Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
12 மாதங்கள் கழித்து உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க கையில் பணம் குவியும்...
Kendra Trikona Rajyog 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் சக்தி வாய்ந்த ஒருவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். மேலும் இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் ஒரு ராசியில் 26 நாட்கள் வரை இருப்பார். இதனால் இவர் ஒரு ராசிக்கு மீண்டும் வர 12 மாதங்கள் வரை ஆகும்.
இப்படிப்பட்ட சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் வருகிற நவம்பர் மாதம் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் சுக்கிரன் நுழைவதால் ஏராளமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அவை மாளவ்ய ராஜயோகம், பராக்கிரம யோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் ஆகியவையாகும்.

வேத நாட்காட்டியின், சுக்கிரன் நவம்பர் 02 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்து, அந்த ராசியில் நவம்பர் 26 ஆம் தேதி வரை இருப்பார். ஜோதிடத்தின் படி, ஒருவரின் ஜாதகத்தில், 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளின் அதிபதியும், 1, 5, 9 ஆகிய திரிகோண வீடுகளின் அதிபதியும் இணைந்து பலம் பெறுவதன் மூலம் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகிறது.
இந்த யோகத்தால் சில ராசிக்காரர்கள் செல்வ செழிப்பையும், திடீர் நிதி நன்மைகளையும் பெறுவார்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் உயர் நிலையை அடைவார்கள் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள். அதோடு பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வையும் பெறுவார்கள். இப்போது சுக்கிரனால் உருவாகும் கேந்திரி திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்கள் இருமடங்கு நன்மைகளைப் பெறுவார்கள். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றியுடன், நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவடையும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களிடையேயான உறவு வலுவாக இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பைப் பெறுவார்கள். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
