Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Weekly Numerology: இந்த வாரம் இந்த 7 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் குவியப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 28 ஜூலை 2024 முதல் 03 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். எளிதில் முடிக்கும் காரியங்கள் கூட தடைகளை சந்திக்க நேரிடும். நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பணத்தின் அடிப்படையில் சிறப்பாக இருக்காது. மோசமான உடல்நலம் உங்கள் வேலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. தேவைக்கு அதிகமாக செலவுகளை சந்திக்கலாம். பழைய கடனையும் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிதி நிலையில் படிப்படியான முன்னேற்றத்தை காண்பார்கள். ஆனால் அதிக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் வணிக விரிவாக்கத் திட்டங்கள் தொடரலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கலாம். காதல் வாழ்க்கையில் அழகான திருப்பம் ஏற்படும். காதலித்து வந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலையும் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வானிலை மாற்றம் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நன்றாக இருக்கும். முக்கியமாக பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தொழிலதிபர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும், நிதி ஆதாயம் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிறப்பாக உணர்வீர்கள்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எவ்வளவு கவனமாக உங்கள் முடிவை எடுக்கிறீர்களோ, அவ்வளவு சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். மனதில் ஏதேனும் குழப்பம் இருந்தால், உங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பேசுங்கள். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். பண விஷயத்தில் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சிக்கிய பணத்தைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த வாரம் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். யோசிக்காமல் செலவு செய்தால் கடன் சுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். உடல் நலத்தில் கொஞ்சம் கூட அலட்சியம் வேண்டாம். மன அழுத்தம் மற்றும் பதட்டம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிதி விஷயங்களில் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். முதலீடுகள் போன்றவற்றைச் செய்வதற்கு முன் கவனமாக சிந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். அதிக அழுத்தத்தை உணர்வீர்கள். எல்லா கவலைகளையும் மறந்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரத் தொடக்கம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும். சிலருக்கு நல்ல செய்திகள் தேடி வரலாம். பொருளாதார நிலையில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான ஏதேனும் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தால், உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அதீத நம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சங்கடங்களைச் சந்திக்க நேரிடும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கடந்த காலத்தில் செய்த எந்த முதலீட்டில் இருந்தும் நல்ல லாபத்தை பெறுவார்கள். பணியிடத்தில் விரும்பிய முடிவுகளைப் பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இது தவிர, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உறவுகளைப் பொறுத்தவரை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பேச்சில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். வார இறுதியில் வேலை தொடர்பான பயணங்கள் நல்ல வெற்றியைத் தரும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











