Latest Updates
-
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்..
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்களை காதலிப்பது சொந்த காசில் சூனியம் வைச்சுக்குற மாதிரியாம்... இந்த தப்பை பண்ணாதீங்க!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்கள். அதன்படி சில ராசிக்காரர்கள் உறவுகளில் மிகவும் சவாலானவர்களாக இருக்கலாம். அவர்கள் உங்களின் திறமைக்கு சோதனையை ஏற்படுத்தலாம். உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றை சோதிக்கலாம்.
இந்த ராசிகளில் பிறந்த ஒருவரை நீங்கள் காதலித்தால் உங்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் தேவைப்படும். அவர்களின் கணிக்க முடியாத இயல்பு, வலுவான ஆதிக்க உணர்வு மற்றும் உணர்ச்சித் தீவிரம் ஆகியவை உங்களுக்கு தினமும் சோதனையை ஏற்படுத்தலாம். இது அவர்களை காதலிப்பதை மிகவும் கடினமானதாக மாற்றுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களை காதலிப்பது மிகவும் கடினமானது என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் அவர்களின் தைரியமான மற்றும் சாகச இயல்புக்காக பிரபலமானவர்கள், இது உற்சாகமாக இருக்கும் அதே நேரத்தில் சவாலாகவும் இருக்கும். அவர்களின் மனக்கிளர்ச்சியான முடிவுகளும், உரையாடல்களில் ஆதிக்கம் செலுத்தும் போக்கும் அவர்களை காதலிப்பவர்களை துன்புறுத்தும்.
மேஷம் ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட நலன்களில் அதிக அக்கறைக் கொண்டவர்கள்மற்றும் காதலில் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை காதலிப்பவர்களுக்கு தினம் தினம் சவால்களை ஏற்படுத்தும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறன் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் அமைதியற்ற தன்மை அவர்களைப் பின்தொடர்வதை எதிரில் இருப்பவர்களுக்கு மிகவும் கடினமாக்கும்.
அவர்கள் மற்றவர்களுக்கு மிகவும் குறைவான கவனத்தைக் கொடுக்கிறார்கள் மற்றும் எளிதில் சலிப்படைவார்கள், இது உரையாடல்களில் சுவாரஸ்யமின்மைக்கு வழிவகுக்கும். அவர்களுக்கு அறிவுசார் தூண்டுதல் தேவை மற்றும் எளிதில் மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகலாம். இது அவர்களுக்கு எதிரில் இருப்பவர்களுக்கு மோசமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதிக உணர்திறன் கொண்டவர்கள் மற்றும் வலுவான உள்ளுணர்வு கொண்டவர்கள். இருப்பினும், அவர்களின் மனநிலை மாற்றங்கள் மற்றும் வெறுப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் போக்கு ஆகியவை அவர்களின் காதலர்களுக்கு சவால்களை ஏற்படுத்தலாம்.
கடக ராசிக்காரர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவை மற்றும் அவர்களின் எப்போதும் ஒட்டிக்கொள்ளும் போக்கு எதிரில் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். எனவே அவர்களை காதலிப்பவர்கள் அவர்களுக்கு எப்போதும் குறைவிலா அன்பை வழங்க தயாராக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான உணர்ச்சிக் கொண்டவர்கள், எந்தவொரு விஷயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து பார்க்கும் அவர்களின் விருப்பம் சிலசமயங்களில் எதிரில் இருப்பவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தலாம். அவர்களின் பொஸசிவ் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் போக்கு உறவுகளில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்போதும் தங்கள் துணையிடமிருந்து உறுதிமொழி தேவை மற்றும் அவர்கள் எளிதில் பொறாமைக்கு ஆளாகலாம். அவர்களை காதலிப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் நேர்மையாகவும், துரோகம் செய்யும் எண்ணம் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

