Weekly Numerology:இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகள்..,

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 16 June 2024 To 22 June 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 16 ஜூன் 2024 முதல் 22 ஜூன் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகயில் பிறந்தவர்கள் தங்கள் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவார்கள். மோசமான உடல்நலம் உங்கள் நடத்தையையும் பாதிக்கும். நீங்கள் மிகவும் எரிச்சலாக உணரலாம். இந்த வாரத்தில், நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பண விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். இந்த வாரம் உறவுகளில் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். பணியிடத்தில் உங்கள் சிறந்ததை வழங்க கடினமாக உழைக்க வேண்டும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். பெரிய அளவில் நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். இதனால் தாராளமாக செலவு செய்வீர்கள். இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சந்தையில் உங்கள் நிலை வலுவாக இருக்கும் மற்றும் பழைய முதலீட்டிலிருந்து எதிர்பார்த்த பலன்களைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். குடும்ப உறுப்பினரின் முரட்டுத்தனமான நடத்தை உங்களைத் தொந்தரவு செய்யலாம். உங்கள் நடத்தை கண்ணியமாக இருந்தால் நல்லது.வார இறுதியில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

எண் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் பேச்சு மற்றும் நடத்தையின் அடிப்படையில் நீங்கள் நல்ல வெற்றியைப் பெற முடியும். நிலுவையில் உள்ள சில வேலைகள் முடிவடையும். வாரத்தின் மத்தியில் குடும்பத்தில் இருந்து நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. அத்தகைய சூழ்நிலையில், வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக, இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கலாம். புதிதாக நிலம், வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க நினைத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள் எதிர்காலத்திற்கான சில புதிய திட்டங்களையும் நீங்கள் செய்யலாம்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் நீங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். வாரத்தின் நடுப்பகுதியில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலையை மாற்ற நினைத்தால் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வார இறுதியில் உங்கள் காதலியுடன் குறுகிய தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான கவலைகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. இருப்பினும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் பணியிடத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் எல்லா வேலைகளும் உங்கள் திட்டத்தின்படி முடிக்கப்படும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் உயரும் வாய்ப்பு அதிகம். சொத்து தொடர்பான சில நன்மைகளைப் பெறலாம். உறவுகளின் அடிப்படையில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். திருமணமாகாதவராக இருந்தால் உங்கள் விருப்பப்படி வாழ்க்கைத் துணையைப் பெறலாம். தனிமையில் இருந்தால் உங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்கலாம். இந்த வாரத்தில், உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். திருமணமாகாதவர்கள் புதிய காதலைப் பெறலாம். வேலை தொடர்பாக நீங்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் உங்கள் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைக்கும். வார இறுதியில் வேடிக்கை பார்க்க நண்ர்களுடன் வெளியே செல்ல வாய்ப்ப்பு கிடைக்கும். தொழிலதிபராக இருந்தால் சில உறுதியான முடிவுகளை எடுக்கலாம். உங்கள் முடிவுகள் சரியான பலன்களை வழங்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் பணம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்சனை இருந்தால், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். அன்பான தம்பதிகளுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பரஸ்பர புரிதல் மேம்படும், மேலும் உங்கள் உறவு தொடர்பான சில முக்கிய முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் வேலைகள் அனைத்தும் விரைவாக முடிவடையும், உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகள் மேம்படும். அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். குறிப்பாக உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு வலுவடையும். வீட்டில் சுப காரியங்கள் ஏற்பாடு செய்யப்படலாம். ஆனால் நிதி விஷயங்களில் மிகவும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வாரம் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, June 16, 2024, 8:00 [IST]
Desktop Bottom Promotion