Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் கேது-சுக்கிரனின் மகாசேர்க்கை: இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்..!
Venus Ketu Conjunction In Leo 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அதன் நிலைகளாலும், மாற்றங்களாலும், சேர்க்கையினாலும் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரகங்கள் அதன் நட்பு அல்லது எதிரி கிரகங்களுடன் அரிதாக பல ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து பயணிக்கும். அவ்வாறு பயணிக்கும் போது அதன் தாக்கம் இன்னும் மனித வாழ்க்கையில் ஆழமாக தெரியும்.
அந்த வகையில் கிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படும் கேது, சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

இந்த சேர்க்கையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் வருமானத்தில் நல்ல உயர்வையும், தொழிலில் சிறப்பான பலன்களையும் பெறுவார்கள். மன அமைதி கிடைத்து, மகிழ்ச்சி பெருகும். இப்போது சிம்ம ராசியில் ஒன்றிணையும் கேது சுக்கிர சேர்க்கையால் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த பத்தாம் வீடு தொழில், புகழ், அதிகாரம் ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தொழிலதிபர்களுக்கு இக்காலத்தில் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கலாம்.
பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். இக்காலத்தில் போடும் ஒவ்வொரு திட்டங்களும் வெற்றிகரமாக முடிவடையும். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். ஊடகங்கள், ஃபேஷன் டிசைனிங் மற்றும் கலை துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த வீடானது குடும்பம், பேச்சு, பணம், சொத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆளுமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
திடீரென்று பெரிய அளவில் பணத்தை பெறுவதோடு, கடன் பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும் வாய்ப்புள்ளது. மேலும் தொழிலதிபர்கள் இரட்டிப்பு லாபத்தை பெறுவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் கேது சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த வீடானது தாய், வீடு, நிலம், மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நண்பர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடனான உறவு வலுபெறும்.
கூட்டு வணிகம் செய்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. உறவினர்களுடனான உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, உறவு வலுவாக இருக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
