Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 4 ராசி பெண்கள் மருமகளை மகளாக பார்க்கும் அதிசய மாமியாராக இருப்பார்களாம்... உங்க மாமியார் ராசி என்ன?
அனைத்து பெண்களுக்கும் அவர்கள் வாழ்க்கையில் இருக்கும் மிகப்பெரிய கவலையே அவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதுதான். காதல் திருமணமானமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி அவர்கள் வாழப்போகும் வீடு எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பும், ஒருவித பயமும் நிச்சயம் அனைத்து பெண்களின் மனதிலும் இருக்கும்.
ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை அவர்களின் கணவரைப் பொறுத்து மட்டும் அமைவதில்லை, அவர்களின் மாமியாரைப் பொறுத்தும்தான் அமைகிறது. உலகில் நல்ல மாமியார் என்று யாருமே இல்லை என்று பொதுவாக கூறுவார்கள். மாமியார்-மருமகள் உறவு என்பது எப்போதுமே எலி-பூனை போல என்றுதான் கூறுவார்கள்.

விதிவிலக்காக சில ராசிகளில் பிறந்த பெண்கள் தங்கள் மகன்-மருமகள் நல்வாழ்வில் அக்கறை செலுத்தும் நல்ல மாமியாராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டிற்க்கு வாழ வரும் பெண்ணை தன்னுடைய மகளாகக் கருதி அவர்களின் மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசி பெண்கள் சிறந்த மாமியாராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசியில் பிறந்த பெண்கள் விருந்தோம்பல், அக்கறை மற்றும் உணர்ச்சிபூர்வமான அரவணைப்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் எப்போதும் தங்கள் மகனையும், அவர்களின் துணையையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைவார்கள், அவர்கள் எப்போதும் தங்கள் ஆலோசனை மற்றும் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
கடக ராசி பெண்கள் தங்கள் மகன்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் அல்லது வருங்கால மனைவிகளுக்கு ஆறுதலான சூழலை உருவாக்க முயலுகிறார்கள். அவர்களின் மனம் புண்படாதபடி தங்களின் அறிவுரைகளை கூறுவார்கள் மற்றும் அவர்களின் மதிப்புமிக்க கருத்துக்களை ஈகோ இல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசி பெண்கள் பொதுவாக புத்திசாலியாகவும், மனஉறுதியுடனும் இருப்பார்கள், அவர்கள் மாமியாராகும் போது இந்த குணங்களுடன் பொறுமையும் சேர்ந்து கொள்கிறது. அவர்கள் தங்கள் மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருபோதும் தலையிட மாட்டார்கள், ஆனால் கடினமான காலங்களில் எப்போதும் தங்களின் அன்பையும், ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பார்கள். நம்பகமான மற்றும் நிலையான, ரிஷப ராசி பெண்கள் சிறந்த அன்பான மாமியாராக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி பெண்கள் அனைத்து விஷயத்திலும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள், அதனால்தான் அவர்கள் மாமியாராகவும் பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் மீது எல்லையற்ற அன்பும், அக்கறையும் கொண்டுள்ளனர், அதில் அவர்களின் மருமகளும் அடங்குவர்.
அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும், தேவையான ஆதரவை வழங்கவும் அவர்கள் எப்போதும் தயாராகவும் இருப்பார்கள். ஒரு கன்னி தனது மருமகளுக்கு மதிப்புமிக்க திறன்களைக் கற்றுக்கொடுப்பார், மேலும் இணக்கமான வீட்டுச் சூழலை வளர்க்க உதவுவார்.
தனுசு
தனுசு ராசி பெண்கள் சுதந்திரமான மனநிலையுடனும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். அவர்கள் எப்போதும் புதிய சாகசங்களை விரும்புவார்கள், மேலும் தங்கள் மகனின் துணையை குடும்பத்தில் அன்புடன் வரவேற்பார்கள். அவர்கள் தங்கள் மருமகளின் சுதந்திரத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த மாட்டார்கள், மேலும் அவரது முயற்சிகளை உற்சாகமாக ஆதரிப்பார்கள். தங்கள் மருமகளுடன் தோழி போல பழகும் மாமியாராக அவர்கள் இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












