Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 25 நாட்கள் இந்த 6 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Venus Transit 2024 In Libra: வேத ஜோதிடத்தின் படி, அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும், அசுரர்களின் குருவாகவும் கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி, அதாவது இன்று தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த துலாம் ராசியில் சுக்கிரன் சுமார் 26 நாட்கள் பயணிக்கவுள்ளார். அதன் பின் அக்டோபர் 13 ஆம் தேதி செவ்வாயின் ராசியான விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

துலாம் ராசியில் நுழைந்துள்ள சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாகவும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும் இருக்கும். இப்போது துலாம் ராசிக்குள் நுழைந்துள்ள சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுவரை காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்தித்திருந்தால், இனிமேல் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வசதிகள் பெருகும். குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியானது அற்புதமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் நல்ல பலன்களைப பெறுவார்கள். மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி நன்மைகளும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். புதிய வாகனத்தையும் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தால், சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் ஓரளவு முன்னேற்றத்தை இக்காலத்தில் பெறுவார்கள். எடுக்கும் முயற்சிகளில் முடிவுகள் சாதகமாக இருக்கும். புதிய திட்டங்களும் வெற்றியடையும். நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். சில் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெறுவீர்கள். காதல் வார்க்கையும் சாதகமாக இருக்கும். காதலில் விழவும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கைத்துளையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வாழ்க்கைத் துணையிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலதிபகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம், வீடு வாங்க நினைத்தால், இந்த மாதம் சிறப்பானாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையிமுழு ஆதரவும் இருக்கும். தந்தையிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











