இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான வாரமாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 நவம்பர் 03 ஆம் தேதி முதல் 2024 நவம்பர் 09 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 03 November - 09 November 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திட்டங்கள் அனைத்தும் சரியான நேரத்தில முடிவடையும். வணிகர்கள் நல்ல லாபதைத தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வணிகம் தொடர்பாக நீண்ட அல்லது குறுகிய பயணங்களை மேற்கொள்ளலாம். வெளியூர் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. இந்த பயணம் இனிமையாகவும் லாபகரமாகவும் அமையும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருந்தாலும், எந்தவொரு திட்டத்திலும் பணத்தை முதலீடு செய்யும்போது, அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிஷ்டமானதாக இருக்கும். தோழியின் உதவியால் ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வேலையைப் பெறலாம். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் முக்கியமானதாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் மகிழ்ச்சியாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் இலக்கை அடைந்து வெற்றி பெறுவார்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று மோசமாக இருக்கும்.

இந்த வாரத்தின் துரதிரஷ்ட ராசிகள்...

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அவசரத்தைத் தவிர்த்து, உங்கள் எல்லா வேலைகளையும் மிகுந்த கவனத்துடனும் புரிதலுடனும் செய்ய வேண்டும். வாரத்தின் மத்தியில் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் அவசரமாக வேலைகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பருவகால மாற்றங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படலாம். கூட்டுதொழில் செய்பவர்கள், தங்கள் கூட்டாளரை கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மிகவம் கவனமாக இருக்க வேண்டும். உணர்ச்சிகள் காரணமாகவோ, புரிதல் இல்லாமலோ எந்த வேலையையும் செய்யக்கூடாது. இந்த வாரத்தில் எதிரிகள் மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்தாலும் வேலைகள் கெட்டுப்போகும். பணத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் மற்றும் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எந்தவொரு திட்டத்திலும் அல்லது வணிகத்திலும் பணத்தை முதலீடு செய்யும் போது அனுபவசாலிகளின் கருத்தைப் பெற வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 4, 2024, 11:42 [IST]
Desktop Bottom Promotion