Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த வாரமானது இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு மோசமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூன் 30 ஆம் தேதி முதல் 2024 ஜூலை 06 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலைகளில் வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். வசதிகள் பெருகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். மன ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். முழு நம்பிக்கையுடன் எந்த முடிவுகளையும் எடுப்பீர்கள். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்கு இடையே காதல் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இதுவரை ஏதேனும் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் கவனம் அனைத்தும் வேலையில் தான் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். திருமண வாழ்க்கையில் அதிக கவனத்தை செலுத்துவீர்கள். இதனால் தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். வேலையில் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருப்பது நல்லது. அதேப் போல் உறவுகளிலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், தம்பதிகளுக்கு இடையே தூரம் அதிகரித்துவிடும். இந்த வாரம் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு எவ்வளவு சிறப்பானவர் என்பதை உணரச் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை பளு அதிகமாக இருக்கும். அதே சமயம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பதற்றம் இருப்பதால், அதிகம் சிரமப்படுவீர்கள். இந்நிலையில் உங்கள் மீது கவனம் செலுத்த வாய்ப்பு கிடைக்காது. இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். தொடர்ந்து செலவுகள் அதிகரிப்பதால், நிதி நிலை மோசமாக இருக்கும். இப்படி நிதி நிலை மோசமாவதை கவனித்து, அதை சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், எதிர்காலத்தில் பிரச்சனைகளை அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்திருந்தால், அந்த பணம் கைக்கு வராமல் அவதிப்பட வைக்கும். இதனால் மிகுந்த மன கவலைக்கு ஆளாவீர்கள். மேலும் இந்த வாரத்தில் சில மோசமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். நேர்மறையுடன் எந்த வேலையையும் செய்தால், பிரச்சனைக்கு நல்ல தீர்வைக் காணலாம். ஆரோக்கிய பிரச்சனைகளால் உங்களின் பல வேலைகள் தடைபடும். ஆரோக்கிய விஷயத்தை சிறிதும் புறக்கணிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications