Latest Updates
-
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது..
1 வருடத்திற்கு பின் உருவாகியுள்ள நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், புகழும் அதிகரிக்கப்போகுது..
Neechbhang Rajyoga 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் கிரகங்களின் ராசி மாற்றங்களால் சில சுப யோகங்களும், ராஜயோகங்களும் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் சற்று சிறப்பானதாக இருக்கும்.
அந்த வகையில் கடந்த மாதத்தின் இறுதியில் சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்தார். கன்னி ராசிக்கு சுக்கிரன் சென்றதால் மிகவும் மங்களரமான யோகமான நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த நீச்சபங்க ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

அதாவது இந்த யோக காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. அனைத்து வேலைகளிலும் வெற்றிகள் கிடைக்கும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சுக்கிரனால் உருவாகியுள்ள நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
நீச்சபங்க ராஜயோகம் என்றால் என்ன?
ஜோதிடத்தின் படி, நீச்சபங்க ராஜயோகம் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வலிமையான ராஜயோகமாக கருதப்படுகிறது. இந்த யோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். எப்பேற்பட்ட சவாலான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். வெற்றிகள் குவியும். எப்போது ஜாதகத்தில் வலுவிழந்த கிரகம் தனது பலவீனமான நிலை முடிந்து வலிமையான கிரகமாக மாறும் நிலையில் இருந்தால், அது நீச்சபங் ராஜயோகம் போன்ற சக்திவாய்ந்த ராஜயோகத்தை ஏற்படுத்துகிறது.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். அன்பும், பாசமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். வருமானத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தைக் காணலாம். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள் மற்றும் அதை விரிவாக்கும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications