Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இந்த 4 ராசிகளில் பிறந்த குழந்தைகள் அதிபுத்திசாலியாக இருப்பார்களாம்...எதிர்காலத்தில் பெரிய சாதனையாளரா வருவாங்க!
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஒவ்வொருவரின் சிந்திக்கும்-புரிந்துகொள்ளும் திறன் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டது. சிலர் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிப்பவராக இருப்பார்கள், அதேசமயம் சிலர் அதற்கு பதிலளிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், இன்னும் சிலரோ கடைசிவரை பதிலே சொல்லாமல் இருப்பார்கள், இவை அனைத்தும் அவர்களின் புத்திக்கூர்மை மற்றும் சிந்திக்கும் திறனைப் பொறுத்தது.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் தாக்கம் நமது ஆளுமையை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதன்படி சில ராசிகளில் பிறந்த குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள் மற்றும் படிப்பில் அவர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசி குழந்தைகள் பிறவியிலேயே புத்திசாலிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த ராசி குழந்தைகள் எப்போதும் கவனமாக இருப்பார்கள். அவர்கள் மனதில் எப்பொழுதும் புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்த ராசி குழந்தைகள் தங்கள் வாழ்க்கையில் நேர்மறையான விஷயங்களுடன் முன்னேறுகிறார்கள். அவர்களுக்கு நல்ல தலைமைத்துவ திறன் உள்ளது.
அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகளாக வருவார்கள், இதன் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார்கள். மேஷ ராசி குழந்தைகள் எப்போதும் தங்கள் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்திருப்பார்கள்.
மிதுனம்
இந்த ராசியின் அதிபதி புதன். புதன் ஞானம் மற்றும் அறிவின் கிரகமாக கருதப்படுகிறது. மிதுன ராசி குழந்தைகள் புதனின் ஆதிக்கத்தால் மிகவும் புத்திசாலியாகவும் மற்றும் திறமையானவர்களாகவும் வருவார்கள். அவர்களின் கூர்மையான அறிவுத்திறன் காரணமாக, அவர்கள் வாசிப்பதிலும் எழுதுவதிலும் சிறந்து விளங்குவார்கள்.
இவர்களது ஆர்வம் காரணமாக எதிர்காலத்தில் கல்வித் துறையில் பெரிய வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தவொரு வேலையையும் தங்களின் புத்திசாலித்தனத்தால் சரியாகச் செய்யும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியை ஆளும் கிரகமும் புதன்தான். புதன் கிரகத்தின் தாக்கத்தால், இந்த ராசி குழந்தைகள் மிகவும் பிரகாசமானவர்களாகவும், புத்திசாலியாகவும், படிக்கக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். அனைத்து விஷயத்தையும் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்வதில் அவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அனைத்து துறைகளிலும் அவர்களுக்கும் அதீத ஆர்வம் உள்ளது.
இந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்த ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய யோசிப்பார்கள். அனைத்து துறைகளிலும் வெற்றிபெறும் தைரியம் இவர்களுக்கு உண்டு.
விருச்சிகம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த ராசியின் அதிபதி செவ்வாய். விருச்சிக ராசி குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தெளிவான எண்ணம் கொண்டவர்கள், அவர்கள் எல்லாவற்றையும் உயர்ந்த சிந்தனையுடன் செய்வார்கள். இந்த ராசி குழந்தைகள் சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், அதன் விளைவாக அவர்களும் கடினமாக உழைக்கிறார்கள்.
அவர்களின் வாழ்க்கையில் அனைத்து வித இன்பங்களும் நிறைந்திருக்கும். விருச்சிக ராசிக்காரர்களும் படிப்பில் சிறந்தவர்கள். தொழில் கணிப்பின்படி, அவர்களின் நினைவாற்றல் சக்தி வாய்ந்ததாக இருக்கும், மேலும் அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் எதிர்காலத்தால் அவர்களின் துறையில் வெற்றி பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

