Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க அலுவலகத்தில் கவனமா இருக்கணும்..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 16 ஜூன் 2024 முதல் 22 ஜூன் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். உங்களின் முயற்சிகள் தோல்வியடையும். இருப்பினும் விரக்தியும் ஏமாற்றமும் அடையாமல் தொடர்ந்து கடினமாக உழைப்பதைக் கைவிடாதீர்கள். இப்படி கடின உழைப்பைப் போடும் போது பெரிய வெற்றியை நிச்சயம் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். வெளிநாடு அல்லது வெளியூர் பயணங்களை மேற்கொள்ளலாம். இந்த வாரத்தில் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், விரும்பிய வேலையைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறன் மூலம் பதவி உயர்வைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலை வெற்றிகரமாக முடிய சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த வாரத்தில் வெற்றியைப் பெற முடியாது. அதற்காக சோர்வடைய வேண்டாம். உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் வேலையைப் பற்றி கவலைப்பட தேவையில்ல. உங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலையும் கிடைக்கும். சிலருக்கு வேலையை மாற்றும் திட்டங்கள் மனதில் எழலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த வாரத்தில் முயற்சித்தால், நல்ல வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் குழப்பத்தை சந்திக்க நேரிடும். அதாவது, உங்களுக்கு பல நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் குழம்புவீர்கள். இந்த வாரம் உங்கள் தொழிலில் வெற்றி பெறுவதில் சில சந்தேகங்கள் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் நீங்கள் பெரிய வெற்றியைப் பெற முடியாது. ஏனெனில் இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இல்லை, ஆனால் வாரத்தின் பிற்பகுதியில், சமூகத்தில் ஒரு சிறப்பு நபருடன் தொடர்பு கொண்டு உங்கள் வேலையைச் சரிவர செய்யலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை, பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நன்றாக நடந்து கொள்ள வேண்டும். பேச்சில் கட்டுப்பாட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் உங்களின் வேலை கெட்டுப்போகும். ஆனால் வாரப் பிற்பகுதியில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், விரும்பிய வேலையைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் சிறப்பான நபருடன் தொடர்பு கொள்வதன் மூலம், நீங்கள் ஒரு சிறப்பு பதவியைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! உங்களுக்கு தொழிலில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், அதற்கு தீர்வு காண இந்த வாரம் அனுபவசாலிகளை சந்தித்து, அவரிடம் பேசுங்கள். இதனால் உங்கள் குழப்பங்கள் தீர்வதோடு, தொழிலில் நல்ல வெற்றியையும் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications