Latest Updates
-
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
ஒரு பிச்சைக்காரர் கூட இல்லாத உலகின் சந்தோஷமான நாடு - இந்த நாட்ல பிறக்க கொடுத்த வைச்சிருக்கணும் -
சிக்கன் ஷோலே கபாப் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
ராம்நாடு ஸ்டைல் மட்டன் குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
செப்டம்பர் 13, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (13 செப்டம்பர் 2026- 19 செப்டம்பர் 2026) - இந்த வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாருக்கு மறந்தும் இந்த பொருட்களை படைக்காதீங்க.. இல்ல அவர் கோபத்துக்கு ஆளாவீங்க!
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது..
Venus Transit In Virgo On 01 August 2026: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால், அந்நபரின் திருமண வாழ்க்கை, நிதி நிலை போன்றவை சிறப்பாக இருக்கும்.

இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் ஆகஸ்ட் 01 ஆம் தேதி கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் மற்றும் இந்த ராசியில் சுக்கிரன் செப்டம்பர் 01 ஆம் தேதி வரை இருப்பார்.
சுக்கிரனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கும். இப்போது ஆகஸ்ட் 01 ஆம் தேதி நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சில ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். பணியிடத்தில் மிகுந்த வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். தேவையற்ற செலவுகளை சந்திக்கக்கூடும். கடன் வாங்கும் போதும், பண பரிவர்த்தனைகளின் போதும் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் தாக்கம் மோசமானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முடிவையும் உணர்ச்சிவசப்படாமல், ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பணியிடத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். தேவையற்ற பயணங்களாலும் நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். காதல் மற்றும் திருமண வாழ்வில் தவறான புரிதல்களால் அன்புக்குரியவர்களுடனான உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது. பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயட்னபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் வாயே பல பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடும்.
மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்வில் பிரச்சனைகள் தலைத்தூக்கும். கூட்டு தொழில் செய்பவர்களும் கூட்டாளியுடன் பிரச்சனையை சந்திப்பார்கள். வியாபாரிகள் எந்த ஒரு அவசரமான நிதி முடிவுகளையும் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட உறவுகளில் தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பொறுமையையும், புரிலையும் கடைப்பிடிப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


