்கையிலும் அனைத்து முடிவுகளை அவர்களே எடுப்பார்கள், மேலும் நீங்கள் அவர்களுடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
அவர்களின் நடைமுறை மற்றும் பொறுப்பான தன்மை அவர்களை ஒரு முதலாளியாகக் காட்டக்கூடும், ஆனால் அதுவே அவர்களை மிகவும் நம்பகமானவர்களாகவும் மாற்றும். அவர்களின் இலக்குகள் மற்றும் லட்சியங்களை ஆதரிக்கத் தயாராக இருங்கள், அவர்கள் உங்களுக்கு விசுவாசத்தையும், அர்ப்பணிப்பையும் வெகுமதியாகஅளிப்பார்கள்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் இயல்பிலேயே தலைமைத்துவமும், அதிகாரம் செலுத்தும் போக்கும் கொண்டவர்கள். அவர்களின் ஆதிக்க குணம் அவர்களின் உறவுகளிலும் வெளிப்படையாகத் தெரியும். அவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள், ஆர்வமுள்ளவர்கள், எப்போதும் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.
அவர்கள் காதலிப்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுப்பேற்று, தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேச பயப்படாத ஒரு நேர்மையான துணையை எதிர்பார்க்கலாம். அவர்களின் மனஉறுதியும், அதிகாரம் செலுத்தும் போக்கும் தொடக்கத்தில் அச்சுறுத்தலாக இருக்கலாம், ஆனால் அதுவே அவராய்மிகவும் கவர்ச்சிகரமானவராக மாற்றுகிறது.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே பிறந்த மகாராணி போன்ற ஆளுமை கொண்டவர்கள், அவர்கள் அனைவரும் தங்களை ராணி போலவே நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சிகரமான ஆளுமையால், அவர்கள் எந்த உறவிலும் எளிதாக அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள்.
அவர்கள் உரையாடலில் ஆதிக்கம் செலுத்துவார்கள், வெளியே செல்வதை அவர்களே திட்டமிடுவார்கள், மேலும் நீங்கள் அவரது வழியைப் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் கவலைப்பட வேண்டாம், அவர் உங்களுக்கு அன்பு, கவனம் மற்றும் நேர்மையை பரிசாகக் கொடுப்பார்கள். அவர்கள் விரும்பும் கவனத்தையும், பாராட்டையும் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கொடுக்க தயாராக இருங்கள்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அவர்களின் தீவிரம் மற்றும் பேரார்வத்திற்கு பெயர் பெற்றவர்கள், இது சில சமயங்களில் எல்லைக் கடந்ததாக இருக்கலாம். ஒரு ஆதிக்கம் செலுத்தும் காதலியாக/மனைவியாக , அவர்கள் உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராய்வார்கள், அவர்கள் தங்கள் காதலரிடமிருந்து முழுமையான நேர்மை மற்றும் விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள்.
அவர்களின் பிடிவாதமும், அதிகாரமும் உறவுகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம், ஆனால் அதுவே அவராய் மிகவும் விசுவாசமான நபராக மாற்றுகிறது. அவர்கள் ஒருபோதும் தங்கள் துணையை விட்டுச்செல்லவும் மாட்டார்கள், விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
