Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
மேஷ ராசியில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Venus Moon Conjunction In Aries On 20 June 2025: நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகம் சந்திரன். இந்த சந்திரன் ஒரு ராசியில் சுமார் 2 1/2 நாட்கள் இருப்பார். குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அடிக்கடி சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி சந்திரன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மேஷ ராசியில் ஏற்கனவே அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் மேஷ ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. கிரகங்களில் சுக்கிரன், சந்திரன் ஆகிய இரண்டும் மென்மையான கிரகங்களாகும். இவை ஒன்றிணையும் போது நேர்மறை ஆற்றலையும் நல்ல வாய்ப்புகளையும் கொண்டு வரும்.

இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள், திருமண வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் சமூக உறவுகளில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். அதோடு மன அழுத்தம் குறையும் மற்றும் முடிவுகளை எடுக்கும் திறன் மேம்படும். இப்போது சுக்கிர சந்திர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் சுக்கிர சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்வில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். வசீகரமும் தன்னம்பிக்கையும் உச்சத்தில் இருக்கும். காதல் உறவுகளில் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தலைமைத்துவ திறன்கள் அலுவலகத்தில் நல்ல பாராட்டைப் பெறும். சந்திரன் உங்கள் மனதை நிலையாக வைத்திருப்பார், மேலும் சுக்கிரன் உங்கள் ஆளுமைக்கு பிரகாசத்தை சேர்ப்பார். காதல் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இது உகந்த நேரம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர சந்திர சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல பலனைப் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் ஆளுமை சிறப்பாக இருக்கும். உறவுகள் மற்றும் வணிகத்தில் வெற்றியைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசுங்கள். தவறான புரிதல்களை உடனே பேசி தீர்க்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிர சந்திர சேர்க்கையால் நிதி நிலைமை வலுவாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் ஆதரவும் கிடைக்கும். வேலை அல்லது வணிகத்தில் எதிர்பாராத லாபங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்க நேரிடும். சுக்கிரன் உங்களின் சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துவார். மேலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிர சந்திர சேர்க்கையால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சுக்கிரன் உங்கள் சமூக மற்றும் காதல் வாழ்க்கையை மேம்படுத்துவார், சந்திரன் மன அமைதியைத் தருவார். இருப்பினும் இக்காலத்தில் அதிகப்படியான தன்னம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிர சந்திர சேர்க்கையால் திருமண வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கலை, எழுத்து அல்லது இசை போன்ற துறைகளில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நல்ல நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் முயற்சித்து வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், உணர்ச்சிவசப்பட்டு பெரிய செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications