Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
வார ராசிபலன் (21 September -27 September 2025)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 செப்டம்பர் 21 ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 27 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் திறமைகளை நிரூபிப்பீர்கள். நிதி நிலைமை மேம்படும். இந்த வாரத்தில் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பொறுமையும், கடின உழைப்பும் சோதிக்கப்படும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்தால், இரட்டிப்பு லாபத்தைப் பெறலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் அதிகமாக எதிர்ப்பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் புறக்கணிக்காதீர்கள். முக்கியமாக போதுமான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களின் வேலைகள் அனைத்தும் வேகமாக நடக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனைப் பாராட்டுவார்கள். நிதி நிலைமை மேம்படும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று பிரச்சனையால் சிரமப்பட நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் சற்று சவாலானதாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சற்று மோசமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் பேசும் போது தெளிவாக பேச வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இருப்பினும் அதற்கு உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரத்த அழுத்தம் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை சீராக இருக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நாள்பட்ட நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் திட்டங்கள் வெற்றி பெறும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு கூட்டாளர்களால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். காதல் உறவுகள் வலுவடையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இருப்பினும், காலநிலை மாற்றங்களால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அமைதியைப் பராமரிக்க வேண்டியது அவசியம். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தூக்கம் மற்றும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











