Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
சுக்கிரன் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகம்: 2025 ஜனவரியில் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் யோகம் தேடி வரும்...
Venus Make Malavya Rajyog In January 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் கிரக நிலைகளால் பஞ்சமகா புருஷ ராஜயோகமும் உருவாகும். இந்த ராஜயோகமானது ஒருவருக்கு அனைத்துவிதமான சுகங்களையும் தரும்.
முக்கியமாக ஒருவரது ஜாதகத்தில் இந்த ராஜயோகம் இருந்தால், அது அந்நபரை பணக்காரராக்கும். இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பஞ்சமகா புருஷ யோகங்களுள் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகமானது அழகு, ஆடம்பரம், செல்வம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனால் உருவாகவுள்ளது.

அதுவும் ஜனவரியில் உருவாகும் இந்த ராஜயோகமானது சுக்கிரன் மீன ராசிக்கு செல்வதால் உருவாகிறது. இப்படி உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகமானது மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப்போகிறது. இப்போது 2025 ஜனவரியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
மாளவ்ய ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். புதிய வருமானத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். புதிய சொத்து அல்லது வாகனத்தை வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
தனுசு
மாளவ்ய ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, கைக்கு வந்து சேரும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் வெற்றிகள் குவியும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மாளவ்ய ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். சமூகத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், மதிப்பும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
